பொள்ளாச்சி சம்பவமாகட்டும், PSBB பள்ளிக்கூடத்துல நடந்த அத்துமீறல்களாகட்டும், இல்ல சுஷில் ஹரி பள்ளில நடந்த பாலியல் கொடுமைகளாகட்டும்….பாதிக்கப் பட்ட பெண்கள், எதுக்கும் எவனுக்கும் பயப்படாம குரல எழுப்பி இருந்தா, இந்த சம்பவங்களின் முடிவுகள் வேற மாதிரி அமைஞ்சிருக்க வாய்ப்புகள் இருக்கு.

ஆனா “அந்த பெண்கள் ஏன் கத்தி கூச்சல் போடல”, “ஒரு ஆண் அவளுக்கு தொல்லை தரும் போது, தன்ன பாதுகாத்துக்கொள்ள கத்தி ஊரகூட்டணும்னு என் தோணல?”

அவ வளரும் சமூகத்துல அவ பாக்கற பெரும்பாலான பெண்கள் அப்படி கூப்பாடு போடறது இல்ல. அவ சமூகமும், அவள ‘அடக்கமா இரு’, ‘தலை குணிஞ்சு நட”, ‘ரொம்ப சத்தமா பேசாத” னு கிடைக்கற தருணத்துல எல்லாம், அவள அடக்கியே வச்சிருக்கு. சினிமாக்களும், “ஒரு ஆணுக்கு பிடிச்சவளா இருக்க, நீ சாந்தமா இருக்கணும்”, “ராங்கி மாதிரி பேசினா, ஊர் உன்ன காரித் துப்பும்”னு அவளுக்கு advice மழைய எடுத்து விடுது. இதெல்லாம் மீறி, கொஞ்சமா தைரியத்த வரவச்சு அவ தட்டிக்கேட்க எத்தனிக்கும் போது, “இப்பிடி பேசினா, தாலி கட்ட ஒருத்தன் வரமாட்டான்”, “நாலு பேர் என்ன நினைப்பாங்க…உங்க அம்மா அப்பா மானம் காத்துல பறக்கும்…உனக்கு கவலையே இல்ல ல?” னு வழக்கமான மிரட்டல்கள எடுத்து விடுவாங்க.

அப்ப இந்த எடத்துல, அந்த பொண்ணு தைரியமா பேசவோ, செயல்படவோ…அவளுக்கு உறுதுணையா இருக்க வேண்டியது அவ பெற்றோர்கள் தான். “நாம ஒரு சமூகத்தின் அங்கம்” என்ற ஒரே காரணத்துக்காக, சமூகத்துல காலம் காலமா இருந்துட்டு வர பிற்போக்குத்தனமான நடைமுறைகள பின்பற்றணும்னு அவசியம் இல்ல. என்ன பொறுத்த மட்டும், குழந்தைகள் தேவைய அறிஞ்சு, அது சரியா தவறானு ஆராய்ஞ்சு, அத செயல் படுத்த உதவுவது தான் பெற்றோர்களின் கடமை. ‘நலன் விரும்பி’ போர்வைல அறிவுரை யாரு வழங்கினாலும், அத ஒரு வழிமுறை (guideline) ஆக மட்டும் எடுத்துக்கிட்டு, குழந்தைங்க மேல அத திணிக்காம இருக்கும் போது , குழந்தைகளுக்கும், “யார் என்ன சொன்னா என்ன, என் அம்மா அப்பாக்கு தெரியும் நான் செய்யறது சரிதான்னு; எனக்கு ஒரு பிரச்சனைனா அவங்க கிட்ட நான் தைரியமா சொல்லலாம்; ஊருக்கு பயந்து என் வாய அடைக்க மாட்டாங்க” னு ஒரு நம்பிக்கை வரும். “சும்மா சீண்டி பாக்கலாம்; மார்க், சாமி னு பயம் காட்டி நம்ம இச்சைக்கு அவள பயன்படுத்திக்கலாம்” னு நினைக்கற ஆணாதிக்க முட்டாள்களுக்கு செருப்படிக்கு
நிகரான பாடம் கற்பிப்பாங்க.

2013 ல டெல்லி ல நிர்பயா சம்பவம் நடந்த போது, எழுதின ஒரு பதிவு நினைவுக்கு வந்தது. அத இந்த பதிவின் முடிவுல இணைச்சிருக்கேன். சீக்கிரமே அதையும் ஒளிவடிவுல பதிவேத்த முயற்சிக்கிறேன்.

https://pidhattral.wordpress.com/2013/02/09/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/

பிதற்றல்...

அடுத்த முறை, “என்னடி …உன் பொண்ணு பரட்டை தலையோட அங்க பசங்க கூட விளையாடிகிட்டு இருக்கா. விளக்கு வைக்கற நேரம், நல்லா ரெட்டை ஜடை பின்னி போட்டு, பூ வச்சு அழகு பாப்பியா…”, என அடுத்த வீட்டு ‘நலன் விரும்பி அறிவுரை வழங்கினால்,
“ஜடை பின்னி பூவச்சு வீட்டுல மொடங்கி கெடக்கனும்னா, ஒரு பொம்மைய வாங்கி இருப்பனே ஆன்ட்டி. கொழந்தை எல்லாம் எதுக்கு. அவளுக்கும் பெருசா அது பிடிக்கல…என் ஆசை, ஊர் ஆசைக்காக எல்லாம் அந்த கொழந்தைய படுத்த விரும்பல”, என யதார்த்தமாய் விடையளியுங்கள்.

அடுத்த முறை, “இத பாருமா….பொண்ணு பெரியவளாயிட்டா, கொஞ்சம் வெக்கம், அடக்கத்த எல்லாம் சொல்லி குடு. தாந்தோனியா திரிஞ்சுகிட்டு இருந்தா…கல்யாணம் பண்ணி வைக்கறது குதிரை கொம்பாயிடும்…தெரிஞ்சுக்க”, என பக்கத்து வீட்டு மூதாட்டி காதில் ஓதினால்,
“என்ன பாட்டி….பல்லு மொளைக்கற மாரி …இதுவும் அவ ஒடம்புல நடந்திருக்கற புது விஷயம். “அது நடந்தாச்சு….இனி இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்”னு சொல்லி அவள கொழப்ப விரும்பல”, என சாதரணமாய் பதிலளியுங்கள்.

அடுத்த முறை, “என்ன சார், இத்தனை மார்க் வாங்கி இருக்கு பொண்ணு…ஒரு Arts collegeல போய் சேத்து விட்டிருக்கீங்க “, என ஏளனமாய் வேலையில் நண்பர் ஒருவர் குரல் எழுப்பினால்,
“சார்…அவ future, அவளுக்கு என்ன படிக்கணும்னு தோணுதோ படிக்கட்டும்; மார்க் எடுத்திருக்கானு..இன்ஜினியரிங் படி னு compel பண்ண எங்களுக்கு விருப்பம் இல்ல. அவளே விரும்பி செலக்ட் பண்ணும் போது…

View original post 412 more words

“எங்களுக்கு ஓட்டு போட்டால் தடுப்பு மருந்து இலவசமாய் தருகிறோம்” என்கிறான் பதவி மோகம் பிடித்து அலையும் அரசியல் சூனியக்காரன்
“உங்களுக்கு பிராணவாயு தயாரிப்பது மட்டுமே எங்களின் ஒரே குறிக்கோள்”, என நாடகமாடி, நஞ்சு உமிழும் தொழிற்சாலையை மீண்டும் திறக்கத் துடிக்கிறான் பணப் பேய் பிடித்தாடும் பெருமுதலாளி
“எதிர்த்துக் குரல் கொடுத்தால், நம் வீட்டுக்கு IT ரைட் வந்துவிடும்”, என வாயை மூடிக்கொண்டு வீட்டில் முடங்கிக்கிடக்கின்றனர் திரை மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள்
“பத்து வருடம் கழித்து ஆட்சியை பிடிக்கப்போகிறோம்; வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்”, என ஆமாம் சாமி போடுகின்றனர் உதய சூரியன்கள்.

