மேற்கில் என் மனம் கவர்ந்தவை – I

Posted: மார்ச் 18, 2012 in பிதற்றல்
குறிச்சொற்கள்:, , , , , ,

“TV பாத்துக்குட்டே தண்ணி குடும்மானு கேப்பேங்க “break வரட்டும்…கொண்டு வரேன்னு சொல்லுவா”,
“சோறு போட சொல்லி கேட்டா, 10 தடவை கேட்டதுக்கு அப்பறம் மெதுவா எழுந்திருப்பாங்க”. இந்த ஞாயித்துக்கிழமை நீயா நானா பாத்திருந்தீங்கனா…இது ‘எழுத்து வடிவத்தில் மறு ஒளிபரப்பு’னு நினைப்பீங்க. பாக்காதவங்களுக்கு,
இந்த வார தலைப்பு…வீடுகள்ல தொலைகாட்சிகளின் தாக்கம் பத்தினது
வந்திருந்த சில ஆண் சிங்கங்கள் வேலை முடிச்சிட்டோ, கல்லூரில இருந்தோ வீடு திரும்பும் போது, வீட்டுத்’தலைவிகள்’ அதாவது ‘homemakers’, அந்த தொலைக்காட்சிய கட்டிக்கிட்டு அழுதுட்டு இருப்பாங்களாம். அந்த நேரத்துல இந்த ஆண் மகன்கள் அப்படியே நிற்கதியா கவனிப்பார் இல்லாம நின்னுகிட்டு இருப்பாங்களாம். இதுல சிலருக்கு அந்த மாதிரி கோபம் வருமாம்…ஒரு பிரஹஸ்பதி டிவி யவே உடைச்சுட்டானாம்.
இந்த நிகழ்ச்சிய பாக்கும் போது, இங்க என்னோட வேலை செய்யற ஒரு பெண் தோழி அவங்க பையன பத்தி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. அவங்க பையனுக்கு ஒரு 7-8 வயசு இருக்கும். அவன் T.V பாத்துக்கிட்டோ இல்ல சும்மா பொழுத கழிச்சுகிட்டு இருக்கும் போது, “ரொம்ப தாகமா இருக்கு”னு சொல்லுவானாம். என் தோழி உடனே, “தண்ணி குடிச்சா தாகம் தணியும்; அங்க டேபிள் மேல தான் இருக்கு”னு சொல்லுவாங்களாம். “சின்ன வயசுல இருந்தே ‘மத்தவங்கள வேலை வாங்கினாத்தான் என்ன’ மாதிரியான எண்ணங்கள வளர விடாம தடுக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்; ஆனா parents தான சொல்லி குடுக்கணும்”னு என்கிட்ட சொன்னாங்க.
நினைச்சு பாத்தீங்கனா, நம்ம ஊர்ல ‘கலாச்சார சீரழிவு’ பத்தி எப்பெல்லாம் பேசபடுதோ, அப்பெல்லாம், மேற்கு உலகம், அங்க இருக்கும் பழக்கவழக்கங்கள் பத்தின பேச்சு அடிப்படாம இருக்காது.
‘Aping the west ‘னு சொல்லி கேள்வி பட்டிருப்பீங்க. இந்த நீயா நானா நிகழ்ச்சியிலியே நெறைய தடவை பாக்க முடியும். மேற்கத்திய உடைகள, உணவு பழக்கவழக்கங்கள விரும்பி நம்ம ஊர்ல ஏத்துக்கறத கண்கூடா பாக்கலாம். அத பாக்கும் போதெல்லாம், உணவு உடைகள ஏத்துக்கற மாதிரி, ஏன் மேற்கத்திய குடும்ப அமைப்பு இல்ல அவங்க குழந்தை வளர்ப்பு முறைல இருக்கற நல்ல விஷயங்கள ஏன் ‘ape ‘ பண்ண மாட்றாங்கனு நினைப்பேன்.
“தனி மனிதனா, ஒரு குடும்பமா, ஒரு பொது இடத்துல, சுதந்திரமா இருப்பேன்; சந்தோஷமா இருப்பேன்; ஆனா அது மத்தவங்களுக்கு இடையூறா மட்டும் இல்லாம பாத்துப்பேன்”; இந்த ஊர்ல பெரும்பாலும் மக்கள்கிட்ட இந்த மனப்பானமைய பாக்கலாம். ரயில்ல போகும் போது அலைப்பேசில பேசறதா இருக்கட்டும், இல்ல பயணம் போது பாட்டு கேக்கறதா இருக்கட்டும், பக்கத்துல இருக்கறவங்களுக்கு தொல்லை மட்டும் இருக்காது.
இங்க குழந்தை வளர்ப்புல இவங்களோட அணுகுமுறை ரொம்பவே ஆச்சரிய பட வச்சதுன்னு தான் சொல்லனும்.
இந்தியால இருந்த வரைக்கும் நான் பாத்ததெல்லாம்,
