அச்சம் ம*ம் நாத்தம்

Posted: பிப்ரவரி 9, 2013 in பிதற்றல்
குறிச்சொற்கள்:, , , , , , ,

அடுத்த முறை, “என்னடி …உன் பொண்ணு பரட்டை தலையோட அங்க பசங்க கூட விளையாடிகிட்டு இருக்கா. விளக்கு வைக்கற நேரம், நல்லா ரெட்டை ஜடை பின்னி போட்டு, பூ வச்சு அழகு பாப்பியா…”, என அடுத்த வீட்டு ‘நலன் விரும்பி அறிவுரை வழங்கினால்,
“ஜடை பின்னி பூவச்சு வீட்டுல மொடங்கி கெடக்கனும்னா, ஒரு பொம்மைய வாங்கி இருப்பனே ஆன்ட்டி. கொழந்தை எல்லாம் எதுக்கு. அவளுக்கும் பெருசா அது பிடிக்கல…என் ஆசை, ஊர் ஆசைக்காக எல்லாம் அந்த கொழந்தைய படுத்த விரும்பல”, என யதார்த்தமாய் விடையளியுங்கள்.

அடுத்த முறை, “இத பாருமா….பொண்ணு பெரியவளாயிட்டா, கொஞ்சம் வெக்கம், அடக்கத்த எல்லாம் சொல்லி குடு. தாந்தோனியா திரிஞ்சுகிட்டு இருந்தா…கல்யாணம் பண்ணி வைக்கறது குதிரை கொம்பாயிடும்…தெரிஞ்சுக்க”, என பக்கத்து வீட்டு மூதாட்டி காதில் ஓதினால்,
“என்ன பாட்டி….பல்லு மொளைக்கற மாரி …இதுவும் அவ ஒடம்புல நடந்திருக்கற புது விஷயம். “அது நடந்தாச்சு….இனி இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்”னு சொல்லி அவள கொழப்ப விரும்பல”, என சாதரணமாய் பதிலளியுங்கள்.

அடுத்த முறை, “என்ன சார், இத்தனை மார்க் வாங்கி இருக்கு பொண்ணு…ஒரு Arts collegeல போய் சேத்து விட்டிருக்கீங்க “, என ஏளனமாய் வேலையில் நண்பர் ஒருவர் குரல் எழுப்பினால்,
“சார்…அவ future, அவளுக்கு என்ன படிக்கணும்னு தோணுதோ படிக்கட்டும்; மார்க் எடுத்திருக்கானு..இன்ஜினியரிங் படி னு compel பண்ண எங்களுக்கு விருப்பம் இல்ல. அவளே விரும்பி செலக்ட் பண்ணும் போது , விரும்பி படிப்பா பாருங்க”, என புன்னகை ததும்ப விடையளியுங்கள்..

அடுத்த முறை, “அடக்கம்னா கிலோ எவ்வளவு வெலைனு கேப்பா போல உன் பொண்ணு…சரியான ராங்கினு நினைக்க போறாங்க. பொண்ணு கேட்டு ஒருத்தன்கூட தலை வச்சு படுக்க மாட்டான், என ஒரு ‘பெருசு’ வீராவேசமாக சபித்தால்,
“எங்க பொண்ண இப்படித்தான் வளத்திருக்கோம். அவளுக்கும் இப்படி இருக்கத்தான் பிடிச்சிருக்கு; அப்ப…அது மாதிரியான பொண்ண விரும்பறவன் தான அவளுக்கு suit ஆகும். அத விட்டுட்டு…”உன்னை மாத்திக்கோ மா…அப்ப தான் உனக்கு கல்யாணம் ஆகும்”னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கறது…வீண் பேச்சா தோணுது. அப்படியே அவள பிடிச்சு போய் ஒருத்தன் வந்தா கூட…அவளுக்கு புடிச்சிருக்கான்னு பாக்கறது தான மொறை “, என எளிமையாக விளக்குங்கள்.

அடுத்த முறை, “பையன் வேற ஜாதி போல…நேத்து shopping mallல பாத்தேன்…ஊர் என்ன பேசும் சசி”, என வருத்தத்துடன் ஊர்வம்பு பேச உம் தோழி எத்தனிக்கையில்,
“புரியல கவி…அவளுக்கு புடிச்சிருக்கு. அதுதான முக்கியம். ஒரு responsible parentஆ, 24 வருஷம் அவ கூட இருந்ததுனால, அவளுக்கு ஏத்தவனா னு வேணும்னா பாக்கலாம். அதுல கூட என் judgement எவ்வளவு சரியா இருக்கும்னு தெரியல. Above all she is an Adult. இவ்வளவு வருஷம் கெடைச்ச school education, உலக அறிவ வச்சு முடிவு எடுக்க வேண்டியது அவ பொறுப்பு. ‘அனுபவசாலிங்க’ னு சொல்லிக்கிட்டு, எங்க ஆசைய அவ மேல திணிக்க விரும்பல கவி”, என சட்டென விடையளியுங்கள்.

