கெசடியா தின்ன ரெடியா ??

Posted: ஏப்ரல் 16, 2013 in சாப்பாடின்றி வேறில்லை!
குறிச்சொற்கள்:, , , , ,

ரொம்ப நாள் கழிச்சு பதிவு எழுதும் போதெல்லாம்,’ice breaker’ஆ இருக்கறது என்னவோ ஒரு நல்ல சமையல் குறிப்புதான். இந்த தடவையும் அப்படித்தான்

இந்த பதிவு எழுத காரணியா இருந்த டிஷ் ‘Prawn and avocado quesadilla’
அன்னிக்கி சிற்றுண்டிக்கு கட்டாயம் bread கெடையாதுன்னு முடிவு செஞ்சேன். புதுசா ஏதாவது செய்யனும்னு mood உம் இருந்தது. அப்ப கண்ணுல பட்டது Pete Evans ஓட சமையல் குறிப்பு புத்தகம் ஒன்னு
நம்ம ‘kitchen superstar’ மாதிரி இந்த ஊர்ல ஒளிபரப்பு ஆகற ஒரு நிகழ்ச்சி ‘My Kitchen Rules’
அதுல நடுவரா வருபவரு Pete Evans. விதவிதமான சமையல் வகைகளுக்காக பாக்கறது ஒரு reasonனா,Pete குடுக்கற தீர்ப்பு, குட்டி குட்டி டிப்ஸ், இந்த நிகழ்ச்சி பாக்கறதுக்கான இன்னொரு ரீசன். (ஆளும் பாக்க நல்லா இருப்பாரு என்பது மூணாவது ரீசன் ;))

pete evans

அந்த புத்தகத்துல சிற்றுண்டி வகைகள் பாத்துட்டு இருக்கும் போது, quesadilla கண்ணுல பட்டது. அதுல போட்டிருந்த எல்லா பொருளும் வீட்டுல இல்லாட்டியும். அதுதான் அன்னிக்கி சிற்றுண்டினு முடிவு செஞ்சேன்.
Quesadilla – அதாவது கெசடியா, ஒரு மெக்சிகன் (mexican) உணவு வகை.
“அந்த ஆங்கில பேர்ல ‘L’ இருக்கேமா… என்னவோ ‘கெசடியா’னு சொல்ற”னு கேக்க போறீங்கனா..ஒரு எசுப்பானிய (Spanish) மொழிச்சொல்ல ஆங்கிலத்துல மொழிப்பெயர்ப்பு செஞ்சவங்கள தான் கேக்கணும்!!

சரி இப்ப சமையல் குறிப்பு…

தேவையான பொருட்கள்…

சோளம் – 1
குடைமிளகாய் – 1
காளான் (பட்டன் வகை) – 6-7
வெள்ளை பூண்டு – 5 பல்லு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
துருவின பாலாடைக்கட்டி (Grated Cheese) – அரை கப்
தக்காளி – 1
ஒரேகனோ (oregano) – 1 தேக்கரண்டி (இது இல்லனா ஒன்னும் பிரச்சனை இல்ல; சீரகம் இல்ல பெருஞ்சீரகம் போட வேண்டியதுதான்)

இங்க ஒன்னு சொல்லிக்க விரும்பறேன்…வேற நாட்டு சமையல் வகைகள வீட்டுல செய்யும் போது, ஒரு ரெண்டு மூணு பொருட்கள் இல்லேனா, idea வ கைவிட்டுற மாட்டேன்…உடனே வீட்டுல அதுக்கு ஒப்பான பொருட்கள் இருந்தா அத சேத்துடுவேன் 🙂 (ஆனா ‘authentic’ஆ செய்யனும்னா..கட்டாயம், அந்த சமையல் குறிப்புல இருக்கற எல்லா பொருட்களையும் சரி பாத்துட்டு தான் வேலைய ஆரம்பிப்பேன்)
readymade சப்பாத்தி – 2
தாவர எண்ணெய் (vegetable oil) – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி – ரெண்டு கொத்து
தக்காளி sauce – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

