ஓகஸ்ட், 2010 க்கான தொகுப்பு

“நல்லா பேச ஆரம்பிச்சிட்டாங்க..ஸ்கூல்க்கு இப்ப அனுப்பினா சரியா இருக்கும்”, என ஒரு குடும்பத் தலைவியின் ‘To do ‘ பட்டியலில் இருந்து ஒன்றை அவிழ்த்து விட்டாள் அம்மா.
“அம்மா ஸ்கூல்க்கு போ வேணாம்…விளையாடனும்”, என மழலை மொழியில் அடம்பிடித்தேன்.
“ஸ்கூல்ல நிறைய பேர் இருப்பாங்க; நல்லா விளையாடலாம்”, என கனிவான பேச்சால் கப்பலை கவிழ்த்தாள்.
கப்பல் கவிழ்ந்ததோடு கேளிக்கை கூத்து அனைத்திற்கும் முற்று புள்ளியும் பிறந்தது.

“ஓடி விளையாடு பாப்பா”, என்ற பாரதியின் வரிகளை நன்று படித்தேன்.
“படித்து தேர்வெழுது பாப்பா…நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா”, என்ற வரிகளை பின்பற்றினேன்.

“ரொம்ப பெருமையா இருக்குமா…இந்த மார்க்குக்கு இன்ஜினியரிங் கட்டாயம் கிடைக்கும்”, சந்தேகம் தேவையில்லை…’To do ‘ பட்டியலின் தொடர்ச்சியேதான்.
“உனக்கு எங்க போச்சு புத்தி”, என்ற உங்களின் ஆவேசக்குரல் கேட்கிறது.

“நீ தனி மரமல்ல; பரந்துவிரிந்த தோப்பின் ஒரு அங்கம். அத்தோப்பின் விதிப்படி நடப்பாயாக”, என்றது ‘சமுதாயம்’.
அச்சமுதாயம் செய்த மூளை சலவையின் காரணமாக சில பல பத்தாம் பசலி சிந்தனைகளை உள்வாங்கினேன்… பொறியியல் படித்தேன்!

“நிறைய மதிப்பெண்களின் பலன் யாதெனில் கண்மூடி
பொறியியல் மருத்துவம் படித்தல்”
“நற்பள்ளி நாடி மதிப்பெண் பெறத்தள்ளாடி அங்கிங்கோடி
பொறியியல் படிப்பதே நற்செயல்”

இத்திருவாசகங்களை மீறி பொறியியல் தவிர வேறொரு படிப்பா…? சமூகத்தின் வெட்டிப்பேச்சுக்கு ஆளாக அன்று நான் தயாராக இல்லை!
விரும்பி படித்தேனா, படித்ததை விரும்பினேனா என்ற கேள்விகளுக்கு இன்று வரை விடையுமில்லை!

பிறகு? பிறகென்ன திரும்பவும் அந்த ‘சமுதாயம்’ திருப்தி அடையவும், சமுதாயத்திற்கு பயப்படும் பெற்றோர் திருப்தி அடையவும் படித்தேன்… 4 வருடங்கள் படித்தே கழித்தேன்!
படித்து முடித்தேன், வேலை தேடி அலைந்தேன், நல்ல வேலையில் அமர்ந்தேன், மண வாழ்க்கையினுள் நுழைந்தேன்…நிம்மதி பெருமூச்சு விட்டது சமுதாயமும், அதன் சொல் படி நடக்கும் என் பெற்றோரும்!

திருமணம் முடிந்தது…இனி எனக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்தாயிற்று; என் விருப்பப்படி அதை கழிப்பேன் என்று நினைத்து முடிப்பதற்குள்…
“கல்யாணம் நல்ல படியா முடிஞ்சது…ஒரு குழந்தையும் கையோட பெத்துட்டா முழுமை(??) அடைஞ்சிடும்”, மீண்டும் அதே குரல்…சமுதாயமும் அதில் அங்கம் வகிக்கும் என் பெற்றோரும்!!

“செல்வத்துள் செல்வம் மழலைச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை”
“பூப்படைதல் மணமுடித்தல் குழந்தை சுமத்தல் இவையனைத்தும்
ஒரு பெண்ணுக்கு சேர்க்கும் சிறப்பு”
“தாய் ஆகும் பொழுதுதான்…ஒரு பெண் முழுமை அடைகிறாள்”
“அந்த மழலையின் சிரிப்பில் உன் துக்கம் அனைத்தும் மறையும்”

அய்யோ இந்த சமுதாயத்தின் வாயை மூட இங்கு யாருமே இல்லையா??
குழந்தையின் சிரிப்பு, சினுங்கல், ஏன் அழுகைக்கூட அழகு தான்….அதுக்கு??
தாய் தந்தையுடன் வாழ்ந்த காலத்தில் அவர்களின் விருப்பதிற்கிணங்க நடந்துக்கொண்டேன்;
இப்பொழுது எனக்கென ஒரு தனி வாழ்வு அமைந்தாயிற்று; இப்பவும் வந்து ‘நொய் நொய்’னா எரிச்சலா இருக்காது??