“கொஞ்சம் அதிகமாகவே உங்களை தாக்கி விட்டேனோ?”, என்று கொரோனா வினவ,

“வெளிநாட்டு ஊடகங்கள் அப்படித்தான் கூறுவர்; வல்லரசு ஆகிவிடுவோம் என்ற பயத்தின் வெளிப்பாடு தான் அது.
மக்களின் மதம் சம்பந்தப்பட்ட திருவிழாக்களை முடக்கி, அந்த மத ஓட்டுகளை இழக்க நாங்கள் தயாராக இல்லை; ‘நாடு முழுதும் ஒரே கட்சிதான் ஆளவேண்டும்’ என்ற எங்கள் இலக்கை அடைய, தேர்தல் பிரச்சாரக்கூட்டங்கள் தான் முதல் படி.
நூறு கோடி மக்கள்தொகை உள்ள நாட்டில், 10/15 லட்சம் இறப்புகளெல்லாம் சுண்டைக்காய் விஷயம்”, என எகத்தாளமாய் பதிலளிக்கின்றனர்

“நாட்டின் மருத்துவ கட்டமைப்பால் தொற்றின் வீரியத்தை தாக்குப்பிடிக்க முடியவில்லை என மக்கள் கொதித்தெழுகின்றனர்; எந்த நேரமும் போராட்டமாய் வெடிக்க வாய்ப்புகள் உள்ளதே…”, என கிருமி சந்தேகம் எழுப்ப,

“உண்மை தான்; மற்ற நேரங்களில் கொஞ்சம் பதட்டமாய் இருந்திருப்போம்; இம்முறை எங்களுக்கு சாதகமாய் அமைந்துள்ளது… உன்னுடைய இந்த கூட்டங்களில் சரமாரியாக பரவும் குணம் தான். பிராண வாயு இல்லை, பிணங்களை எரிக்க விறகு கட்டை இல்லை அது இதுவென போராட்டம் செய்ய இறங்கினால், உன்னை காரணம் காட்டி முளையிலேயே கிள்ளி எறிந்திடுவோம். simple”, என பதட்டமின்றி விடையளிக்கின்றனர்.

“பிறகு மக்களுக்கு எப்பொழுதுதான் விடிவுகாலம்? கொத்து கொத்தாய் இறக்கிறார்களே”. என கிருமி தலையை சொரிய,

(கண்ணடித்தபடி) “நாங்கள் எதுவும் செய்யாவிடினும், கனிவான உள்ளம் படைத்த மக்கள் இந்நாட்டில் நிறைய பேர் உள்ளனர்; தங்களால் முடிந்த வரையில் அவர்கள் சுற்றங்களுக்கு, நண்பர்களுக்கு, சில சமயம் முன் பின் தெரியாத அந்நியர்களுக்குக் கூட முடிந்த உதவிகளை செய்வர். வெளிநாடுகளும், தங்களாலான உதவிகளை செய்வர்.
அவ்வுதவிகளை செய்தி ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் சிறிது நாட்களுக்கு ‘மனிதம் தலையோங்கி நிற்கிறது’, அது இதுவென கொண்டாடித்தீர்க்கும்.”, என கூறி முடித்து குபீரென சிரிக்கின்றனர்.

“சரி…இன்னும் சில மாதங்களில் என்னை முற்றிலுமாய் உலகம் கட்டுப்படுத்திவிடும்; அனால் என் தாக்குதலால் உங்களின் ஆட்சியில் உள்ள குறைப்பாடுகள் எல்லாம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விட்டதே! அடுத்த முறை தேர்தலில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்பீர்கள்?”, என கொரோனா எதிர்கேள்வி எழுப்ப,

“தம்பி…நீ இந்த ஊருக்கு புதிய வருகை…அதுதான் உனக்கு உண்மை நிலைமை புரியவில்லை
அடுத்த தேர்தலுக்கு இன்னொரு 2-3 வருடங்கள் உள்ளது.
அந்த இடைவெளியில், ஓரிரண்டு மதக்கலவரங்கள், சாதிப்பூசல்களை கிளம்புவோம்
விலைவாசியை குறைப்பதுபோல் நாடகம் போடுவோம்
வெளிநாட்டு தாக்குதல் எனக்கூறி, 10-15 இராணுவ வீரர்களை காவு கொடுப்போம்
அங்கு ஒன்றாய், இங்கு ஒன்றாய் கோயில்களையும், நாட்டுத்தலைவர்கள் சிலைகளையும் எழுப்புவோம்
செவ்வாய் மாதிரி இன்னொரு கிரத்துக்கு ஏதாவது ஏவுகனை அனுப்புவதாக காதில் பூ சுற்றுவோம்
மள மளவென வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்,
மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்போம்!

‘மறதி’……இந்த நாட்டு மக்களிடம் எங்களுக்கு பிடித்த ஒரு மேலோங்கிய குணம்.

அது அவர்களை விட்டு ஒழியும் வரை, இந்த நாடும் அதன் வளங்களும் எங்கள் கட்டுப்பாட்டில்.

அதுவரையில்…எங்களை அசைக்க முடியாது.

குடிமக்களின் நலனை காக்க மருத்துவமனைகளை கட்டித்தள்ள வேண்டிய உன் அரசன்,
எனக்கு சிலைகள் செதுக்குவதிலும், கோயில்கள் கட்டுவதிலும் நேரத்தையும் காசையும் வீணடிக்கிறான்

‘தனக்கு மிஞ்சியது தான் தானம்’ என்ற நிதர்சனத்தை புரிந்துக்கொள்ளாமல்,
உலக நாடுகளுக்கு விழுந்தடித்து கொரோனா தடுப்புமருந்துகளை ஏற்றுமதி செய்கிறான்;
வெட்டி ஐம்பத்தில் திளைக்கிறான்

லட்சங்களில் நாட்டு மக்கள் கொரோனாவால் பாதிப்பிற்குள்ளாயிருக்கும் போது,
சமூக இடைவெளி மற்றும் முகக்கவசங்கள் அவசியம் என சட்டங்களை அமல்படுத்தாமல்,
கூட்டங்களைக் கூட்டி, ஓட்டு பிச்சை எடுக்கிறான்.

பக்தா,

சிறிது நாட்களுக்கு நாம் சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம்;

உன்னுடன் இருக்கிறேன்; உன்னைத் சுற்றி இருக்கிறேன்; உனக்குள் இருக்கிறேன் என நம்புகிறாயெனில்,

கூட்ட நெரிசல் நிறைந்த கோயில் திருவிழாக்களுக்கு போவதற்கு முன், யோசி

உனக்காக நான் காத்திருக்கிறேன்…முதலில், இந்த கொடிய கிருமியை துரத்தி அடிப்போம்.

கடந்த வாரம் உங்க மேடைப்பேச்சு ஒன்னு கேட்டேன்.

கூட்டத்துல ஒருத்தர் எழுப்பிய மனுநீதி பத்தின கேள்விக்கு,

“மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம்….அதைப்பற்றிய விமர்சனம் தேவையற்றது”,னு பதில் சொன்னீங்க.

கிடைக்கற மேடைல எல்லாம், ஒரு கற்றறிந்த பிரமுகர் மாதிரி பேசித் தள்ளற உங்களுக்கு, மனுஸ்மிருதி பத்தியும், தமிழ் சமூகத்துல அந்த புத்தகத்தின் தாக்கத்தப் பத்தியும் தெரியாம இருக்குன்னா…ரொம்ப கவலையா இருக்குங்க.

உங்க அளவுக்கு புத்தகங்கள் எல்லாம் படிச்சு அறிவ வளத்துக்காட்டியும், எனக்கு தெரிஞ்ச ஒன்னு ரெண்டு சமூக யதார்த்தங்கள உங்களோட பகிர்ந்துக்க விரும்பறேன்.

ஒரு கூலித்தொழிலாளியோட பையன், கோயில்ல ஒலிக்கற வேதங்கள கேக்கறான். “அப்பா…எனக்கும் அத கத்துக்கணும்னு ஆசையா இருக்கு”னு சொல்றான். அப்பிடியே அந்த பையன் வேதங்கள கத்துக்கிட்டாலும், கோயில் அர்ச்சகர்கள விட, திருத்தமா அத ஒப்பிச்சாலும், அந்த பையனால கோயில்ல அர்ச்சகர் ஆக முடியாது.

ஒரு நாவிதரோட பையன் அவன் கல்லூரில படிக்கிற பார்ப்பனர்/பார்ப்பனரல்லாத உயர் சாதிய சேந்த பொண்ண விரும்பறான், திருமணம் செஞ்சுக்க நினைக்கறான் வைங்க, கல்யாணமா…கருமாதி நடக்கலனா…பையன் அதிஷ்டக்காரன்!

இன்னும் கூட சில கிராமங்கள்ல, டீக்கடைகள்ல, சாதிவாரியா காப்பி குவளைகள் இருக்கு.

துப்புரவு தொழில், மலம் அள்ளும் தொழில்களெல்லாம் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மட்டுமே பிரத்யேகமா வகுக்க பட்டிருக்கற தொழில்; அதுல இருந்து அவங்கள விடுவிக்க எந்திரங்கள் ஏதாவது அறிமுகப்படுத்த சொன்னா, அந்த தொழிலாளிகளோட கால கழுவி விட்டு, “நீங்க தான் தரமா செய்வீங்க…நீங்களே பண்ணுங்க”னு பிரதமர் உட்பட அனைவரும் பூத்தூவி வாழ்த்துவாங்க.

