அண்ணாச்சி டீ கடை பெஞ்ச் – I

Posted: ஒக்ரோபர் 28, 2012 in பிதற்றல்
குறிச்சொற்கள்:, , , , , , , , , , ,

டீ கடை வாசல்

அறிவிப்பு பலகையில்
“கடைல பாக்கி வச்சிருக்கவங்க அம்புட்டு பேரும்…இந்த மாசத்துக்குள்ள பாக்கிய செட்டில் பண்ணிடு. இல்லாட்டி உன் safety க்கு அண்ணாச்சி பொறுப்பில்ல”

அதை படித்த படியே, டீ கடையினுள் நுழைந்த செந்தில், “மச்சி வெளில போர்டு படிச்சியா…செம காமெடி பண்றாரு அண்ணாச்சி”, என நக்கலாய் சிரித்தபடி குழுமி இருந்த கூட்டத்துடன் இணைந்தான்.
“அத எங்க கிட்ட கேக்காத….அண்ணாச்சியவே கேளு…சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. சங்கர் வேற நாங்க சிரிக்கறத பாத்துட்டு செம கடுப்புல இருக்கான்”, என வந்த சிரிப்பை அடக்கியபடி பதிலளித்தான் தினேஷ்.
“என்ன அண்ணாச்சி ரொம்ப பில்ட் up குடுக்கறாங்க பசங்க….என்ன சங்கதி”, என கல்லாவில் இருந்த அண்ணாச்சியிடம் வினவினான் செந்தில்.
“நீயும் சிரிப்பனு தெரியும் தம்பி…எதுக்கு வெட்டி பேச்சு. பாக்கி ஏதாவது இருந்துச்சுனா இந்த வாரத்துக்குள்ள செட்டில் பண்ண பாரு”, என ‘வெட்டு ஒன்று துண்டு ரெண்டாய்’ பதிலளித்தார் டீ கடை அண்ணாச்சி.

“என்ன அண்ணாச்சி…இப்பிடி சொல்லிட்டீங்க. ஏதோ பிரச்சனை உங்களுக்கு. ஒரு அக்கறையோட கேக்க வந்தா…இப்படி பண்றீங்களே”, என வருத்தப்பட்டான் செந்தில்.

“நேத்து என் friend ஒரு சாமிய பாக்க கூட்டிகிட்டு போனான் தம்பி. அவர் சொல்றாரு….உலகம் Dec 21 ஓட அழிஞ்சிடுமாம். அதுதான் இந்த மாசத்துக்குள்ள கொஞ்சம் பைசா தெரட்டி, பசங்கள கூட்டிகிட்டு பழனிக்கு போலாமுன்னு வீட்டுல சொன்னாங்க”, என சோகம் கலந்த குரலில் ‘அறிவிப்பு பலகையின்’ காரணத்தை விளக்கினார் அண்ணாச்சி.

“பக்கத்து ஊர்ல வீடு கட்ட நெலம் வாங்கி இருக்கீங்க அண்ணாச்சி….அத என்ன பண்ண போறீங்க”, என தினேஷ் கேள்வி எழுப்ப, பெஞ்சில் அமர்ந்திருந்த அனைவரும் ‘கொள்’ என சிரிக்க ஆரம்பித்தனர்..சங்கரை தவிர்த்து.
“அண்ணாச்சி…புது வருஷத்துல ஒரு நேத்தி கடன் முடிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க…அதையும் சீக்கிரமா முடிக்கனும்ல”, என மேசையில் அமர்ந்திருந்த இன்னொரு நண்பர் கேலி செய்தார்.

அனைவரின் நக்கல் பேச்சுகளையும் கேட்ட படி அமைதி கடைப்பிடித்தார் அண்ணாச்சி.

“நிறுத்துங்கப்பா…மனிஷன் பாவம் நெஜமாவே பயந்து போயிருக்காரு…நீங்க என்னடானா…இன்னும் அவர ஏத்திவிட்டுக்கிட்டு”, என டீ கடை பெஞ்ச்சினை அமைதியாய் இருக்கும்படி சொல்லிவிட்டு,

“அண்ணாச்சி…இதெல்லாம் போட்டு மனச கொழப்பிக்காதீங்க. அமெரிக்கால ஒரு கும்பல் Oct 21 ஓட உலகம் அழிஞ்சிடுமுனு சொல்லிக்கிட்டு திரிஞ்சாங்க….இப்ப தேதி 24 …ஒன்னும் ஆகல. அடிச்சுகிட்டு சாவறவன் செத்துகிட்டு தான் இருக்கான், தன் வேலைய கவனிச்சுகிட்டு இருக்கறவன் அவன் வேலைய பாத்துகிட்டு இருக்கான்”, என அண்ணாச்சியை ஆறுதல் படுத்தினான் செந்தில்.

