புருஷலட்சணமா…Bullshit!

Posted: ஜனவரி 19, 2013 in சிறுகதை
குறிச்சொற்கள்:, , , , ,

“கயல் postbox பாக்கலியா உனக்கு ஏதோ letter வந்திருக்கு பாரு”, என கூறியபடி வீட்டினுள் நுழைந்தான் தியாகு.
“என்னது பா…”, என தியாகு குரல் கேட்டு வாழறைக்கு வந்தாள் கயல்விழி.

“Project Management instituteல இருந்து. நீ கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு certification பாஸ் பண்ணினல”, என கடிதத்தை பிரித்தவாறு வினவினான் தியாகு.

“அட ஆமாம்…ஒரு basic certification பண்ணினேன்ல…அது expire ஆக போகுது..renew பண்ண சொல்லி mail வந்திருக்கும். email கூட வந்திருந்தது.”, என காபி குவளைகளை காபி மேசை மீது வைத்தபடி விடையளித்தாள் கயல்.
“So…exams திரும்ப எடுக்கணுமா இல்ல upgrade option ஏதாவது இருக்கா”, என வினவியபடி கடிதத்தையும் படித்தான் தியாகு.
“ஆமாம்பா…you can resit the exam இல்ல அதோட advanced certificationக்கு upgrade பண்ணலாம்”, என டிவி remoteஐ நோண்டியப்படி பதிலளித்தாள் கயல்.
“ஒய் seriousஆ கேக்கறேன். என்ன செய்ய போற …கல்யாணத்துக்கு முன்னாடி project managementல அவ்வளவு passionateஆ இருப்ப”, என டிவி remoteஐ பிடுங்கி, கயலின் கவனத்தை தன் பால் ஈர்த்தான் தியாகு.

“காமெடி கீமடி பண்ணறியா…என்ன சொல்ற தியாகு….2 yearsஆ workforceல இருந்து தள்ளியே இருக்கேன். இளங்கோவ அப்பறம் யாரு பாத்துப்பாங்க. நீ காபி குடி நொறுக்குத் தீணி ஏதாவது கொண்டுவரேன்”, என நழுவ எத்தனித்த கயலை நிறுத்தி,
“c’mon கயல்…காமெடி இல்ல. இன்னிக்கி ஒரு Project Manager (P.M) கூட காபிக்கு போயிருந்தேன். அவங்களும் ஒரு career oriented lady. கல்யாணமாகி கொழந்தை இருக்கு. but அவங்க வீட்லியே கொழந்தைய பாத்துகிட்டு இருக்க விரும்பல…Here she is…எங்க கம்பெனில P.M for the past 5 years “, என விளக்கினான் தியாகு.
“பொண்ணா …அதுதான பாத்தேன். நான் phone பண்ணும் போதெல்லாம் பிஸியா இருக்கேன்னு சொல்லுவ…காபிக்கெல்லாம் டைம் இருக்கா”, என உயர்த்திய புருவங்களுடன் வினவினாள் கயல்.

“இப்ப நீதான் காமெடி பண்ற. அவங்க work experience பத்தி பேசும்போது , நம்ம marriage முன்னாடி இருந்த கயல் தான் நினைவுக்கு வந்தா. Remember those days, நான் call பண்ணினாலும், ஒரு குட்டி ‘hi kiss bye’ஓட நிறுத்தீடுவ. நெறைய தடவை சொல்லி இருக்கேன்…I fell head over heels for that lady. எப்பவுமே ஒரு துடுக்கான பேச்சு, quick decision making skills, smart and witty …”, மலரும் நினைவுகளை நினைத்த மாத்திரத்தில் புன்னகைத்தான் தியாகு.

“So இந்த homemaker கயல் உனக்கு பிடிக்கல…அதுதான சொல்ல வர”, என கடிந்து கொண்டாள் கயல்.
“you know what …நீ பேசற மூட்ல இல்ல. எனக்கு தோணினத சொன்னேன். We will talk about it some other time”, என குரலில் ஒரு சிறிய விரக்தியுடன், காபி குவளையை கையில் எடுத்தான் தியாகு.