அடுத்த முறை, “ஒரு நாள் கெழமை அதுவுமா..ரெண்டு நகை நட்டு போட்டு, பொடவை தாவணி ஏதாவது கட்டிக்க கூடாது. ‘என்ன வளத்திருக்கா ஆத்தாகாரி ‘ னு ஒன்னைதான் பேசுவாங்க”, என உங்கள் நாத்தனார் தூற்றினால்,
“பொடவை, நகை எல்லாம் போட்டுக்கறது பாத்துட்டு, “சரி நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு”, “நல்ல அடங்கி ஒடுங்கி இருப்பா”,னு முடிவு பண்ணுவாங்க வைங்க…அது மாதிரி ஒரு வேஷம் என் பொண்ணுக்கு தேவையே இல்லங்க. வீட்டு நெலமைய புரிஞ்சிகிட்டு தனக்கு புடிச்ச சுதந்திரமான வாழ்க்கைய வாழறா…கல்யாணம் ஆனதுக்கு அப்பறமும் அதுதான் continue ஆகணும்னு நாங்க விரும்பறோம்”, என பட்டென பதிலளியுங்கள்.

அடுத்த முறை, “என்ன பாஸ்…ஊர் கெட்டு போயிருக்கு…பொண்ண public transportல எல்லாம் போக சொல்லாதீங்க. ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுனா”, என நல்லெண்ணத்தில் அடுத்த வீட்டு uncle அட்வைஸ் வழங்கினால்,
“என்ன சொல்றீங்க சார்….பஸ் ல மட்டும் தான் இந்த கொடுமை எல்லாம் நடக்குதா…நாளைக்கே அவ பைக்ல போறான்னு வைங்க..ஒரு அசம்பாவிதமும் நடக்காதுன்னு என்ன நிச்சயம்? பொண்ண தைரியமா வளத்திருக்கோம். ஏதாவது பிரச்சனை வந்தா பயந்து நிக்க மாட்டா…ஊர கூட்டி கூச்சல் போடுவா அப்படியே பிரச்சனை பெருசா போனா கூட….போலீஸ் கிட்ட போறதுக்கோ, கோர்ட்க்கு போறதுக்கோ பயப்பட மாட்டா”, என ‘straight forward’ஆக பதிலளியுங்கள்.

டெல்லி சம்பவம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆக உள்ளது. குற்றவாளிகளுக்கு தூக்கு, ஆயுள் தண்டனை, இரவு வேளையில் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போன்ற பல கோரிக்கைகள் முன் வைக்கபட்டாலும், ‘root cause’ எனப்படும் ‘அடிப்படை காரணத்தை தீர்க்காமல், அரசு முன் வைக்கும் எந்த தீர்வும், ஒரு நிரந்தர தீர்வாகப் போவதில்லை.
‘பொத்தி பொத்தி வளர்ப்பது’, ‘அடக்க ஒடுக்கமாய் வளர்ப்பது’ போன்ற பழைய பஞ்சாங்கத்தின் படி பெண்களை வளர்க்கும் போது, வெளி உலகில் தலை நிமிர்ந்து நடக்கும் அந்த துணிச்சல் முடங்கியே கிடக்கிறது. வேலை இடத்திலோ, அல்லது பொது இடங்களிலோ பிரச்னையை எதிர்கொள்ள துணிவில்லாமல், சூழ்நிலை கைதியாக மாறுகின்றனர். சிறு வயதிலிருந்தே, சுயமாய் யோசிக்கும் திறனையும், தவறென தோன்றும் செயல்களை தட்டி கேட்கவும் அவளுக்கு சொல்லித் தரும் போது , முதிர் பருவத்தில் (adulthood), தனக்கு சரி என படும் முடிவுகளை எடுப்பாள். அதற்கு பதில், ‘சமூகம் விடுத்த ‘நல்வழியில்’ அவளை வளர்ப்போம்…நல்ல தாய், தந்தை என பட்டம் வாங்குவோம்’, என உம் சுயநலத்திற்கு உங்கள் மகள் அடிமையாகும் போது , சமூகத்தில் தடி எடுத்தவன் அனைவரும் தண்டல்காரனாவான்…உம் மகளின் அடிமை நிலை வீட்டிற்கு வெளியும் தொடரும்.