–> ஒரு பொண்ணு கர்ப்பமா இருந்தா…அந்த பத்து மாசத்துக்கு அவ மகாராணிதான். வீட்ல மட்டும் இல்ல…அது ரோடா இருந்தாலும் சரி…கடைகளா இருந்தாலும் சரி. தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, யாரா இருந்தாலும்…அந்த பொண்ண ஒரு பூ மாதிரி நடத்தற விதம்…கண் கொள்ளா காட்சி!! ஆனா அந்த குழந்தை வெளிய வந்ததுக்கு அப்பறம்…ஒரு ஈ காக்கா கூட அவள தீண்டாதுங்றது வேற விஷயம்.
–> ஒரு அன்னையானவள்…குடுக்கற அன்பு ரொம்ப அவசியம்; அந்த குழந்தை நல்லவனா இல்ல கெட்டவனா ஆறதுக்கு அவதான் பொறுப்பு”
–> என்னதான் அப்பாக்களுக்கு குழந்தைகள பிடிச்சாலும்…அந்த குழந்தைய வேளாவேளைக்கு சோறு குடுத்து பராமரிக்கறதுல ஒரு தாய அடிச்சுக்க முடியாது”
–> குழந்தைங்கன்னா நல்லா அழத்தான் செய்யுங்க; இது வேணும் அது வேணும்னு அடம் புடிக்கத் தான் செய்யுங்க; மத்தவங்களோட தன் பொம்மையோ, சாப்பாட்டையோ பகிர்ந்துக்கலனா தப்பே இல்ல; சின்ன பசங்க அப்படி தான் இருப்பாங்க
இது மாதிரியான ‘அனுபவசாலிங்களின் அறிவுரைகள’ மட்டும் கேட்டு புளிச்சு போன என் காதுக்கு, என் கூட வேலை செய்யறவங்களோட பேச்சு, ஒரு புது இசையமைப்பாளரோட ராகத்த கேட்ட அனுபவம்!!
நம்ம ஊர்ல குழந்தை பெத்துக்கறதுக்கு, “மாமியாருக்கு வயசாகுது”, “அப்பறம் மலடின்னு ஊர் உலகம் சொல்லும்”, “இப்பவே பெத்துகிட்டாத்தான் பையனோட படிப்பு, கல்யாணம் எல்லாத்தையும் பாக்க முடியும்”, மாதிரியான உப்பு சப்பிலாத, கேக்கவே நாராசமா இருக்கற காரணங்கள சொல்லி கேட்டிருக்கேன். இந்த மாதிரி குப்பைகளுக்கு அடில, ‘ஒரு ஆணும் பொண்ணும்…ஒருவர் மேல ஒருவர் கொண்டிருக்கிற அன்ப வெளிப்படுத்தும் பல வழிகள்ல குழந்தை பெத்துகறதும் ஒன்னு’, என்ற உண்மையான காரணம் பொதைஞ்சே போச்சுனுதான் தோணுது.
அந்த விஷயத்துல மேற்குலகுல தெளிவா இருக்காங்கனுதான் சொல்லனும். அதனால குழந்தை பெத்துக்கணுமா, வேண்டாமா, எப்ப பெத்துக்கணும், மாதிரியான முடிவுகள சம்பந்தப்பட்ட ஆணும் பொண்ணும் மட்டும் எடுக்கறாங்க.
ரெண்டு பேரும் சரின்னு முடிவெடுத்ததுனால…அந்த குழந்தை வளர்ப்புல ரெண்டு பேருக்குமே சம பங்கு இருக்கறதுதான யதார்த்தம்.
அன்னிக்கி என்னோட ஆண் தோழர் ஒருவர், அவரோட குழந்தைய ஆபீஸ்க்கு கொண்டு வந்திருந்தாரு. என்னனு கேட்டதுல, அவர் மனைவியோட மகப்பேறு விடுப்பு (maternity leave )முடிஞ்சு வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்களாம். குழந்தைய ஒரு 6 வாரம் இவர் பாத்துக்கறதா இருக்காராம்.
குழந்தைகளுக்கு இவங்க சொல்லி குடுக்கற மரியாதையாகட்டும் , பழக்க வழக்கங்களாகட்டும், ஒரு பிரமிப்பத்தான் உண்டாக்குது.
இந்தியால என் நண்பர்கள், உறவுகள் வீடுகள்ல 5 -6 வயசு குழந்தைகள பாத்திருக்கேன். தனக்கு ஏதாவது பிடிக்கல, இல்ல கேட்டது வாங்கித்தரலனா, உடனே ஒரு அழுகை இல்ல கோபத்த வெளிப்படுத்தற ஒரு பழக்கம். இங்க மேற்குலகுல, குழந்தைகளுக்கு விரும்பின பொருள் கெடைக்கலனா, அதிருப்திய சாதரணமா அந்த சிறுமியோ, சிறுவனோ பேச்சு வடிவத்துல வெளிப்படுத்துவாங்க. அம்மாவோ அப்பவோ அத அப்பறம் மெதுவா விளக்குவாங்க.
இப்ப சமீபத்துல பாத்த ஒரு வேடிக்கையான விளம்பரம் ஒன்னு நினைவுக்கு வருது; நான் மேல சொன்ன ‘எடுத்து விளக்கர அம்மா அப்பா’ ஒரு ரகம்னா…இந்த அம்மா ஒரு தனி ரகம் 🙂