“இல்லப்பா suddenஆ இந்த topic எடுத்த உடனே…I was taken aback. It is not as easy as you think. என் resume’ is 5 years old. வேலைக்கு apply பண்ணனும், கெடைக்கணும்..இளங்கோவ என்ன பண்ண போறோம்…எவ்வளவு இருக்கு”, என தியாகு அருகில் அமர்ந்தபடி தோள் மீது கைப்போட்டாள் கயல்.

“என்னவோ நாளைக்கே நீ வேலைக்கு போகணும்னு சொன்னா மாதிரி அலுத்துக்கிறியே. நான் ரொம்ப நாளா இத பத்தி பேச நெனைச்சேன்.அதுக்குள்ள relocation, இளங்கோ..Time just flew away. இன்னிக்கி சந்தியா கிட்ட பேசும் போதுதான் I got reminded… நம்ம வீட்லயும் ஒரு able PM இருக்காங்களேன்னு”, என பதிலளித்தான் தியாகு.

“But I need time to think over”, என கயல் சற்றே யோசித்தபடி பதிலளித்தாள் கயல்.

“ஒன்னும் பிரச்சனை இல்ல….நீ யோசிக்கறேன்னு சொன்னதே good to hear. Actually நீ வேலைக்கு போக ஆரம்பிச்சதுக்கு அப்பறம், நான் ரொம்ப நாளா பண்ணனும்னு நினைச்ச certification ஒன்னுல focus பண்ண ஆரம்பிக்க முடியும்”, என விடையளித்தான் தியாகு.

“But அந்த course க்கு நெறைய டைம் spend பண்ணனும்னு சொன்ன…work & studies உன்னால manage பண்ண முடியுமா”, என கேள்வி எழுப்பினாள் கயல்.

“சீரியஸா தெரியாமத்தான் கேக்கறியா. I was expecting you to be the bread winner”, என யதார்த்தமாக விடை அளித்தான் தியாகு.

“Breadwinnerஆ…யாரு நானா? உத்தியோகம் புருஷ லட்சணம் தியாகு. நீ வேலைக்கு போகாம…நான் மட்டும்னா…ஊர் என்ன பேசும்”, என ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பினாள் கயல்.

“புருஷலட்சணமா …Bullshit! நீ சொல்ற இந்த ஊர்…கொறை கண்டுபுடிக்கனும்னா, நக்கல் அடிக்கனும்னா, மொதல வந்து ஆஜராகும். நீ ஏதாவது ‘out of the box’ step எடு, அதுல success பாரு….உன் பக்கம் கூட திரும்பி பாக்காது.

நாளைக்கே ஏதோ ஒரு வேலை செய்யற….நம்ம காலனில C-16 மாமி might be happy with the outcome but D-17 ஆன்ட்டி might strongly oppose. அப்படியே successfulஆ எல்லாரையும் திருப்தி படுதீட்டனு வை…you might not like the outcome. So finalஆ …The very purpose is being defeated”, என விளக்கினான் தியாகு.

ஒரு நிமிடத்திற்கு மேல் அமைதியாய் தரையை பார்த்தப்படி நின்றாள் கயல்

“ஒய் …என்ன..Whatz happening”, என தியாகு வினவ,

“ம்ம் …It has been a bit too much for this குட்டி brain! நான் யோசிச்சு சொல்றேன். சப்பாதி மாவு பெசைஞ்சு வச்சிருக்கேன். நீ உருட்டி roll பண்ணு …நான் தவா ல போட்டு எடுக்கறேன்”, என கூறியபடி சமையலறை நோக்கி நகர்ந்தாள் கயல்.

“ஒய் கயல்….I love you”, என கொஞ்சலாய் கூறியபடி sofaவிலிருந்து எழுந்தான் தியாகு.

“நெசமாத்தான் சொல்றியா தியாக்ஸ்”, என வெட்கப்படும் தோரணையில் கூறிக்கொண்டே சுவர் கடிகாரத்தை பார்த்த கயல், “கொஞ்சல்ஸ் க்கு கொஞ்சம் break விடு; நான் இளங்கோவ pick up பண்ணிட்டு வரேன் நீ freshen up ஆகு”, என வாசலில் நிறுத்தியிருந்த கார் நோக்கி நடந்தாள்.