“சமையலறை என்பது பெண்ணின் சொத்து; ஆண் பங்குக்கு வருவது என்பது வெட்டி பேச்சு”
“அச்சம், மடம், நாணம் என்பவை ஒரு பெண்ணானவள் வாங்கி வந்த வரங்கள்; அவற்றிற்கு பங்கம் ஏற்படாமல் பார்த்து கொள்வது அவளின் தலையாயக் கடமை”, இது போன்ற சில பழமையான ‘பொன்மொழிகளின்’ வரிசையில்,
“24 வயதில் திருமணம், மணம் முடித்த 1 வருடத்தில் கையில் குழந்தை”, என்ற ஒன்றும் சமூகத்தினால் திணிக்கப்பட்டது என்பது என் கருத்து.

‘பிதற்றல்’ என முதல் இரண்டை ஒதுக்கித்தள்ளிய எனக்கு….மூன்றாவது மட்டும் எம்மாத்திரம்!

“சமூகமே! என் வாழ்வினை முழுமையடையச்செய்யவும், என் துக்கங்கள் மறையவும், குழந்தை அல்லாத பற்பல வழிமுறைகள் என் கைவசம் உண்டு; மழலைச் செல்வத்தின் வருகைக்கான தருணத்தை நான் முடிவு செய்துக்கொள்கிறேன். உன் அக்கறைக்கு நன்றி! கிளம்பு காத்து வரட்டும்!!”

இங்கிலீஷ்ல தான் எழுதனும்னு நினைச்சேன்….ஆனா ஒரு பொருள அவ்வளவு விரும்பினோம்னா, அத தாய் மொழிய தவிர வேற எந்த மொழில விவரிச்சாலும் இன்னும் கூட பாராட்டி இருக்கலாமோன்னு தான் தோணும்.

“கண்ணே உன்னை புகழ்ந்து தள்ள நினைக்கிறேன்
நினைத்த மாத்திரத்தில் வாயில் எச்சில் வெள்ளம் ஊற்றெடுக்க
மண்ணை கவ்வும் பன்னியாய் தொப்பென விழுகிறேன்”

“போரூருக்கு எந்த பஸ் தம்பி என பெரியவர் வினவ 65 என்றேன்;
தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை பார்த்து எவ்வளவு அடி உயரம் இருக்கும் என வியந்த தோழியிடம் 65 என்றேன்;
பிறந்த நாளன்று என் அகவையை கேட்ட அடுத்த வீட்டு மாமியிடம் 65 என்றேன்;
இந்த பித்தம் தனிய ஒரே வழி என முடிவு செய்த கால்கள் முதலில் தென்பட்ட இந்திய உணவகத்தினுள் நுழைந்தது;
“ஒரு பிளேட் சிக்கன் 65 “, என வாய் கெஞ்சியது;
மேசையில் பார்த்த மாத்திரத்தில் 65 பற்கள் வெளியே தெரிய சிரித்தேன்;
65 நொடிகளில் தட்டை காலி செய்தேன்;
65000 வாட்ட் விளக்கு போல் என் முகம் பளிச்சிட்டது!”

சரி சரி கொஞ்சம் ஓவரா இருக்குல.
என்ன பண்ண, நேத்துதான் வீட்டுல நல்லா வெட்டினேன். ஆனா இன்னிக்கி இத எழுதும் போது திரும்பவும் யாராவது செஞ்சு கொடுத்தா நல்லா இருக்குமேன்னு தோணுது.
சிக்கன வெட்டும் போது ஒரு சின்ன நெருடல் இருக்கத்தான் செய்யுது. சாகறுதுக்குனே பொறந்திருக்கேன்னு தோணும். அதெல்லாம் நினைச்சா வேலைக்கு ஆகுமா….சொல்லுங்க!!
இத தயார் செய்ய 65 பொருட்கள் ஒன்னும் தேவை இல்லை…சந்ததி சாக்குல இதையும் சொல்லிக்கிறேன்… மிச்ச பதிவு இங்கிலிஷ்ல தான்.

Serves – 2 (and if you are planning to have friends coming home…make sure you either increase the quantity of the ingredients, especially the chicken or let your friend know that you are preparing for some exams or having a terrible stomach ache and that the catch up needs to be postponed…c’mon I am sure he/she will understand!)

Chicken breast – 400gm
Yogurt – 2-3 Tbsp (Yeah…I settled for the low fat version, but then the word ‘healthy’ disappeared as soon as I dropped the first set of chicken pieces in the frying pan!)
Chilli powder – 1 Tbsp
Ginger Garlic paste – 1 Tbsp
Tandoori colour – 1.5 tsp
Salt to taste
Lemon juice – 1-2 Tbsp
and last but not least OIL – 4 cups

1. Wash the chicken and cut into bite size pieces.
2. In a bowl, mix rest of the ingredients (excluding oil). Drop the chicken pieces in this mixture and mix thoroughly.
3. Refrigerate for atleast an hour.
4. After an hour, heat oil in a pan. Drop the marinated chicken pieces slowly and fry for say 5-6 minutes till the pieces become golden to dark brown.
5. To console your guilty conscience, drain excess oil in paper towels (as if thatz gonna make the recipe healthy!!)
6. Go for a generous squeeze of lemon juice on the fried pieces.

Toss one into your mouth….and just hear the voices in your head saying ‘Thank You’!!