பின்னூட்டங்கள்
 1. வருண் சொல்கிறார்:

  அனு: இந்தக் கதை பற்றி விமர்சிக்கலாம்னு பார்த்தேன். வழக்கம்போல் என் பார்வை குதற்கப் பார்வையாகத்தான் அனுக்குத் தெரியும் என்று விட்டுவிட்டேன். 🙂

  Again..on second thogut, I am commenting..

  * பெண்களை பொத்தி வளர்க்காமல், தைரியமாக வளர்ப்பதால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கெடைக்காது. ஏன் என்றால் டெல்லியில் பலியான பெண் தைரியமானவளே. அவள் ஒண்ணும் “கட்டுப்பெட்டி” அல்ல.

  மனுஷனாக வேண்டியது ஆண் மிருகங்கள்தான்.

  அதைப்போல் ஆண்களை மாற்றுவது என்பதை எல்லாப் பெண்களும் செயல்ப்படுத்த உதவ முடியாது. அவனைப் பெற்ற தாய் மட்டும் விதிவிலக்கு. இன்னைக்கு என்னால் ஒரு அறியாப்பெண்ணிடம் மிருகத்தனமாக நடக்க முடியாதற்கு காரணம் என் தாய் என்னை வளர்த்த விதம்னு நம்புறேன்.

  பிரச்சினை என்னவென்றால்.. நான் அனாதையாக, நல்ல வழிநடப்பு இல்லாமல் ஒரு நல்ல தாய்க்குப் பிறக்காமல் வளர்ந்து இருந்தால்??? ஒரு வேளை மிருகமாக இருப்பேனோ? என்று எண்ணுவதுண்டு..

  • அனு சொல்கிறார்:

   //இந்தக் கதை பற்றி விமர்சிக்கலாம்னு பார்த்தேன். வழக்கம்போல் என் பார்வை குதற்கப் பார்வையாகத்தான் அனுக்குத் தெரியும் என்று விட்டுவிட்டேன்.//

   “இந்த அனு பொண்ணு…தன்னோட கருத்து மட்டும் தான் சரின்னு நினைக்கறவ…மத்தவங்க கருத்துக்கு செவி மடுக்க மாட்டா”, னு ஒரு எண்ணம் உங்க மனசுல இருக்குனு நினைக்கறேன்.

   அப்படி சுயநல சிந்தனை இருந்தா நான் ‘diary’ எழுதலாமே! என்னோட கருத்த ‘socialise’ செஞ்சு ஒரு ஆரோக்கியமான விவாதத்த விரும்பறதுனால தான் வலைப்பதிதல் செய்யறேன்.

   //பெண்களை பொத்தி வளர்க்காமல், தைரியமாக வளர்ப்பதால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கெடைக்காது. ஏன் என்றால் டெல்லியில் பலியான பெண் தைரியமானவளே. அவள் ஒண்ணும் “கட்டுப்பெட்டி” அல்ல.//

   என் பதிவுல எங்கயுமே கற்பழிப்புக்கோ, ‘ஆண்களின் மனநிலை மாறுவதற்கோ ‘…tips வழங்கல.

   ‘சினிமால அத ஒரு ஜாலியாத்தான காட்டாறான்’, ‘எங்க அம்மா எப்பவுமே அப்பாக்கு அடங்கித்தான் போயிருக்காங்க …அப்படித்தான் எல்லா பொண்ணுங்களும் இருக்கணும்’, ‘சம்பாதிக்க வேண்டியது ஒரு ஆணின் கடமை..வீட்டு வேலைகள கவனிச்சு கிட்டு…பசங்கள நல்லா வளக்க வேண்டியது ஒரு பொண்ணோட பொறுப்பு’ னு பருப்பு மாதிரி சமூகம் பேசினாலும்…ஒவ்வொரு ஆணும் அவனே சிந்திச்சு, நாம இப்படி தான் நடந்துக்கணும்னு முடிவு எடுக்கற வரைக்கும் இந்த பிரச்சனை தீராது. அது நடக்கற வரைக்கும்…அந்த மாதிரி unfortunate நிகழ்வுகள தைரியமா எதிர்க்கொள்ள தன்ன தயார் செஞ்சுக்க வேண்டியது ஒரு பொண்ணுக்கு முக்கியம் ஆகுது.

   “அப்ப அதுக்கு karate , kungfu கத்துக்க வேண்டியதுதான்’னு ‘instant solution’ கொடுக்க போறீங்கனா..

   தைரியம், தன்னம்பிக்கை எல்லாம் overnight ல வர்றது கெடையாது. சின்ன வயசுல இருந்தே அது சொல்லிகொடுக்கற போது, முதிர் பருவத்துல, இந்த மாதிரி சூழ்நிலைகள கையாளற துணிவு அந்த பொண்ணுக்கு இருக்கும்.

