இதுங்க ரவுசு தாங்கலியேப்பா!!

Posted: மே 20, 2011 in பிதற்றல்
குறிச்சொற்கள்:, , , , ,

கடசில எழுத உக்காந்துட்டேன்! இந்த தடவை சப்பகட்டு எதுவும் இல்லீங்க…ஆனா எழுத ஏதாவது உந்துதல் இருக்கனும்ல…நல்லதோ கெட்டதோ! அதுக்காக அம்மாவின் அபார வெற்றியபத்தி எழுது, கருணாவின் கர்ணகொடூரமான தோல்விய பத்தி எழுதுனு அறிவுரை கொடுக்காதீங்க ப்ளீஸ்!!

தன்னபத்தி ரொம்ப உயர்வா நினைக்கறவங்க, வேற எவனோட பிரச்சனையும் தன் பிரச்சனைக்கு முன்னால கால் தூசுக்கு சமம்னு நினைக்கறவங்க, நண்பர்களோ, தெரிஞ்சவங்களோ ஒரு கூட்டமா நின்னா தனக்கு பிடித்தமான அல்லது தன்னபத்தின விஷயங்கள பத்தி மட்டும் பேசணும்னு நினைக்கறவங்க, பேசவும் செய்யறவங்க…இது மாதிரி ஆசாமிகள நான் எப்பவும் பாத்து வியப்படைஞ்சது உண்டு. சமீபத்துல கொஞ்சம் நிறையாவே இதுக்கு எடுத்துகாட்டுகள பாத்ததுனால…இத பத்தி எழுதினா என்னனு தோணிச்சு.

இங்க கட்டாயமா பேசியே தீரணும்னு நினைச்சது ‘facebook ‘ பத்தி. இங்க ரெண்டு வாரமா தலைப்பு செய்திகள்ல பேசபடற ஒரு விஷயம், ‘planking ‘.
‘இங்கல்லாம் படுப்பாங்களா’னு நினைக்கற இடங்கள்ல குப்பற படுத்து கை ரெண்டையும் விரிச்சு வச்சு, புகைப்படம் எடுக்கறதுதான் இந்த ‘planking ‘. ரொம்ப காலமா இருந்துட்டு வர்ற இந்த ‘பொழுதுபோக்கு’, இப்ப சூடு புடிக்க காரணமா இருந்த சம்பவம் பிரிஸ்பேன்ல நடந்தது…ஒருத்தன் போன வாரம் இது மாதிரி planking செஞ்சு ‘பிரபலம்’ ஆகபோறேன்னு, ஏழாவது மாடில உப்பரிகை(balcony ) மேல படுத்து, தவறி கீழ விழுந்து செத்தான்.

எக்கச்சக்கமா ‘likes’, ‘comments’ வரணும்னு கோமாளித்தனமா ஏதாவது செய்யறது இப்ப ‘you tube’லயும், ‘facebook’லயும் ரொம்ப நெறையாவே பாக்க முடியுது. நம்ம ஊர் மக்கள் இப்படி எல்லாம் பண்றது கெடையாது. ‘ஐயே உசுரு போனா நீயா குடுப்பே”னு கேக்கறவங்க. நான் ‘facebook’ல உறுப்பினராகி ஒரு 5 – 6 மாசம்தான் ஆகுது. இந்த சமயத்துல நான் பாத்த சில வேடிக்கையான விஷயங்கள்…
“I am about to start something important today. Hope it succeeds” இது facebookல நிகழ்நிலை (status);
என் தோழி சொன்ன இதே மாதிரி இன்னொரு நிகழ்நிலை, ‘‘and today I got a special ‘gift’ from a special ‘someone’’

சொற்கள் வேறையா இருந்தாலும், அவங்க சொல்ல வரும் கருத்து என்னவோ ஒன்னு தான், “மச்சி காஞ்சு கெடக்கேன்பா….ஒரு நாய் கூட என்ன கண்டுக்க மாட்டேங்குது; ஒரு ‘like ‘, ‘comment ‘ போட்டீனா புண்ணியமா போகும்”

இது ஒரு ரகம்னா, ‘ “எப்படி போகுது வாழ்க்கை”னு ஏன்டா கேட்டோம்’னு தவிக்க வைக்கறவங்க இன்னொரு ரகம். எப்படா கேப்பாங்கன்னு காத்திட்டு இருப்பாங்க போல. ‘Start music ‘ கணக்கா ஆரம்பிப்பாங்க பாருங்க…அடுத்த தடவை தவறிகூட கேப்பேன்னு நினைக்கறீங்க?!?!

இருவழி உரையாடல் (two – way conversation ) சொல்லுவாங்கல. ரெண்டு பேர் பேசும் பொது இந்த மாதிரி உரையாடல் தான் இருக்கும்னு நினைப்போம். இது மாதிரி ஆளுங்க…”பரவாயில்லைபா …ரெண்டுமே என் வழியாவே இருக்கட்டும்”னு பேசுவாங்க…கழுத்தறுப்பாங்க!!!

இந்த ரெண்டாவது ரகத்திலியே கொஞ்சம் மேம்பட்டவங்க…தனக்கு இருப்பது மட்டுமே பிரச்சனை…வேற எவனாவது பிரச்சனைன்னு சொன்னா..”அவன் சின்ன பையன்…வாழ்க்கைல இன்னும் ஒன்னும் சந்திக்கல”னு வாய அடைப்பாங்க.
“எனக்கு ஏற்பட்ட கஷ்டமெல்லாம் நீங்க சந்திச்சிருந்தீங்க…வேணாங்க நீங்க நல்லா இருக்கணும்”னு சொல்லுவாங்க பாருங்க….பொளீர்னு நடுமண்டைல கொட்டி, “டேய் அடங்கவே மாட்டியாடா”னு கேக்க தோணும்.
கொஞ்சம் நல்லாவே பொலம்பி தீத்துட்டேன்னு நினைக்கறேன். ஒரு பாரமே கொறைஞ்சா மாதிரி இருக்குங்க. “என்னபா பிரச்சனைய சொல்லிபுட்டு தீர்வ சொல்லாம ‘சுபம்’ போடறியே”னு கேக்கறீங்களா??
ரெண்டு காது இருக்குல…ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுலவுடுங்க. ரொம்ப ஓவரா போச்சுனா ஒரு சக தோழி/தோழர்கிட்ட பொலம்பி தள்ளுங்க; அவங்களும் ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட வாய்ப்புகள் அதிகம்…அது அவங்க பிரச்சனைங்க!!! இல்ல என்னமாதிரி ஒரு பதிவு எழுதுங்க. அம்புட்டுதேன்!!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s