“இல்ல தம்பி…நல்லவங்க மட்டும் உயிரோட இருப்பாங்களாம்….தப்பு செஞ்சவங்க எல்லாம் செத்திடுவாங்களாம். பால் கம்மியா இருக்கும் போது சில சமயத்துல தண்ணி சேத்திருக்கேன்…டீ தூள் அடித்தட்டும் போது…சில நேரத்துல…சில நேரத்துல தான், காபி பொடிய கலந்திருக்கேன். எனக்கென்னவோ நான் ‘தப்பு செஞ்சவங்க லிஸ்ட்’ல தான் இருப்பேன்னு தோணுது”, என மனம் ஒடிந்தார் அண்ணாச்சி.

“நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு…யாரு இங்க முடிவெடுப்பாங்க. நீங்க ஒரு காரியம் செய்யறீங்க..என்ன பொறுத்த மட்டும் அது தப்பா இருக்கலாம்…ஆனா நீங்க அத நல்ல காரியமா நெனைச்சு தான் செய்யறீங்க. கொள்ளை அடிக்கறவன் கூட அவன் வேலைய நியாயப்படுத்துவான் அண்ணாச்சி. அத விடுங்க…
காலைல 5 மணிக்கு கடைய தொறந்து…ராத்திரி 11 மணி வரைக்கும் ஓயாம டீ ஆத்தறீங்க. கம்ப்யூட்டர் முன்னாடி இருந்து நகுந்து, இந்த கடைல ஒரு டீயும் தம்மும் அடிக்கறதுல கெடைக்கற நிம்மதிக்கு equal ஆ ஒன்னும் இருக்கறா மாதிரி எனக்கு தெரியல…இந்த IT பார்க்ல வேலை செய்யறவன் ஒவ்வொருத்தனும் இதத்தான் சொல்லுவான். உங்க பசங்க ரெண்டும் நல்லா படிக்கணும்னு சிறுக சிறுக சேத்து வைக்கறீங்க., இதெல்லாம் கணக்குல எடுத்துக்காம…என்னைக்கோ ஒரு நாள் சேத்த தண்ணியையும் காபி தூளையும் சாக்கு காட்டி சாவடிக்கிற உங்க கடவுளுக்கு எவ்வளவு ‘பெரிய’ மனசு இருக்கணும்!”, என கூறியபடி அண்ணாச்சியின் தோளை தட்டிக்கொடுத்தான் செந்தில்.

“எனக்கு கூட இது தோணிச்சு தம்பி…ஆனா அங்க இருந்த கூட்டத்த பாத்தா…அத்தனை பேரும் அவர நம்பறாங்கனு தான் தோணுது. நெறைய பேரு காணிக்கை எல்லாம் போட்டு…ஏதோ சொல்லுவாங்களே…பரிகாரம் செஞ்சுகிட்டு இருந்தாங்க. என்கிட்ட அப்ப பைசா இல்ல….அதுனால நாளைக்கி திரும்ப போகலாமுன்னு வந்துட்டேன்”, என நொந்துகொண்டார் அண்ணாச்சி.

“இது point…பரிகாரம் செய்ய காசு கட்டினவங்க dec 22 அன்னிக்கி அந்த சாமிகிட்ட வந்தா…”அட பரிகாரம் வேலை செஞ்சிடுச்சு”னு announcement…அப்பறம் சாமியோட கல்லா நிரம்பி வழியும்.
பரிகாரமே பண்ணலனாலும், dec 21 உங்களுக்கு ஒன்னும் ஆகலைனா…இருக்கவே இருக்கு, “தம்பி…அன்னிக்கி இங்க வந்தபாரு…அதுனால என் வேண்டுகோளுக்கு இணங்க…உன் தப்புகள எல்லாம் கடவுள் மன்னிச்சு விட்டுட்டாரு”…so எப்படி பாத்தாலும் சாமியோட காட்டுல மழைதான்”, என செந்தில் யதார்த்தமாய் விளக்க, ஒரு தெளிவு கலந்த புன்னகை அண்ணாச்சி முகத்தில் சிறிதே எட்டிப் பார்த்தது.
“இப்பனு இல்ல அண்ணாச்சி…பல வருஷமா வேற வேற நாடுகள்ல இப்படி சொல்லிக்கிட்டு திரியற கிறுக்கனுங்க இருக்கறானுங்க. போன வருஷம் கூட அமெரிக்கால ஒரு நாதாரி, மே மாசாத்தோட உலகம் அழிஞ்சிடும்னு பிரச்சாரம் செஞ்சான். அத உண்மைன்னு நம்பி நெறைய பேர் வேலைய விட்டுட்டு, இருந்த சொத்துக்கள எல்லாம் வித்துட்டு, வந்த பைசால அவங்களால முடிஞ்ச வரைக்கும் இந்த கருத்த பரப்பினாங்க”, என அண்ணாச்சியின் பயம், அவசியமற்றது என விளக்கினான் செந்தில்.