   //அவனைப் பெற்ற தாய் மட்டும் விதிவிலக்கு. //

   ஆஹா திரும்ப…அதே ‘generalisation’! உங்க அம்மா அது மாதிரி இருந்துட்டாங்கனா…ஒட்டு மொத்த தாய் குலமே அப்படி இருப்பாங்கனு எப்படி நீங்க பொத்தாம்பொதுவா சொல்லலாம்?? எனக்கு தெரிஞ்ச பலர் வீடுகள்ல, புருஷன் remote control பட்டன நோண்டிகிட்டு இருப்பான். பொண்டாட்டி வேலைல இருந்து வந்துட்டு…கொழந்தைய கவனிக்கறது, சமைக்கறதுன்னு அடுத்தடுத்த வேலைய செஞ்சுகிட்டு இருப்பா. “ஏன்பா …நீயும் கொஞ்சம் ஒதவ கூடாதா’னா… “என்ன சார் காமெடி பண்றீங்க…சின்ன வயசுல இருந்து…எங்க அம்மா என்ன அந்த மாதிரி பாத்துகிட்டாங்க….சாப்பிட்ட தட்ட…நான் தேய்க்க போட்டதில்லனா பாத்துக்கங்க…அப்ப கல்யாணத்துக்கு அப்பறம் அது change ஆகணும்னா எப்படிங்க…அதுக்கு தான பொண்டாட்டி”…னு நொண்டி சாக்கு சொல்ற ஆண்சிங்ககளுக்கு எல்லாம்…தப்பான முன்மாதிரியா இருந்தது அவங்க தாய்மார்கள் தானே!!!

 2. வருண் சொல்கிறார்:

  ***“என்ன சார் காமெடி பண்றீங்க…சின்ன வயசுல இருந்து…எங்க அம்மா என்ன அந்த மாதிரி பாத்துகிட்டாங்க….சாப்பிட்ட தட்ட…நான் தேய்க்க போட்டதில்லனா பாத்துக்கங்க…அப்ப கல்யாணத்துக்கு அப்பறம் அது change ஆகணும்னா எப்படிங்க…அதுக்கு தான பொண்டாட்டி”****

  His mom should have been a home-maker. And he should not compare apples and oranges. If he does, he is an idiot. Why does she live with an idiot after she made sure that he is an idiot?! There are lots of men out there! She can look for someone who understands her problems! May be she will fine one! At least she should try!

  Suppose, his mom was not a home-maker and she did have a 9-5 job, then she might have had a “slave” in the name of maid to get lots of things done. Someone is abused somehow here too!

  Anu: I am not stereotyping anything. I just talked about how I became a human being who can understand other problems and, I did give credit to my mom who deserves it. It is always puzzling how humans become animals when I read about Delhi incident of of that kind of disturbing news

  I dont think karate or martial art is THE SOLUTION for this problem. Men need to get educated. Men need to become sensible. Men need to be shown the right way of life! Men should behave like human beings! Not like ANIMALS!

  Preparing women to fight off men is not the solution because even men can learn the same karate and outfight women. Only one winner in any fight between two. There is going to be a loser and it might not always be the man! So “karate learning” does not solve the problem. It might initiate another problem, imho.

  BTW, I dont think we are going to agree on this. Let us disagree to agree on this! 🙂 Take care!

  • அனு சொல்கிறார்:

   // His mom should have been a home-maker. And he should not compare apples and oranges. If he does, he is an idiot.// – Wishful thinking there Varun!

   //Why does she live with an idiot after she made sure that he is an idiot?! There are lots of men out there! She can look for someone who understands her problems! May be she will fine one! At least she should try!//
   ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்களோனு தோணுது. பெண்களே ‘விரும்பி’ இந்த அடிமைச்சங்கிலிய அணிஞ்சுக்கறது தான இங்க பிரச்சனை.

   // I dont think karate or martial art is THE SOLUTION for this problem//
   நானும் அதையேத்தான் சொன்னேன் என் பின்னூட்டத்துல. கார் ஓட்டத்தெரிஞ்சா பெண் சுதந்திரம் கெடைச்சிடும்னு சொல்றா மாதிரித்தான்…”karate தெரிஞ்சுகிட்டா…வம்பு பண்ற பசங்கள handle பண்ணமுடியும்’னு சொல்றதும்!

   //I dont think we are going to agree on this//
   இந்த வரி..உங்க முழு பின்னூட்டத்துக்குமா…இல்ல below வரிக்கு மட்டுமா..?
   //There is going to be a loser and it might not always be the man! So “karate learning” does not solve the problem..
   Irrespective…I have put through my responses

   Cheers!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s