டாஸ்மாக், 5-ஸ்டார் ஹோட்டல் பார் ல தண்ணி அடிக்கறவனுக்கு, “சோகத்த மறக்க தண்ணி அடிக்கறான்”, “stress relief க்காக குடிக்கறான்” னு சப்பக்கட்டு கட்ற சமூகம், ஒரு பொண்ணு அத செய்யும் போது, “வீட்டுக்கு அடங்காதவ”, “பணத்திமிருல ஆடறா”னு பட்டம் கட்ட போட்டி போட்டு முன் வந்து நிக்கும்.

“இதுக்கும் மனுஸ்மிருதிக்கும் என்னமா சம்பந்தம்”னு கேக்கப்போறீங்கனா,

இந்த சமூகத்துல இருக்கற சாதிவாரியான பாகுபாடு, மேல்சாதில இருக்கறவன் தான் ஒசத்தி, பொண்ணுங்கறவ பொத்திகிட்டு அடக்க ஒடுக்கமா இருக்கணும் மாதிரியான ‘பொன்மொழிகள்’ எல்லாம், புழக்கத்துல இல்லனு சொன்னீங்க பாருங்க…அந்த மனுஸ்மிருதில இருந்து உதிர்ந்த முத்துக்கள் தான்.

நீங்க உலகத் தரத்துக்கு படங்கள் எடுக்கறது, விடுகதை மாதிரி பேசி சாமானிய மக்களோட உயிர வாங்கறதெல்லாம் இருக்கட்டும்…தமிழ்நாட்டு அரசியல்ல கால் பாதிக்க விரும்பினீங்கனா, நம்ம நாட்டுக்கு தீரா சாபக்கேடா இருக்கற இந்த சாதிப் பிரிவினை பத்தியும், அத உருவாக காரணமா இருந்த மனுஸ்மிருதிய பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கறது நல்லது.

உங்களுக்கு இருக்கற ஆங்கில மோகம்…ஊர் அறிஞ்ச விஷயம். அதுனால, என்னால முடிஞ்சா உதவி…

இந்த வலைத்தளத்துல, மனுஸ்மிருதியின் ஒவ்வொரு கட்டளையையும் தெளிவா ஆங்கிலத்துல மொழிப்பெயர்ப்பு செஞ்சிருக்காங்க.

https://archive.org/details/ManuSmriti_201601/page/n187/mode/2up

சாம்பிள் கட்டளைகள் (உங்களுக்காக பிரத்தயேகமா ஆங்கிலத்தில்):

9.13 Drinking (spiritous liquor), associating with wicked people, separation from the husband, rambling abroad, sleeping (at unreasonable hours), and dwelling in other men’s houses, are the six causes of the ruin of women.

8.366 A (man of) low (caste) who makes love to a maiden(of) the highest (caste) shall suffer corporal punishment

9.17 (when creating them) Manu allotted to women (a love of their) bed, (of their) seat and (of) ornament, impure desires, wrath, dishonesty, malice and bad conduct.

மனுஸ்மிருதில இருக்கற இந்த கொச்சையான வரிகள படிச்சதுக்கு, ‘ஹிந்து பெண்கள கேவலமா பேசிட்டாரு”னு திருமா அவர்கள சாடினாங்க…சங்கிங்க! முறைப்படி சாடனும்னா, மனுவ சாடி இருக்கணும், கொச்சையான கருத்துக்கள் நிறைஞ்சு வழியற அந்த புத்தகத்த எரிச்சிருக்கணும். ஆனா அது மாதிரி எதுவும் நடந்த மாதிரி தெரியல.

இதெல்லாம் படிச்சிட்டு, விருமாண்டி மாதிரி பொங்கி எழுந்து, ‘மனுஸ்மிருதி எரிக்கும் போராட்டம்’ ஏதாவது உங்க மய்யம் சார்பா நடத்தப்போறீங்கனா….முன்கூட்டியே என் வாழ்த்துக்கள்!!!

கொரோனா பரவல கட்டுப்படுத்த எங்க ஊர்ல அமல்படுத்தப் பட்டிருக்கற ஊரடங்கு, புது வேலைனு அடுத்தடுத்து ஏதோ ஒன்னு ‘busy’யாவே வச்சிருந்ததுல, என் blog பத்தி சுத்தமா மறந்தே போச்சு.

ஏதாவது சுருக்குனு கடுப்பேத்தற மாதிரி விஷயம் ஒன்னு நடக்கும், அந்த சர்ச்சை பத்தின என் கருத்துக்கள எழுத உக்காருவேன். அந்த விதத்துல, இந்த தடவை MP கனிமொழிக்கு நடந்த இந்தித்திணிப்பு சம்பவம்.

இது மாதிரி வேற ஒரு தடவை கூட நடந்திருக்கு. நான் சந்திச்ச இந்தி திணிப்பு சம்பவத்த பத்தி பதிவு எழுத நேரம் ஒதுக்கி, என் எரிச்சல கொட்டித்தீத்தேன்.

அந்த விதத்துல, திரும்பவும் பதிவு எழுத உத்வேகம் தந்த இந்தி மொழிக்கு ஒரு நன்றி சொல்லி…பதிவ ஆரம்பிக்கறேன்.

“இந்தி தெரியாதா…இந்தியனில்லையா நீ”னு ஒரு ஊழியர் சென்னை விமான நிலையத்துல, அதாவது தமிழ்நாட்டின் தலை நகர் சென்னைல இருக்கும் விமான நிலையத்துல வச்சு கேட்டாருன்னா,

ஒன்னு, இந்திய நாட்டுல இந்தி தவிர்த்து ஒரு 30க்கும் மேற்பட்ட மொழிகள் பயன்பாட்டுல இருக்குனு தெரியாத தற்குறியா இருக்கணும், இல்ல ‘இந்தி தான் ஒசத்தி”னு மல்லுக்கட்டிட்டு நிக்கற சங்கியா இருக்கணும்.

உண்மைய சொல்லனும்னா, இந்த செய்திய டிவி ல பாத்த போது, எனக்கு பெருசா ஆச்சரியமே இல்ல. அதுக்கு மாறா, “இந்த கொசுத்தொல்ல தீரவே தீராது போல”,னு ஒரு விரத்திதான் ஏற்பட்டது.

இங்க நான் ஊருக்கு வந்த புதுசுல கூட ஒரு வட இந்திய மளிகைக்கடைல பொருளெல்லாம் வாங்கிட்டு பில் போட கல்லாக்கு போனோம். உடனே சட சடன்னு எங்க கிட்ட இந்தில பேச ஆரம்பிச்சாங்க கல்லால நின்னுட்டு இருந்த பெண்மணி. “இல்லங்க…நாங்க ஹிந்தி இல்ல”னு சொன்னதுக்கு,
“ஓ..நீங்க இந்தியர்கள்னு நினைச்சோம்…இலங்கையா (Sri Lanka)”னு சாதாரணமா அவங்க அறியாமைய மேடை ஏத்தினாங்க.

“என் மொழிதான் ஒசத்தி”, “என் தலைவன் தான் உலகத்தையே நல்வழி படுத்த வந்தவன்”னு தன் வட்டத்துக்கு வெளில என்ன நடக்குதுனே தெரியாம இருக்கற மக்கள, சென்னை ல வச்சாலும், மேல்போர்ன் ல வச்சாலும், ஏன் செவ்வாய் கிரகத்துல போய் வச்சாலும் கூட, அந்த குண்டுச்சட்டியிலியே குதிரை ஓட்டற எண்ணம் மட்டும் மாறவே மாறாது.

ஓஹோன்னு இல்லாட்டியும், எனக்கு கொஞ்சம் சுமாரா ஹிந்தி தெரியும். “North ல வேலை கெடைச்சு, அங்க move பண்ணினா, இந்தி helpful ஆ இருக்கும்”னு அம்மா சொல்ல,
“நம்ம ஊருக்கு வேலை செய்ய வர்ற North Indians எல்லாம் தமிழ் கத்துக்கலியே மா” னு இல்ல
“France இல்ல Germany மாதிரி English பேசாத நாட்டுக்கு போறேன்னு வை…இந்த இந்தி எப்பிடி உதவப்போகுது மா” னாவது கேட்டிருக்கணும்.

கேக்கல…அதனால இந்தி கிளாஸ் போக ஆரம்பிச்சேன்.

புது மொழி ஒன்ன கத்துக்கறோமேன்னு ஒரு உற்சாகத்தோட படிச்சதா நினைவே இல்ல. இந்தி மொழிய படிக்கறோமே, இந்தி படங்களெல்லாம் பாக்க ஆரம்பிக்கலாம், புலமைய வளத்துக்கலாம்னு steps எதுவும் எடுத்தா மாதிரியும் நெனவில்ல.

infact இன்னிக்கி கூட Netflix/Amazon ல இந்தி படம் பாக்கணும்னா, English subtitle இல்லாம ஒரு scene பாக்க மாட்டேன்.