“என்னம்மா அட்வைஸ் குடுக்கிறியா…கொஞ்சம் அடுப்ப அணைச்சா நல்லா இருக்கும்”,னு பின்னூட்டம் இடப்போறவங்களுக்கு…
நம்ம ஊர்ல வழிவழியா இதுதான் சரி, ‘பெரியவங்க அனுபவத்துல தெரிஞ்சிகிட்டு சொல்றாங்க..தப்பா இருக்காது”னு கடைப்புடிக்க படற பல விஷயங்கள்…இங்க மேற்கு உலகத்துல எவ்வளவு மாறுபட்டு இருக்குனு பாக்கறேன்; அதிசயிக்கறேன்; பதிவா எழுதறேன்.
“இதெல்லாம் வேலைக்கு ஆகாது…படிக்கறதுக்கு வேணும்னா நல்லா இருக்கும்”னு நினைச்சீங்கன்னா free யா விடுங்க.

பின்னூட்டங்கள்
 1. கீதமஞ்சரி சொல்கிறார்:

  பிதற்றல்னு பேர் வச்சிட்டு இப்படி பிச்சி உதறுறீங்களே அனு. பிரமாதம். உங்களோடு கை குலுக்குவதில் மிகவும் மகிழ்கிறேன்.

 2. அனு சொல்கிறார்:

  கன்னாபின்னான்னு புகழ்ந்துகிட்டே போறீங்க!! உச்சி குளிந்திடுச்சுனு தான் சொல்லணும் 🙂 ரொம்ப நன்றிங்க கீதா!

  • Philip சொல்கிறார்:

   என்ன அங்க கோபம் வந்தா gun அ எடுத்து சுட்டுட்டு போயிட்டே இருப்பான்.

   • அனு சொல்கிறார்:

    மேற்குல இருக்கற ரெண்டு மூணு மனநிலை சரி இல்லாதவங்க செய்யறத மேற்கின் வழக்கமா பொதுமை படுத்தறதுல எனக்கு உடன்பாடு இல்ல.

    அப்படி பொதுமை படுத்தும் போது, அந்த ஊர்ல இருக்கற நல்ல விஷயங்களும் இருட்டடிப்பு செய்யப்படுது பாருங்க! காசா பணமா…நல்லது இருந்தா எடுத்துப்போம் அவ்வளவுதான்!

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் Philip

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s