பின்னூட்டங்கள்
 1. வருண் சொல்கிறார்:

  ***புருஷலட்சணமா …Bullshit!***

  Well, well, well..

  Sounds interesting ..theoretically though. But, I need to talk to this gentleman thiyaagu after he spent ten years as a “house husband” and his wife being the “breadwinner”! Then only I would not know whether it worked in practice as well or not!

  I believe தியாகு will have LOT to tell me about how much he enjoyed “this life”! 🙂

  Let தியாகு speaks for himself! 🙂

  Let me wait for a decade..

  ——-

  HNY, anu! 🙂

 2. வருண் சொல்கிறார்:

  ///Then only I would not know whether it worked in practice as well or not!//

  It should read as ” Then only I would know whether it worked in practice as well or not!’

 3. ranjani135 சொல்கிறார்:

  சிலவாரங்களுக்கு முன் ஆண்கள் தங்களது 40 வது வயதில் பணியிலிருந்து விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு தங்கள் ‘paasion’ ஐ தொடருவதாகப் படித்தேன்.

  இப்போது உங்கள் கதை! (நிஜக்கதையோ?)

  எனக்குத் தெரிந்து சில ஆண்கள் இதுபோல இருக்கிறார்கள் அனு.

  • அனு சொல்கிறார்:

   நிஜக்கதை இல்ல ரஞ்சனி….ஆனா ரொம்ப நாளா நான் எழுதனும்னு நினைச்ச ஒரு தலைப்பு. நல்லா படிச்ச பெண்கள், திருமணத்துக்கு அப்பறம், ‘கணவனின் சேவையே என் தலையாய கடமை’, ‘கொழந்தைங்கள பாசத்த பொழிஞ்சு வளர்க்க வேண்டியது தாயாகிய என் கடமை’னு அவங்களுக்கே ஒரு வளையத்த போட்டுக்கறது ஒரு நெருடலாவே இருந்திருக்கு. பையன், பொண்ணு ரெண்டு பேரும் நல்லா படிச்சிருக்காங்க, திருமணம் பண்ணிக்கறாங்க, அப்படி இருக்கும் போது, ‘கணவன் தான் சம்பாதிக்கணும், மனைவி தான் வீட்ட கவனிச்சுக்கணும்’ என்பது எப்படி ஒரு ‘obvious பிளான்’ஆ இருக்க முடியும்னு தெரியல.
   பெண்களே ‘ஆண்களின் அடிமை’ விலங்கை விரும்பி மாட்டிக்கொள்ளும் போது, ஒரு ஆண்மகன் அவ்விலங்கினை அகற்ற எத்தனித்தால்….? கற்பனையின் வெளிப்பாடே இச்சிறுகதை 🙂

 4. Pady சொல்கிறார்:

  Anu I wish there are men out there in the world like Thiyagu; men who are able to see the dreams of their wife in her eyes. I’m not opinionated but most men I have come across have hardly seen anything beyond what they want in their woman’s eyes. Our dreams just lie there unnoticed if we do not do anything about it.
  It was just yesterday in one of my Graduate Hire Programs, I met a very young woman, who was so stressed out. She is just 21 and is already married for a few years. She has been trying to make her husband understand all the efforts that went behind the job she is holding today. He wants her to resign because there are chances that she might have to work out of a different location for some time. The irony is that she is not even living with him, as he works out of somewhere in Dubai. She is asked to resign because if she relocates she will not be able to live with the in-laws. Anyways, kudos to the Thiyagu you have created today and let’s hope to find a few living ones.

  • அனு சொல்கிறார்:

   // I wish there are men out there in the world like Thiyagu; men who are able to see the dreams of their wife in her eyes//

   Hey Pady…isn’t this the most unfortunate thing! Women in our society are made to believe that a man will need to help her realize her dreams. Neither education nor exposure to the external world seems to have had any impact on this belief. Despite the society being completely against all of her uprisings, she continues to fear the society and tries to satisfy it in every move of hers. Frankly, I am not very confident that this will change any time soon. Hence the leaning towards the sex, which seems to show some sign of rationality

 5. […] பொம்பளைங்க பிரச்சனை பாஸ்“, “புருஷலட்சணமா…Bullshit” போன்ற பதிவுகள் கூட […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s