இதுக்கெல்லாம் நேரெதிர் என் husband. அந்த காலத்து தூர்தர்ஷன்ல டிவி நிகழ்ச்சிகள், இந்தி படங்கள் எல்லாம் பாத்தே மொழிக்கு பரிச்சயம். இப்ப யாராவது இந்தில பேசினா, புரிஞ்சிக்கிற அளவுக்கு மொழிய தெரிஞ்சு வச்சிருக்கான்.

அதுமாதிரி எங்க நண்பர் கூட்டத்துல இருக்கற ஒரு பொண்ணு. வடக்குல இருந்து வந்ததுனால, வந்த புதுசுல இந்தி மட்டும் தான் பேசத்தெரியும். ஆனா எங்க கூட பழகின சில மாசத்திலியே, தமிழ டபக்குனு உள்வாங்கிக்கிட்டா. எங்க கிட்ட தமிழ்ல தான் பேசுவா.

matter இதுதான்..”ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது”னு ஒரு பழமொழி இருக்கு. விழுந்து விழுந்து படிச்சு, பரிட்சை எல்லாம் எழுதி தேர்ச்சி அடைஞ்சாலும், ஒரு விஷயத்தின் மேல ஈர்ப்பு/ஆசை இல்லனா, அது மனசுல பெருசா பதியாது.

ஆனா அதுவே ஒரு விஷயத்துல விரும்பி ஈடுபட்டா, கொஞ்சமா முயற்சி போட்டாலும், கை மேல பலன் கெடைக்கும்.

சரி இப்ப பதிவு தலைப்புக்கு வரேன்…

“இந்தி படிச்சாதான் என்ன தப்பு”, “நாட்டுக்கு ஒரு தேசிய விலங்கு, ஒரு தேசிய பறவை மாதிரி, ஒரு தேசிய மொழி இருந்தா நல்லதுதானே” னு இந்த இந்தித்திணிப்பு பின்னாடி இருக்கற அரசியல பத்தி தெரியாத இல்ல தெரிஞ்சிக்க விருப்பம் இல்லாத RSS/BJP க்கு சிங்கி அடிக்கற சங்கிகளுக்கு சொல்ல விரும்பறது இதுதான்…

“தமிழ்நாட்டுப் பசங்க ஒரு புது மொழிய படிக்க, என் கணவனோ, எங்க தோழியோ கையிலெடுத்த வழி தான் எனக்கு சரினு படுது. அவங்கள ‘இந்தி படி’, ‘இந்திய நாட்டுக்கு பெருமை சேர்”னு சொல்லி torture பண்ணி படிக்க வைக்க எங்களுக்கு விருப்பம் இல்ல.
எங்க கருத்த மதிச்சு, அவங்க தாய்மொழி அல்லாத மொழிய படிக்கணுமா வேண்டாமான்னு முடிவெடுக்கற உரிமைய அந்த பசங்க கிட்டயே விடுவீங்கன்னா…மகிழ்ச்சி.

இல்ல…”நம் நாடு இந்தியா…நம் மொழி இந்தி”னு நொய்நொய்ன்னு நச்சரிக்கப் போறீங்கனா, சமூக ஊடகங்கள்லையும், தெருக்கள்லையும் நாங்க எழுப்பற இந்தித்திணிப்புக்கு எதிரான முழக்கங்களையும் , போராட்டங்களையும் சகிச்சிக்க நீங்க கத்துக்கணும். “நீங்க நிறுத்தினா…நாங்க நிறுத்தறோம்”. simple.

“இதுல என்ன இருக்கு…பத்தோட ஒன்னா பசங்க இந்திய படிச்சிட்டு போட்டுமே”னு நாங்க இப்ப விட்டுட்டா,

அடுத்து…சமஸ்க்ரிதத்த படி, அசைவம் சாப்பிட்றத நிறுத்து, இந்தியா இந்துக்களின் நாடு னு கண்ட குப்பையெல்லாம் எங்க தலைல கட்டுவீங்க.

so, உங்க இந்தி மொழி ஒசத்தினா, நீங்களே தாராளமா வச்சுக்கோங்க; நாங்க தமிழ வச்சு பொழைச்சுக்கறோம். அப்பிடியே எங்க பசங்க ஹிந்தி படிக்க ஆசைப்பட்டா, internet, ’10 நாட்களில் இந்தி கற்பது எப்படி’ மாதிரியான வசதிகள் இருக்கு.

“ஆறு மணிக்கு, கௌசி அக்கா zoom ல வருவாங்க. அப்பறம் எனக்கு மட்டும் பாக்கவே chance கெடைக்கலன்னு நீதான் பொலம்புவ. call முடிச்சிட்டு குளிக்க போலாம்ல”, என ஒரே மூச்சில் தம்பி கருணாகரனிடம் புலம்பித்தீர்த்தாள் சுகன்யா.

“அதுவும் சரிதான்”, என கூறியபடி, தொலைக்காட்சிப் பெட்டியினின் முன் அமர்ந்தான் கருணாகரன்.

“யாராவது இருக்கீங்களா…”, என பலத்த குரலில் கூவியபடி, zoom செயலியில் காட்சியளித்தாள் கௌசல்யா.

“ஹலோ அக்கா, எல்லாரும் உங்களுக்காகத்தான் wait பண்ணிட்டு இருக்கோம். thanks to ஊரடங்கு உத்தரவு, கருணாவும் இன்னிக்கி இருக்கான்”, என zoom இல் கௌசல்யாவை வரவேற்றாள் சுகன்யா.

‘..சூப்பர்… எப்பிடி இருக்க கருணா? கண்ணாபின்னானு bore அடிக்குதா?”, என கௌசல்யா வினவ,
“மண்ட காயுதுக்கா, எனக்கென்னவோ இதெல்லாம் ஒரு பெரிய சதி மாதிரிதான் தோணுது. 27 டிகிரி ல இந்த கொரோனா தாக்குப்புடிக்காதுனு சொல்றாங்க…இன்னிக்கி இங்க 35 டிகிரி. யாருகிட்ட பூச்சாண்டி காட்றாங்க”, என வாய்ப்புக்காகவே காத்திருந்தாற்போல் கடுப்பை கொட்டித்தீர்த்தான் கருணாகரன்.

“(மெலிதாக சிரித்தபடி) சூடா இருக்கற எண்ணெய்ல அப்பளத்த பொரிக்கற மாதிரி, கொதிக்கற தண்ணில ஏன் பண்ணக்கூடாது?”, னு கேள்வி கேட்ட கருணா தான இது? நெனவு இருக்கா அண்ணி, ஏழு வயசு பையனுக்கு boiling point எல்லாம் எப்பிடி விளக்கறதுனு நான் அவதிப்பட்டது? பகுத்தறியற திறன ஈஸியா மழுங்கடிக்கனும்னா…ஒரு whatsapp profile இருந்தா போதும்னு நினைக்கறேன்!
கருணா, மனிஷங்க body temperature 37 டிகிரி. அப்ப உன் கணக்குபடி பாத்தா, மனிஷங்க யாருக்கும் இந்த கொரோனா தொற்று வந்திருக்கக் கூடாதுல? நம்ம ஊர் வெய்யில சொல்றியே, gulf countries ல எல்லாம் 40-45 டிகிரி வரைக்கும் போகும். அங்க கொரோனா தாக்கமே இல்லியா?”, என கௌசல்யா கூறி முடிக்க, தலையை மட்டும் சொரிந்தபடி ஆட்டினான் கருணாகரன்.

“ஆனா அக்கா, ஏதாவது புதுசு புதுசா news படிக்கும் போது பயமா இருக்குல. எத நம்பறது எத நம்பக்கூடாதுனு தெரியல”, என அலுத்துக்கொண்டாள் சுகன்யா.

“ஆமாம் கௌசி, அண்ணனுக்கு sugar இருக்கறதுனால, ரொம்ப ஜாக்கரதையா இருக்கணும்னு வேற சொல்றாங்க”, என தன் பதட்டத்தை முன்வைத்தாள் ஆர்த்தி, கௌசல்யாவின் அண்ணி.

“kind of makes sense அண்ணி. வீட்ல மொடங்கிக் கெடக்கும் போது ஒரே பொழுதுபோக்கு, டிவி தான். அதுலயும் ஒவ்வொரு சேனலும் ‘யாரு அதிகமா பீதிய கெளப்பறாங்க பாக்கலாம்”, னு போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க. But தெரியாம தான் கேக்கறேன், வெளிநாடுகள்ல எவ்வளவு பேர் செத்தாங்க, வைரஸ் எங்க இருந்து உருவானது, ஒரு சின்ன பையன் இதெல்லாம் நடக்கும்னு ரொம்ப நாளைக்கு முன்னமே கணிச்சிட்டான் மாதிரியான செய்திகள்னால நமக்கு என்ன பயன் சொல்லுங்க?”, என கௌசல்யா கேள்வி எழுப்ப,

“என்ன அக்கா…நம்மள சுத்தி நடக்கற விஷயங்கள தெரிஞ்சு வச்சுக்கறது நல்லது தான? எப்ப எது தேவப்படும்னு யாருக்கு தெரியும்?”, என தனது தரப்பு வாதத்தை முன்வைத்தான் கருணாகரன்.