“நான் இன்னிக்கி வந்த காரணத்தையே மறந்துட்டேன். dec 23 எங்க ஆபீஸ்ல christmas பார்ட்டி. சரக்கு, சாப்பாடு எல்லாத்தையும் கம்பெனி பாத்துக்கும். சாப்பாடு முடிச்சு அண்ணாச்சியோட மசாலா டீ அடிச்சா…சூப்பரா இருக்கும்னு நான் சொன்னேன். அதுதான் உங்க கிட்ட பேசி rate விஷயத்த கேட்டுகிட்டு வர சொன்னாங்க”, என டீ கடை விஜயத்தின் காரணத்தை விளக்கினான் செந்தில்.

“தம்பி…எனக்கு என்ன சொல்லனும்னு தெரியல…”, என அண்ணாச்சி தலையை சொரிய,
“அண்ணாச்சி…ஒன்னும் பிரச்சனை இல்ல. அப்படியே dec 21 உலகம் அழிஞ்சா கூட…நீங்க சொர்க்கத்துல இருப்பீங்க…நான் அடிச்ச லூட்டிக்கெல்லாம் சேத்துவச்சு நரகத்துல எங்களுக்கு இடம் நிச்சயம். சொர்க்கமும் நரகமும் பக்கத்துபக்கத்துல தான் இருக்கும். என்ன punishment குடுத்தாலும், 2 மணி நேரத்துக்கு ஒரு பிரேக் எடுத்து, அங்க சொர்க்க வாசல்ல நிக்கறோம். உங்க மசாலா டீய குடுங்க. இப்ப contractஅ எடுத்துக்குங்க பாஸ்”, என நகைச்சுவையாய் பேசியபடி கல்லா நோக்கி வந்தான் தினேஷ்.

“சரி செந்தில் தம்பி…நீங்க மதிய சாப்பாட்டுக்கு வரும்போது…நான் கணக்கு போட்டு குடுக்கறேன்…”, என செந்திலிடம் கூறியபடி, பைசா கொடுக்காமல் தினேஷ் வெளியேறுவதை கவனித்த அண்ணாச்சி,
“தம்பி…டீ போண்டாக்கு காசு?'”, என வினவ,

“accountல எழுதிக்குங்க அண்ணாச்சி…அப்பறம் இந்த போர்ட மறக்காம எடுத்து உள்ள வைங்க”, என அமைதியாய் சிரித்தபடி, விடைப்பெற்றான் தினேஷ்.

பின்குறிப்பு – அன்று மார்ஸ் கிரகத்தில் இறங்கிய ‘curiosity’ ஏவுகணை பற்றிய ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நடுவில், ‘உலகம் இந்த வருடம் அழியப்போகிறது” போன்ற மூட எண்ணங்களும் பரவிக்கொண்டிருப்பதை நினைத்தேன்.’கூகிள்’ செய்தபோது, கண்ணில் பட்ட படம் இது…

அடுத்த பதிவு…இதை ஒட்டியே…என முடிவு செய்தேன் 🙂

பின்னூட்டங்கள்
 1. Robin சொல்கிறார்:

  //“இல்ல தம்பி…நல்லவங்க மட்டும் உயிரோட இருப்பாங்களாம்….தப்பு செஞ்சவங்க எல்லாம் செத்திடுவாங்களாம். பால் கம்மியா இருக்கும் போது சில சமயத்துல தண்ணி சேத்திருக்கேன்…டீ தூள் அடித்தட்டும் போது…சில நேரத்துல…சில நேரத்துல தான், காபி பொடிய கலந்திருக்கேன். எனக்கென்னவோ நான் ‘தப்பு செஞ்சவங்க லிஸ்ட்’ல தான் இருப்பேன்னு தோணுது”, என மனம் ஒடிந்தார் அண்ணாச்சி.// 🙂

 2. எத்தனை மூ.. மு.. நம்பிக்கைகள்…

  தொடர்கிறேன்…

 3. வேகநரி சொல்கிறார்:

  2000 ஆண்டு பிறக்கும் போது உலகம் அழிந்துவிடும் என்று பெரிய பரபரப்பே நடந்திச்சாம். //கொள்ளை அடிக்கறவன் கூட அவன் வேலைய நியாயப்படுத்துவான்//
  இப்போ அப்படி தானே நடக்கிறது.

 4. ranjani135 சொல்கிறார்:

  ஹலோ அனு! எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு உங்கள் பதிவு பக்கம் வரவே இல்லை. மன்னிக்கவும்.
  ஈமெயில் மூலம் தொடருகிறேன். இனி நீங்கள் பதிவு போட்டவுடன் வந்துவிடுவேன்.

  டீ கடை பெஞ்ச் உரையாடல் நிஜத்தை உணர்த்துகிறது.
  பாராட்டுக்கள்!

  • அனு சொல்கிறார்:

   ‘மன்னிப்பு’ தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை 😉 என்னங்க ரஞ்சனி…சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு!! நானே ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் தான் பதிவு எழுதறேன். இன்னிக்கி தான் உங்க ‘சொந்தக் கதை’ படிச்சேன். அடிச்சு தூள் கெளப்பறீங்க! வருகைக்கு ரொம்ப நன்றி ரஞ்சனி 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s