quesadlla

செய்முறை விளக்கம்

1. சோளத்துல உமிய நீக்கிட்டு, கொதிக்கற தண்ணில வேக வைங்க.
2. அது வெந்துட்டு இருக்கும் போது, குடை மிளகாய், காளான், வெங்காயம், தக்காளி, பூண்டு, கொத்தமல்லிய நறுக்கி வச்சுக்குங்க.
3. வெந்த சோளத்த உதுத்துக்குங்க
4. ஒரு பொரித்தட்டுல கொஞ்சம் எண்ணெய் விட்டுக்குங்க. சீரகம் இல்ல பெருஞ்சீரகம் பயன்படுத்த போறீங்கனா, எண்ணெய் சூடானதுக்கு அப்பறம் சேருங்க. கொஞ்சம் வதக்கினதுக்கு அப்பறம், வெங்காயம், மிளகாய், பூண்டையும் சேருங்க.
5. வெங்காயம் ஒரு பொன்னிறம் ஆன உடனே, நறுக்கி வச்ச தக்காளி, குடைமிளகாய், காளான்,உதுத்த சோளத்த சேருங்க. காரத்துக்கு தகுந்தா மாதிரி மிளகாய் தூள் சேத்துக்குங்க.
6. ஒரேகனோ இருந்தா இந்த எடத்துல சேருங்க.
7. தேவையான உப்பு கலந்து, கொத்தமல்லிய சேத்து அடுப்ப நிருத்தீடுங்க.
8. ஒரு சப்பாத்திய நாலா வெட்டிக்குங்க. Contact grill இருந்தா, அத சூடாக்குங்க. இல்ல, ஒரு தவா ல கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடாக்குங்க.
9. grill இல்ல தவா சூடான உடனே, வெட்டி வச்ச சப்பாத்தி துண்டுகள ஒன்னு மேல ஒன்னு படாத மாதிரி வைங்க.
10. கொஞ்சம் வெதுவெதுன்னு ஆன உடனே, செஞ்சு வச்ச சோளம், குடைமிளகாய் கலவைய ஒவ்வொரு சப்பாத்தி துண்டு மேலயும் தேவையான அளவு பரப்புங்க
11. அடுத்து Grated cheese தேவையான அளவு ஒவ்வொரு சப்பாத்தி துண்டு மேலயும் தூவுங்க
12. கடசியா தக்காளி சாஸ சேத்து, வெட்டி வச்ச மீதி 4 சப்பாத்தி துண்டுகள sandwich மாதிரி தவால இருக்கும் சப்பாத்தி துண்டுகள் மேல வைங்க.
13. அடுப்ப கொஞ்சம் சின்னதாவே வச்சுக்குங்க. ஒரு 2 நிமிஷம் ஆனதுக்கு அப்பறம், மெதுவா சாண்ட்விச்ச திருப்பி போடுங்க. ரெண்டு பக்கமும் ஒரு பொன்னிறம் ஆகும் போது, அந்த சீசும் அழகா உருக ஆரம்பிக்கும்.
14. அவ்வளவுதான்…தட்டுல வச்சு, மேல கொஞ்சம் தக்காளி sauce இல்ல புதினா sauce இருந்தா தடவுங்க. தடபுடலான சிம்பிள் சிற்றுண்டி தயார்!

பின்னூட்டங்கள்
 1. விரிவான விளக்கமான செய்முறை… நன்றி… செய்து பார்த்திடுவோம்…

 2. வேகநரி சொல்கிறார்:

  படத்தில் பார்க்க நன்றாக இருக்கு .நன்றி.
  நாம செய்தா எப்படி வருமோ 🙂

  • அனு சொல்கிறார்:

   //நாம செய்தா எப்படி வருமோ// – நானும் மொதல இது மாதிரி புது சமையல் குறிப்புகள் ட்ரை பண்ணும்போது…அந்த புக் ல இருக்கற படங்கள் மாதிரியே இருக்கணும்னு…மொளகாய் பொடி, கேசரி கலர் அது இதுனு சேர்ப்பேன். அப்பறம் முடிவு செஞ்சேன்…எனக்கு பிடிச்சிருக்கு, யாருக்கு சமைக்கறேனோ அவங்களுக்கு பிடிச்சிருக்கு….அவ்வளவுதான் 🙂

 3. reader சொல்கிறார்:

  //“அந்த ஆங்கில பேர்ல ‘L’ இருக்கேமா… என்னவோ ‘கெசடியா’னு சொல்ற”னு கேக்க போறீங்கனா..ஒரு எசுப்பானிய (Spanish) மொழிச்சொல்ல ஆங்கிலத்துல மொழிப்பெயர்ப்பு செஞ்சவங்கள தான் கேக்கணும்!!//

  (Spanish) ll = (English) y
  (Spanish) j = (English) h or ha (e.g) A Malayalam name of “Jomy Jose” is pronounced by a Latino as ஹோமி ஹோஸே!

அனு க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s