“சரி…உன் justification ஏ சரின்னு வச்சுப்போம். இந்த சின்ன பையன் முன்கூட்டியே கணிச்சதுனால என்ன பயன்? அவங்க அம்மா அப்பா ஏன் government க்கு தெரியப்படுத்தல? அந்த கணிப்போட நம்பகத்தன்மைய நிரூபிச்சிருந்தா, அரசும் ஏதாவது செஞ்சிருக்கும்ல? அப்பிடியே மத்த countries க்கும் ‘heads up’ குடுத்திருந்தா, இந்த உயிரிழப்புகள கட்டுப்படுத்தி இருக்கலாம் ல? Limelight எதிர்பாத்து பொடிப்பையன் இதெல்லாம் செய்யறான்னு தட்டிக்கழிக்காம, அவனுக்கும் அவன் family க்கும் முக்கியத்துவம் குடுத்து டிவி ல interview பன்றான்னா, அவனுக்கு அது பொழப்பு.
நீ இதுல என்ன gain பண்ணப்போற?
அப்பறம் இந்த வைரஸ் wuhan markets ல இருந்து வந்ததா, lab ல இருந்து வந்ததா, வவ்வால் சாப்பிட்டதுனால வந்ததா, சிக்கன் சாப்பிட்டதுனால வந்ததா மாதிரியான விவாதங்களெல்லாம், என்ன பொறுத்தவரைக்கும், once again, TRP க்காக மட்டும் பேசப்படற வெட்டிப்பேச்சு.
வீடு பத்திகிட்டு எரியும் போது, தீய மொதல அணைக்கறத விட்டுட்டு, எப்பிடி விபத்து ஏற்பட்டிருக்கும், பக்கத்து வீட்டுல பாதிப்பு எப்பிடி னு பேசற மாதிரியான முட்டாள்தனம்”, என யதார்த்தத்தை எடுத்துரைத்தாள் கௌசல்யா.

“true அக்கா…இந்த விவாதங்கற பேர்ல…channels ல, குழாய் ஆதி சண்டை மாதிரி ஒரு ரகளை நடக்கும் பாருங்க. அப்பறம் இப்ப recentஆ டிரம்போட கொரோனா சிகிச்சை பத்தி கேள்விப்பட்டீங்களா?”, என சொல்லி, கண்ணடித்தான் கருணாகரன்.

“மோடி வாய தொறந்து பேசாம உயிரை வாங்கினா, டிரம்ப் வாய் கிழிய கண்ட குப்பைய பேசி உயிர வாங்கறாரு. இந்த வீண் வதந்திகளும், பதட்டம் அளிக்கற செய்திகளும், நம்ம உடம்புக்கும் மனசுக்கும் நல்லதே இல்ல.

நல்ல வேளையா நீயும் சுகன்யாவும் நல்ல வேலைல இருக்கீங்க. அண்ணனுக்கு pension வருது. வீட்லியே இருந்து, இந்த தொற்று பாதிக்காத மாதிரி பத்திரமா இருங்க.

மத்தபடி, வெளில போக வேண்டிய அவசியம் ஏற்பட்டா, போனோமா வேலைய முடிச்சோமா னு வீட்டுக்கு திரும்புங்க. வந்த உடனே, கை கால நல்லா கழுவுங்க. இதெல்லாம் செஞ்சுட்டு தொற்றுக்கான அறிகுறி ஏதாவது தெரிஞ்சா, பக்கத்துல hospitals அ எப்பிடி approach பண்ணனும்னு தெரிஞ்சு வச்சுக்கோங்க

டிவி ய கொஞ்சம் அணைச்சு வச்சுட்டு, ரொம்ப நாளா பண்ணனும்னு நினைச்சுகிட்டு இருந்த வேலைகள தூசிதட்டி ஆரம்பிங்க”, என கௌசல்யா கூறிமுடிக்க,

“நம்ப மாட்டீங்கக்கா, நேத்து கூட அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தேன்…ஒரு cooking channel Youtube ல ஆரம்பிக்கலாம்னு. கருணா கூட அவன் ஓட்டை scooter அ எதோ நோண்டிட்டு இருந்தான்.”, என ஒரு புன்னகையுடன் சுகன்யா விடையளித்தாள்.

“Good Luck அண்ணி. உங்க கொங்கு சிக்கன் recipe க்கு வெயிட் பண்ணிட்டு இருப்பேன். கருணா…அது உனக்கு 12th ல Maths centum க்கு அண்ணா வாங்கி தந்த gift ல? repair பண்ணு, அடுத்த மொறை நான் ஊருக்கு வரும் போது, பைக் ல ஊர் சுத்தறோம்”

வீட்லியே அடைஞ்சு கெடக்கறது கடிதான்; ஆனா அடுத்த வேளை சாப்பாடுக்கு வழி இல்லாம அவதி படற மக்களை நினைச்சு பாருங்க. அந்த கண்ணதாசன் lyrics என்ன அண்ணி…சுமைதாங்கி படத்துல வருமே…?”, என கௌசல்யா வினவ,

“அக்கா…’மயக்கமா கலக்கமா’ பாட்டு ல வர்ற lines தான…” என சுகன்யா துவங்க,

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்து பார்த்து நிம்மதி நாடு”, என ஆர்த்தி முடித்தாள்.
“அதே தான். சீக்கிரமே இதெல்லாம் முடிவுக்கு வரும்னு நம்புவோம். அதுவரைக்கும் இங்க சொல்றா மாதிரி…’stay home stay safe'”, என புன்னகைத்தாள் கௌசல்யா.

“நீ சொல்லு கௌசி, அங்க lockdown எல்லாம் ரொம்ப கெடுபிடியா இருக்கா? வீட்ல இருந்து தான் வேலை செய்யறீயா”, என கௌசல்யாவிடம் பேச்சைத் தொடர்ந்தாள் ஆர்த்தி.

கதையின் ஒலி வடிவம்:

இரவு எட்டு மணிக்கு பேசி, மக்கள் தலையில் குண்டை வீசுபவர், இன்று காலையிலேயே காட்சி தருகிறாரே…நிவாரண நிதி ஏதாவது அறிவிக்கப்போறாரோ, என காத்திருந்தால்,

“விளக்கை ஏற்றுங்கள்; மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்…அவதிப்படும் ஏழைகளுக்கு, நாங்கள் அனைவரும் உங்கள் கூடவே இருக்கிறோம் என உணர்த்துங்கள்”, என வெட்டிப்பேச்சு பேசுகிறார்.

இந்த உளறலுக்கு ‘ஆஹா…ஓஹோ’ என கோஷமிடும் ட்விட்டர் பதிவுகளை பார்க்கும் போது தோன்றுபவை…

“இந்த புகழாரங்கள் எதுவும், ‘அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வது’, என ஏங்கித்தவிக்கும் குடும்பத்தலைவன் இட்டதில்லை

“விளக்கு ஏற்றுவதனாலோ, “நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம்” என ஒப்புக்கு சொல்வதனாலோ, டெல்லியிலிருந்து நடந்தே சொந்த ஊருக்கு போகிற பிஞ்சு குழந்தையின் பசியை தீர்க்கப்போவதில்லை”

இந்த இடத்தில் நினைவுக்கு வரும் குறள்…

//தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு//

வீட்டிலேயே இருக்கச் சொல்லி வலியுறுத்துகிறோமே…வீடே இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்
சிறு மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களை மூடிவிட்டால், அங்கு வேலை செய்ய குடிப்பெயர்ந்தவர்களின் நிலை என்ன?
பேருந்து, ரயில் சேவைகளை முடக்கி விட்டால், சொந்த ஊர்களுக்கு அவர்கள் எப்படி திரும்புவார்கள்?

என எதைப்பற்றியும் கவலைப்படாமல், கையை தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என காளைச்சாணத்தை மக்கள் முகத்தில் பூசும் தலைவன், நாட்டின் சாபக்கேடு!

வாய தொறந்து கேக்கணும்

Posted: செப்ரெம்பர் 16, 2019 in சிறுகதை
குறிச்சொற்கள்:, ,

“Good Morning வளர்மதி”, என முகமலர்ச்சியுடன் வரவேற்றாள் குமுதா.

“தேய்மதினு வேணும்னா பேர மாத்திக்கணும் போல…weekend முடிச்சிட்டு வரேன்னு தான் பேரு…ரொம்ப terrible ஆ feel பண்றேன் குமுதா. வேலைக்கு வந்துட்டாவது Good Morning ஆ இருக்கானு பாப்போம்”, என அலுத்துக்கொண்டே பைய்யை தன் மேசையில் வைத்தாள் வளர்மதி.

