மாட்டிறைச்சி என்ன மாத்திறிச்சி!!

Posted: ஜூலை 14, 2012 in சாப்பாடின்றி வேறில்லை!
குறிச்சொற்கள்:, , , , , , , ,

 

சில பல காரணங்களினால் ஆறு மாதங்கள் சைவ உணவில் மட்டும் ‘stuck’ ஆகியிருந்த என்னை, விடுவித்த ‘steak’கிற்கு இந்த அந்தாதி சமர்ப்பணம்!!

வெகு நாட்களுக்குப் பிறகு…’deli’யில் உன்னை பார்த்தேன்.
“Hi steak …I am அனு. நான் இத சொல்லியே ஆகணும். நீ அவ்வளவு tasty!! இங்க எவ்வளவு எவ்வளவு ருசியா ஒரு …இவ்வளவு ருசிய சுவச்சிருக்க மாட்டாங்க…and I am in love ” என சொல்லத் துடித்தேன்.

அந்த இக்கட்டான நிலையில், உன் கண்களை சந்திக்கும் தைரியம் மட்டும் எனக்கு இல்லை. தற்செயலாக நம் கண்கள் ரெண்டும் முட்டிக்கொண்டன. அப்பொழுது, இருவரின் நடுவில் நடந்த உணர்ச்சிப் போராட்டம்….

“steak இல்லாம இருந்து காட்டறேன்னு தான இப்படி செஞ்ச”, என நீ கண்ணில் செந்நீருடன் வினவ,

“அதெல்லாம் இல்ல…என்ன நம்பு please…நான் இருந்த நெலம அப்படி”, என நான் சப்பக்கட்டு கட்ட,

“ஏதோ திரும்பி வந்தியே…அதுவே போதும்”, என கூறியபடி, தராசிலிருந்து என் கைகளில் தாவினாய்! அந்த நொடி….’God Particle’ கண்டுபிடித்த ‘Higgs Boson’ தோற்றார்.

கீரை மற்றும் காய்கறி வகைகளில் மட்டுமே துவண்டு போயிருந்த என நாக்கை…குத்தாட்டம் போட வைத்தாய்;

கோழிக்கறியின் கொ.ப.செ வாக இருந்த என்னை, கட்சித்தாவல் செய்ய செய்தாய்;

Grillலின் மேலிருந்து ‘ருசி ருசி’ என ‘சிக்னல்’ கொடுத்து, ‘பசி பசி’ என வயிற்றை அலற வைத்தாய்;

mushroom sauce மற்றும் mashed potato உடன் சேர்ந்து நீ தட்டின் மேல் வீற்றிருந்த கோலம்…காண கண்ணிரண்டு போதவில்லை.

வாயினுள் ஒரு துண்டு போன அந்த நிமிடம்….பல முடிவுகளுக்கு வந்தேன்!

“வந்தேன்டா பால்காரன்” பாடலை எழுதியவர்….ஒன்று பாடல் வரிகளுக்கு அரைகுறையாக ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும் …அல்லது மாட்டிறைச்சி உண்ணும் பாக்கியம் இல்லாதாவராய் இருந்திருக்க வேண்டும்.
பின்ன,

“அட மீன் செத்தா கருவாடு….நீ செத்தா வெறுங்கூடு கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் நான் கண்டு சொன்னதுங்க”
என்ற வரிகள் இன்னும் கொஞ்சம் பலமாக இருந்திருக்கும்…அவர் கீழ்கண்ட படத்தினை பார்த்திருந்தால்…

மேற்கண்ட படம் T .ராஜேந்தர் கண்ணில் பட்டதே இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி

“தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூ மீது விழுந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ”

“இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்”

“கலை நிலா மேனியிலே…சுளை பலா சுவையை கண்டேன்”

ஒரு பெண்ணின் அழகை இத்தனை ரசனையுடன் அக்கு அக்காய் பிய்த்து வைப்பவர், மேல்கண்ட படத்தை பார்த்திருந்தால்….புகழ்ந்து தள்ளி இருப்பார்.

‘மைதிலி என்னை காதலி’யை தொடர்ந்து, ‘மாட்டிறைச்சி என்ன மாத்திறிச்சி’ என ஒரு படம் எடுத்து, அதன் வெள்ளி விழாவில், பசுமாட்டினை மேடை ஏற்றி இருப்பார்.

“ரொம்ப புகழறீங்களே”, என நீ அந்த சாதுவான முகத்துடன் குழைவது புரிகிறது
அந்தாதியை பாதியில் நிறுத்த கடியாகத்தான் இருக்கிறது
எனினும் நீ கேட்டுக்கொள்ளும் பொருட்டு…

தோறனையில் (oven) நுழைய ‘Beef & Mushroom Pie’ தயாராக இருக்கிறது. பைய்யுடன் சர்க்கரைவள்ளி வருவலையும் சேர்த்து இரவு சாப்பாடு களைகட்ட உள்ளது.
தின்று முடித்து ஒரு திருப்தி ஏப்பத்தை விட்டு….உளமாற நன்றி கூறி முடித்துக்கொள்கிறேன்!!

பின்னூட்டங்கள்
 1. vaarththai சொல்கிறார்:

  “அனு”ன்னு பேர் வெச்சவங்க எல்லாம் இப்டிதான் இருப்பாங்களா …….
  (நா, என் பிரண்ட் அனு கிட்ட சொன்னேன்)

  • அனு சொல்கிறார்:

   //அனு”ன்னு பேர் வெச்சவங்க எல்லாம் இப்டிதான் இருப்பாங்களா//…எந்த குணாதிசயத்த குறிப்பிட்டு சொல்றீங்கன்னு தெரியல…உங்க தோழியும் மாட்டிறைச்சி விரும்பி சாப்பிடுவாங்களோ?
   வருகைக்கு நன்றி தோழரே 🙂

 2. Amarabharathi சொல்கிறார்:

  Classic. I love steak particularly sirloins

 3. thequickfox சொல்கிறார்:

  //சைவ உணவில் மட்டும் ‘stuck’ ஆகியிருந்த என்னை, விடுவித்த ‘steak//
  சகோ, சைவ உணவை மட்டும் சாப்பிட்ட எனக்கு சுவைக்கு அழைத்தது பன்றி.
  பன்றியில் செய்யபட்ட Currywurst with French fries ஒரு முறை சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்.
  பன்றிக்கு நிகராக உங்க Beef வருமா என்று சொல்லுங்க.

  • அனு சொல்கிறார்:

   அட்ராசக்க!!! நான் இன்னும் பெரிய அளவுக்கு பன்றி சாப்பிட ஆரம்பிக்கல…ஏதோ muffins ல இருக்கற சில bacon துண்டுகள் சாப்பிட்டிருக்கேன்.
   ‘Currywurst வித் French fries ‘ – wiki ல படம் பாத்தேங்க…படமே என்ன வரவேற்க்குதே!! கட்டாயம் try பண்றேன்…என் தீர்ப்ப சொல்றேன்!!!
   மாட்டிறைச்சி vs பன்றி இறைச்சி – சபாஷ் சரியான போட்டி!!!

 4. sivaparkavi சொல்கிறார்:

  neenga iyyara…

  sivaparkavi

  • அனு சொல்கிறார்:

   🙂 என்ன சிவபார்கவி…மாடந்தாதிக்கு ஒரு சபாஷ் சொல்லுவீங்கன்னு பாத்தா..!!! நான் எதுவா இருக்கனும்னு நினைக்கறீங்க? உங்கள் சித்தம் என் பாக்கியம்!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s