“ஏன்ப்பா …இன்னிக்கி பையனா பொண்ணா?”, என குமுதா வினவ,

“பசங்க, புருஷன், gas cylinder, பால், 21G பஸ்…ஏதோ உலகமே பிளான் பண்ணி எனக்கு வஞ்சனை செய்யுதோனு தோணுதுப்பா”, என தனக்கே உரிய நகைச்சுவை புலம்பலை கொட்டித்தீர்த்தாள் வளர்மதி.

சிரிப்பை கட்டுப்படுத்தியபடி, “அந்த உலகத்துல தான் உன் friend இருக்கேன். ஒரு coffee க்கு போலாம் வா” தன் இருக்கையை விட்டு எழுந்தாள் குமுதா.

காபியுடன், சுட சுட இரண்டு சமோசா வாங்கியபடி, உணவக மேசையில் அமர்ந்தனர் தோழிகள்.
“seriously மதி…இப்பிடி stress ஆறது உனக்கு நல்லதில்ல. புலம்பி vent out பண்ணிட்டா போயிடும்னு நெனைச்சா, உன்ன நீயே ஏமாத்திக்கற. நவீன் கிட்ட நீ இன்னும் பேசல. சரிதான?”, என குமுதா அக்கறையுடன் தன் ஆதங்கத்தை முன்வைத்தாள்.

“இன்னிக்கு சமோசா நெஜமாவே நல்லா இருக்குல்ல?”, என வளர்மதி தலைப்பை திசைத்திருப்ப எத்தனிக்க,

“பாத்தியா …திரும்பவும். This is not helping வளர். உன் பொண்ணுக்கு ஒரு bad example set பண்ற. Actually உன் பையனுக்கும்தான். நீ சமோசா சாப்பிடற moodல இருக்கனா, நான் வேற எதுவும் பேசல கெளம்பறேன்”, என அக்கறை கலந்த வருத்தத்துடன் பதிலளித்தாள் குமுதா.

“ஓய்…நீயே இப்பிடி பேசினா எப்பிடி? எனக்கு மட்டும் என்ன, இப்பிடி எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்யணும்னு ஆசையா? சொல்லலாம்னு முடிவு செஞ்சு, “நவீன்”னு கூப்பிட்டா, “சொல்லு வளர்”னு கேப்பான்.

அப்ப பயமா, தயக்கமா…என்னனு தெரியல..”ஒன்னும் இல்லப்பா”னு சொல்லி வேற ஏதாவது சொத்த விஷயத்த பேச ஆரம்பிப்பேன்.

“I am not prepared to handle his questionsனு தோணும். அதுவும் சரிதான், வேற என்னிக்காவது பேசலாம்னு அசரீரி மாதிரி ஒரு voice. அவ்வளவுதான் I move on to சமைக்கறது or பசங்க homework”, என தன் இயலாமையை வார்த்தைகளால் கொட்டி முடித்தாள் வளர்மதி.

“sorry ன…நான் ஒரு குட்டி விரக்தில பேசிட்டேன். எல்லாம் ‘easier said than done’னு எனக்கும் புரியுது. But யோசிச்சு பாரு. உன் பொண்ணு உன்ன பாத்து வளரும் போது, “கல்யாணத்துக்கு அப்பறம் இப்பிடி தான் போல…வீட்டு வேலைகள்ல husbands help எல்லாம் எதிர்பாக்கக் கூடாது”னு அவளே ஒரு பாடத்த கத்துப்பா. உன் பையன், on the other hand, “வீட்டு வேலைகள் எப்பவும் ஒரு பொண்ணோட department தான்”னு assumption ல வளருவான். அவனோட wife இவன் கிட்ட இருந்து ஏதாவது help எதிர்பாக்கும் போது, “what do you mean…வீட்டுவேலை எல்லாம் ஒரு woman’s department தான?”, னு சொல்லி திருதிருனு முழிப்பான். நம்ம பசங்க பாக்கற முதல் grown-ups நாம தான். so நல்லத நாம சொல்லி கொடுக்கும் போது, செஞ்சு காட்டும் போது, அவங்க மனசுல அது சட்டுனு பதியும்”
“யோசி…இப்பிடி விழுந்து விழுந்து வேலை செய்யறதெல்லாம், just not worth it”, என தன் தரப்பு வாதத்தை முன்வைத்தாள் குமுதா.

ஆழ்ந்த யோசனையில் மூழிகி இருந்த வளர்மதியை, தோளில் தட்டி நிகழ்நிலைக்கு இழுத்து வந்தாள்.

“இல்ல குமுதா…this will be it. நாளைக்கு ரெண்டு பசங்களுக்கும் swimming இருக்கு. நாலு பேரும் சேந்து தான் போவோம். பசங்க swimming session போது, நாங்க ரெண்டு பேரும் phone அ நோண்டிட்டு இல்லாம, will talk over a coffee; Thanks ன. உன் அந்த perseverance தான் உன் கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது குமுதா”, என கைய்யை பிடித்தபடி புன்னைகைத்தாள் வளர்மதி.

(மெலிதாய் சிரித்தபடி) இதுல என்ன இருக்கு வளர். நீ இத மட்டும் successful ஆ முடிச்சிட்டு வா…Treat…உன் shout”, என கண்ணடித்தாள் குமுதா.

“கட்டாயம்”, என கூறியபடி உணவகத்திலிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள் வளர்மதி.

“சரி…30 minutes ல ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்கு கொஞ்சம் prep work பண்ணனும்”, என நாற்காலியில் இருந்து எழுந்தாள்.

“கெளம்பு, நான் lunchக்கு ஒரு takeaway வாங்கிட்டு மேல வரேன்”, என உணவகத்தின் கல்லா நோக்கி நடந்தாள் குமுதா.

அடுத்த நாள்:

ஒரு பளிச் புன்னகையுடன், “Good Morning குமுதா”, என தன் இருக்கைக்கு வந்தாள் வளர்மதி.

“பார்றா…ஏதோ அதிசயம் நடந்திருக்கு போலவே வீட்ல…I am all ears”, என ஆவலாய் நடந்ததை அறிய, நாற்காலியை நகர்த்தி வளர்மதியின் இருக்கை அருகே வந்தாள் குமுதா.

பைய்யிலிருந்து மதிய உணவு பெட்டியை வெளியில் எடுத்து வைத்தபடி, ஒரு மிட்டாய்கள் நிறைந்த பொட்டலத்தை குமுதாவிடம் நீட்டினாள் வளர்மதி.

“இப்பிடியே ஊமைச்சாமியாரா இருக்க போறியா…suspenseல தல வெடிக்கிறா மாதிரி இருக்கு”, என கூறியபடி, மிட்டாய் ஒன்றை வாயில் போட்டுக்கொண்டாள் குமுதா.

“எப்பிடி thanks சொல்றதுனே தெரியல குமுதா. swimming class க்கு போனோம். நானும் நவீனும் chatted over a coffee. ஒரு குருட்டு தைரியத்த வரவச்சு, ஆரம்பிச்சேன்…
“நவீன்…stressful work day முடிஞ்சு வந்தா, வீட்டு வேலை செய்ய energy சுத்தமா இல்லப்பா. பசங்களோட wants ரொம்ப அதிகம் ஆகியிருக்கா இல்ல நான் ரொம்ப drain out ஆகிடறேனான்னு தெரியல…I so feel like a failure”னு சொல்லி வாய்மூடல…
நவீன் ஒரு குட்டி கோவத்தோட,
“எவ்வளவு தடவ சொல்றேன், ஏதாவது help வேணும்னா கேளுனு. நீ எதுவும் கேக்கலேனா, you are managing them fine னு தான நான் நெனைப்பேன். ரெண்டு தடவ நான் help offer பண்ணினபோது, நீ கோவிச்சிக்கிட்ட. அதுல இருந்து, “சரி…அவ கேட்டா, we will step in”னு விட்டுட்டேன். இப்ப நீ இப்பிடி சொல்றது, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வளர். But good that you finally voiced it out. உன் அளவுக்கு சமையல் செய்ய மாட்டேன் but மத்த வீட்டு வேலைகள்ல, I can give a hand”னு சொன்ன போது, ஒரு ரெண்டு மூணு தடவ, I pinched myself”, என காபி குடித்த போது நடந்தவற்றை ஒலிச்சித்திரமாய் முன் வைத்தாள் வளர்மதி, ஒரு பெருமிதம் கலந்த புன்னகையுடன்.

“பாத்தியா…so sometimes வாய தொறந்து கேக்கணும். கூட இருக்கறவங்க எல்லாரும் mind readers கெடையாது. by the way, இது office லியும் applicable ஆகும்”, என குமுதா கூற,

“புரியுது…எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சு, ஒன்னும் achieve பண்ணினா மாதிரி தெரியல. ஆனா அந்த ‘புருஷன வேலை வாங்கறோமே’னு ஒரு உருத்தல் மட்டும் இருந்துட்டே இருக்கு. போக போக சரி ஆகிடும்னு நினைக்கறேன்”, என கூறியபடியே, மேலாளருடனான சந்திப்பு ஒன்றிற்கு தயாரானாள் வளர்மதி.

“so happy to see the cheerful வளர் again தெரியுமா! Get going…lunch போது, continue பண்ணலாம்”, என தன் மடிக்கணினியில் வேலையை தொடர்ந்தாள் குமுதா.

“சொல்ல மறந்துட்டேன் பாரு..இன்னிக்கி lunch என்ன தெரியுமா?? carrot துருவல், frozen peas போட்டு, Maggi Noodles…and சமைச்சது….நவீன்”, என குதூகலத்துடன் மேலாளர் அறைக்கு விரைந்தாள் வளர்மதி.

பதிவின் ஒலிவடிவம்:

அன்று அலுவலகத்தில் மாதாந்திர சந்திப்பு. நகரத்தின் வெவ்வேறு இடங்களிலிருந்து வேலை செய்பவர்கள் சந்திப்புக்கு வர ஏற்றபடி, மாலை 6 மணிக்கு சந்திப்பு ஆரம்பித்தது.

“அட அனு …வர மாட்டேன்னு நினைச்சேன். பசங்கள யாரு பாத்துக்கறாங்க?”, என அணியில் இருந்த ஒரு பெண் என்னை வினவினாள்.

“ராஜ் சீக்கிரம் வந்ததுனால…”, என கூறி முடிப்பதற்குள்,

“ஓ…இன்னிக்கி ராஜ் தான் babysitting ஆ?”, என கூறியபடி சிரித்தாள் என் அணியில் இருந்த பெண். அருகில் இருந்த இன்னொரு அதிகாரியும் சிரித்தார்.

அந்த இடத்தில் ‘babysitting’ என்ற சொல்லின் பயன்படுத்தல் எனக்கு ஒரு கோபம் கலந்த வருத்தத்தை வரவழைத்தது.

வீட்டுக்கு வந்து என் கணவனிடம் கூறியபோது கூட, “சும்மா விளையாட்டுக்கு சொல்றதெல்லாம் சீரியசா எடுத்துக்காதே” என தட்டிக்கழித்தான்.

குழந்தைகளை அப்பாக்கள் பராமரிக்கும் போது, அதை ‘babysitting’ எனக்கூறுவது எனக்கு என்றுமே ஒரு நெருடலாகத்தான் இருந்துள்ளது.

சாதாரணமாக, அம்மா அப்பா இருவரும் ஒரு சில மணிநேரம் வெளியில் செல்ல வேண்டிய நிலை உண்டாகும் போது, குழந்தைகளை பார்த்துக்குக்கொள்பவர்களை ‘babysitter’ என அழைப்பது வழக்கம். பெரிதாக குழந்தைகளுடன் விளையாட வேண்டும், கதைகள் படிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் எதுவும்  இருக்காது. தாய் தந்தையர் திரும்பி வரும் வரையில், குழந்தைகளை பாதுகாப்பது மட்டுமே அங்கு எதிர்பார்ப்பாக இருக்கும்.

இதே தராசில் தந்தையின் பராமரிப்பையும் வைத்து பார்க்கிறார்களா என்ற குழப்பம் எனக்கு என்றுமே இருந்ததுண்டு

எழுத தலைப்பு கிடைத்தது நினைத்து மகிழ்ந்தேன். வேலைக்கு செல்லும் போது,  ரயிலில் எழுத ஆரம்பித்தேன்.

பெரும்பாலான வேலை இடங்கள் போல, என் அலுவலகத்திலும் ஆண்கள் எண்ணிக்கையே அதிகம். “பசங்கள யாரு பாத்துக்கறாங்க?”, என என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, ஆண் ஊழியர்களிடம் கேட்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்.

வீடுகளில் ஆண்கள் செய்ய வேண்டிய வேலை, பெண்கள் செய்ய வேண்டிய வேலை என்ற பாகுபாடு, எனக்கு ஒரு புதிராகவே இருந்துள்ளது. அதிலும் குழந்தை பராமரிப்பில் முக்கியமாக. தாய்ப்பால் குடிக்கும் குழந்தையெனில், தாயின் பிரத்யேக கவனிப்பு நிச்சயம் தேவை; ஆனால் புட்டிப்பால், பெரியவர்கள் உண்ணும் உணவுகள் போன்றவற்றை குழந்தை உட்கொள்ள ஆரம்பித்தப்பிறகு, ‘குழந்தைகளை தாயால் மட்டுமே பார்த்துக்கொள்ள முடியும்’ என்ற அறிவுரைகள் பிதற்றலாகவே எனக்குத் தோன்றுகிறது.

“பாத்துக்க 10 பேர் இருந்தாலும்…ஒரு தாயின் பாசத்துக்கும் அரவணைப்புக்கும் நிகராகுமா?”, என்றால், வெளி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் தாயிடம் இதை எதிர்ப்பார்க்கலாம் (அதுவும் அதை அவள் விரும்பி ஏற்றுக்கொண்டால்). ஆனால்  வெளி வேலைக்கும் சென்றுகொண்டு, வீட்டுக்கு வந்து, ‘தாயன்பு குறையாமல்’ குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்ப்பது…பகுத்தறிவற்ற செயலாகவே எனக்கு படுகிறது.

குழந்தைகள் இருக்கும் வீடுகளில், கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் போது, தாய் செய்யும் வேலைகள், தந்தை செய்யும் வேலைகள் என்ற பாகுபாடே தேவையற்றது என்பது என் கருத்து. வீட்டின் பணத்தேவைக்கு, இருவரும் வேலைக்கு சென்று பங்களிக்கும் போது, குழந்தை பராமரிப்பிலும் இருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தவறில்லை.

இப்படி குழந்தை பராமரிப்பில் சமத்துவம் அவசியம் என பேசும் அதே வேளையில், “குழந்தை எதுக்கு அழறான், எப்ப என்ன சாப்பிடுவானு எனக்கு தான் தெரியும்…நான் பாத்துக்கறேன்” என கூறும் வேலைக்குச் செல்லும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘சமூகம் ஏதாவது சொல்லிவிடுமோ’ என்ற குற்ற உணர்வா, ‘குழந்தை பராமரிப்பு’ என் மூளைக்கு மட்டும் தெரிந்த வித்தை என்ற எண்ணமா என்பதையெல்லாம் தாண்டி, இந்த பெண்கள், கணவர்களிடமிருந்து ‘குழந்தை பராமரிப்பில்’ கிடைக்கும் இன்பத்தை,  அபகரிக்கின்றனர் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

இங்கு எங்கள் ரயில்களில் கைக்குழந்தையுடன் தனியே பயணம் செய்யும் அப்பாக்களாகட்டும் அல்லது என் கணவனாகட்டும், இவர்களின் குழந்தை பராமரிப்பு தோரணை…அது மகிழ்ச்சி ததும்பும் ஒரு காட்சி! அவர்களுக்கே பிரத்யேகமானான கொஞ்சல்கள், வேடிக்கையான முகசுழிவுகள், என அவர்களின் குழந்தை கவனிப்பு வழிமுறைகள், நிச்சயம் பார்ப்பவர் முகத்தில் ஒரு புன்னைகையை புகுத்தும்.

வெளியில் அழைத்துப் போவதும், விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தருவதுடன் மட்டும் சில அப்பாக்களின் ‘குழந்தை பராமரிப்பு’ பட்டியல் முடிவடைவதை பார்க்கும் போது, பரிதாபமாக இருக்கும்.

குழந்தைகளுக்கு  சோறு ஊட்டும் போதும், குளித்துவிடும் போதும், சிறுநீர்/மலம் கழித்த  குழந்தையை  சுத்தம் செய்யும் போதும் ஏற்படும் அந்த பிணைப்பு…அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது.  அழுது கொண்டிருக்கும் குழந்தை, பெரியவர்களின் கோமாளித்தன செய்கைகளை பார்த்தோ, அல்லது அவர்கள் பாடும் இனிய/அபஸ்வர பாடல்களை கேட்டோ, அழுகையை நிறுத்தி, சிரிக்க ஆரம்பித்தால்…அந்த நாள் முழுக்க சந்தித்த கசப்பான விஷயங்கள்  அனைத்தும் தவிடுபொடியாய் போகும். இந்த அழகிய தருணத்தையும், அனுபவிக்க தவறுகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் அவர்கள் அனுபவிக்க, இரு மனமாற்றங்கள் தேவைப்படுகிறது.

“முதல செய்யும் போது,  தடுமாறுவாரு; பழகினதுக்கு அப்பறம் சரியாப் போய்டும்”, என உணர்ந்து, குழந்தை பராமரிக்கும் வேலைகளை கணவனுடன் பகிர்ந்துக் கொள்ள, மனைவியானவள் முன்வருவதும்,

“வேலைக்கும் போயிட்டு, குழந்தையையும் அவ மேனேஜ் பன்றானா, என்னாலயும் முடியனும்ல? என உணர்ந்து, “நான் ஏதாவது செய்யட்டுமா?”, என உதவ கணவன் முன்வருவதும் மிக அவசியம்.

அந்த மனமாற்றம் நிகழும் வரையில்,

“குழந்தைய பாத்துக்கறது எல்லாம் ஒரு தாயோட கடமை; என்னிக்கோ ஒரு நாள் வேணும்னா, அப்பா பாத்துக்கலாம்”, என்ற வழக்கமும், அதை ‘babysitting’ என கேலி செய்யும் செயலும் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

பதிவின் ஒலிவடிவம்:

 

நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழ் தான் படிச்சேன். என் கணவன் கூட அப்பிடித்தான்.
எனக்கு பள்ளி படிக்கும் போது, தமிழ் பாடம் பிடிக்கும். அதுக்கு காரணம், வீட்ல பேசற மொழி தான, இதுக்குன்னு தனியா மெனக்கெட வேண்டாம்னு ஒரு காரணம் தானே தவிர, தமிழ் பற்றுனு பொய் சொல்ல மாட்டேன். அப்பறம் கல்லூரில பொறியியல் படிச்சதுனால தமிழ் பாடம் இல்ல. அதுக்கு அப்பறம் வேலை, வெளிநாட்டு வாழ்க்கைனு தமிழோட அந்த ஒரு பிணைப்பு பேச்சு வழக்குல மட்டும் இருந்தது.

இங்க நாங்க இருக்கற பகுதில முன்னெல்லாம், வட இந்தியர்கள் நடத்தற மளிகை கடைகள் தான் இருக்கும். அங்க பொருள் வாங்கப்போனா, நாங்க இந்தியர்கள்னு தெரிஞ்ச உடனே ஹிந்தில பேச ஆரம்பிப்பாங்க.
இந்தியால ஒரு நாலு மாநிலங்கள்ல மட்டும் பேசப்படற மொழிய, நாடு முழுக்க பேசுவாங்கனு நினைக்கற அந்த அறியாமை எப்பவுமே ஒரு நெருடலா இருந்திருக்கு. இதுல, “இல்ல, எங்களுக்கு இந்தி தெரியாது”னு சொன்னா, பெரும்பாலும் ஒரு அதிர்ச்சி/ஆச்சரியம் கலந்த, “அப்பிடியா….அப்ப வேற எப்பிடி பேசிப்பீங்க”னு ஒரு கேள்வி வரும் பாருங்க….”சைகைல தான் பேசிப்போம்”னு சொல்ல தோணும், அப்பறம், “நாங்க தமிழ் னு ஒரு மொழி பேசுவோம்”னு சொல்லுவோம்.

அது தான் பொறினு நினைக்கறேன். அப்பறம் தான், “என் மொழிக்கென்ன கொறைச்சல்”னு ஒரு உத்வேகத்துல, பிதற்றல் வலைப்பதிவ ஆரம்பிச்சு, எழுத தோணும்போதெல்லாம் என் கருத்துக்கள பதிவு செய்யறேன்.

அப்பறம் ‘இந்தி திணிப்பு’, ‘ஆங்கில மோகம் பத்தின பதிவுகள் படிச்சும், பேச்சாளர்கள் உரைகள கேட்டும், தமிழ் மேல இன்னும் கொஞ்சம் அதிகமா பற்று ஏற்பட்டதுனு சொல்லணும்.

அதோட ஒரு வெளிப்பாடுதான், பசங்களுக்கு தமிழ் பேர்தான் வைக்கணும்னு நாங்க எடுத்த முடிவு. ஒரு பேர தேர்ந்தெடுத்து, ரெண்டு பேருக்கும் பிடிச்சு போற அந்த சந்தோஷம் இருக்கு பாருங்க…! அப்பறம் அந்த பேர தினமும் பயன்படுத்தும் போதும், ‘தீரன்’ னு யாராவது தெரியாம சொல்லும்போது, “இல்லங்க அது திறன்”னு சரி செய்யும் போதும், அதே மகிழ்ச்சி ஒவ்வொரு முறையும்!!

தமிழ் பேர் வச்சுட்டோம் சரி. இப்ப வெளில முழுக்க முழுக்க ஆங்கிலத்துல பொழங்குவானே, வீட்ல தமிழ் பேசுவானானு ஒரு பயம் இருந்தது. தெரிஞ்சவங்க கூட, “இப்ப தமிழ் ல பேச ஆரம்பிச்சாலும், ஸ்கூலுக்கு போனதுக்கு அப்பறம் அதெல்லாம் மறந்துடுவாங்க அனு” னு சொல்லும் போது, அந்த பயத்தோட ஒரு வருத்தமும் தலைதூக்கும்.

ஆனா எல்லாப் பசங்களும் அப்படித்தான் இருப்பாங்கன்னு, முயற்சியே பண்ணாம, கை விட்டுட முடியாதுனு முடிவு செஞ்சோம்.
அந்த உத்வேகத்த முக்கியமா தூண்டினது ரெண்டு விஷயங்கள்.

1. மனித மூளையோட ஆற்றல் – சின்ன குழந்தையா இருக்கும் போது, மனித மூளை அவ்வளவு வேகமா எல்லாத்தையும் உள்வாங்கிக்குமாம். 5 வயசுக்கு முன்னமே, மூளைக்கு ரெண்டு மூணு மொழிகள் கத்துக்கற திறமை இருக்காம். அப்படி கத்துக்கிட்டு, அத மாத்தி மாத்தி பயன்படுத்தும் போது, மூளைல இருக்கற நரம்பு பின்னலமைப்பு (Neural connectivity) வலுவடையுமாம். ஒரே சமயத்துல நாலு மொழிகள் கூட, பிரச்சனையே இல்லாம குழந்தைங்க கத்துப்பாங்களாம்.

2. வீட்ல பொதுவான மொழி பயன்பாடு – என்னதான் வேலை இடத்துல நானும், என் கணவனும் ஆங்கிலம் பேசினாலும், வீட்ல பயன்படுத்தறது தமிழ் மட்டும் தான். சமூகப்பிரச்னைகள் பத்தி பேசும்போதோ இல்ல சாதாரணமா வீட்டு நடப்பு பத்தி பேசும்போதோ, முழுக்க முழுக்க ஆங்கிலப் பயன்பாடு ஏற்பட்டதே இல்ல. இப்பிடி இருக்கும் போது, வீட்ல ஒரு நபர் மட்டும் ஆங்கிலத்துல பேசிட்டு இருந்தா, நானும் என் கணவனும் எங்க இயல்பான மொழிய விட்டுட்டு, ஒரு அன்னிய மொழில பேச வேண்டியிருக்கும். வேலை இடத்துலயே சில சமயங்கள், கூட வேலை பாக்கறவங்களுக்கும் தமிழ் தெரிஞ்சிருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு நினைக்கற நான், என் மகன் கிட்ட பேசும் போது, எனக்கு பழக்கப்பட்ட, பிடிச்ச மொழில பேச நினைக்கறது நியாயம் தானே!!

அதுக்காக பையன் ஆங்கிலக் கலவையே இல்லாம தமிழ் பேசணும்னு எல்லாம் ஆசை இல்ல. ஏனா நாங்களே அப்படி எல்லாம் பேசறது இல்ல. எங்களோடயும், ஊர்ல இருக்கற தாத்தா பாட்டி கூடவும் பேசற அளவுக்கு தமிழ் தெரிஞ்சிருக்கணும். அப்பறம் அவனுக்கா இஷ்டம் இருந்தா, நாங்க விரும்பி கேக்கற தமிழ் பாடல்கள கேக்கட்டும், தமிழ் எழுத பழகட்டும்.

நாங்க எங்க முயற்சில கொஞ்சம் வெற்றி அடைஞ்சிட்டு வரோம்னு தான் நினைக்கறேன் 🙂 நானோ என் கணவனோ, பேசற வாக்கியங்கள அவனும் பேச எத்தனிக்கிறான். தமிழ் பாட்டுக்கள விரும்பி கேக்கறான் (தற்போதைய விருப்பப் பாடல்கள்…”லாலாக்கு டோல் டப்பி மா’ மற்றும் ‘விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குச்சிக்கமா’ 😉 ) இன்னும் பள்ளிக்கு போக ஆரம்பிச்சா, ஆங்கில புழக்கம் இன்னும் அதிகமாவே இருக்கும். அப்பவும் அவனுக்கு தமிழ் மேல இதே ஆவல் இருக்கணும்னு ஆசை. முயற்சிய மட்டும் கை விடறதா இல்ல!!!