“சமீபத்தில் பாரிஸ் நகரத்தை உலுக்கிய தீவிரவாத செயல் – சார்லி ஹெப்டோ பத்திரிக்கை ஊழியர்கள் மீதான தாக்குதலும் அதனால் நிகழ்ந்த உயிர் சேதமும்…

“சமீபத்தில் வெளியான PK திரைப்படத்தில் எழுப்பப்பட்ட இந்து மதம் பற்றிய கேள்விகளும், அதற்கு அரசியல் கட்சிகளும், சில சாதாரண மக்களும் கொந்தளித்தது, “ஏன் இந்து மதத்த பத்தி மட்டும் பேசறான்…இஸ்லாமிய மதத்துல இல்லாத அராஜகமா?”, என முன்வைக்கப் பட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் சாதுரியம் என நினைத்துக் கொண்டு இன்னொரு கேள்வியை எழுப்பியவர்கள்…

“இந்து மதத்தை இழிவு படுத்துகிறது”, என பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ புத்தகத்திற்கு எழுந்த சர்ச்சை…

“தெரிஞ்சு போச்சுமா…என்ன எழுதப் போறன்னு”, என நக்கலாக சிரிப்பவர்களுக்கு,
இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகள் பற்றியோ, அம்மதத்தின் புனிதப் புத்தகத்தில் கூறப் பட்ட அனைத்தையும் வேதவாக்காக எடுத்துக்கொண்டு செயல்படும் வீணர்களைப் பற்றியோ, ‘சகிப்புத் தன்மை மிகுந்த மதம்’ எனப் போற்றிப் புகழப்படும் இந்து மதத்தினரின் இன்னொரு கோர முகத்தைப் பற்றியோ, நான் எழுத விரும்பவில்லை.

பொதுவில் மதவாதிகள் கூறும் சகிப்புத்தன்மை என்பது என்ன என ஆராய விரும்புகிறேன்.
மதம் குறித்த சகிப்புத் தன்மை என்பதற்கு எல்லை கோடு உண்டா? அவ்வாறான எல்லைக்கோட்டை ஒருவர் ‘மீறும்’ போது, அவருக்கு இழைக்கப் படும் கொடுமைகள் நியாயமானதா?
இதற்கு விடை அறிய, முதலில் சகிப்புத்தன்மை என்பதன் விளக்கம் என்ன?
இரு நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் கோழி பிரியாணி பிரியர் இன்னொருவர் மட்டன் பிரியாணி பிரியர். ஒரு நியாயமான உரையாடலில், இருவரும் அவரவர் விருப்பத்திற்கு காரணம் என்ன என்பதை முன்னிருத்துவர்.
“பிரியாணி னா…அது மட்டன் பிரியாணி தான். சிக்கன் எல்லாம் வேலைக்கு ஆகாது, என மட்டன் பிரியர் சொல்லும் போது,
“எனக்கு பிடிச்சிருக்கு…உனக்கு பிடிக்கல. அவ்வளவு தான. ரெண்டு பேரும் friendsனா ரெண்டு பேருக்கும் ஒரே taste இருக்கனுமா என்ன?”, எனக்கூறி முடிப்பது ஒரு நடைமுறைக்கொத்த செயல்.
அப்படி இல்லாமல், சிக்கன் பிரியர், “என்னடா சொன்ன??” என அடிதடி சண்டைக்கு வரிஞ்சிகட்டி நின்றால் எப்படி இருக்கும்??
அந்த சிறுபிள்ளைத்தனம் தான் சார்லி ஹெப்டோ சம்பவத்திற்கோ, PK பட எதிர்ப்பிற்கோ, பெருமாள் முருகன் புத்தக எதிர்ப்பு சம்பவத்திற்கோ காரணம்.

“என் கடவுள் உயர்ந்தவன்”, “அனைவரின் செயலையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்; நேரம் சரியாக இருக்கும் போது, தவறாமல் தண்டிப்பான்”, என நம்புகிறீர்கள்.
அப்படி இருக்க, ஒருவர் உம் மதத்தை கேலி செய்யும் போதோ, மதம் பற்றி கேள்வி எழுப்பும் போதோ, ஏன் நிலை குலைகிறீர்கள்?
யோசித்து பார்த்ததில், அதற்கான காரணம் இவற்றில் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும்.

“துன்பத்தில் இருக்கும் மக்களின் துயர் தீர்க்க உம் கடவுள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராக எழும் பழிச்சொற்களை கேட்டு ஆத்திரமடைய அவருக்கு நேரமில்லை. அவரின் பக்தர்களான நீங்கள், அந்த வேலையை கவனித்துக் கொள்கிறீர்கள்”

அல்லது…

“தமிழர்களின் கடவுளுக்கு, அராபிய மொழியோ, ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சு மொழியோ தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவரின் பிள்ளைகளான நீங்கள், நான்கு மொழிகள் தெரிந்து வைத்திருப்பதால், அவருக்கு பதிலாக கோபப்படுகிறீர்கள்”

அல்லது…

“நாத்திகர்கள் சொல்வது போல், அவர் வெறும் கல்லே. மனிதனே தன் வசதிக்காக உருவாக்கிய ஒரு பொருள்தான் கடவுள்”, என்பது உண்மையே என புரிந்துகொண்ட நீங்கள், அந்த உண்மை வெளிவராமல் இருக்க எடுக்கும் முயற்சிகளே இந்த மதச் சண்டைகளும், வீர ஆவேசப் பேச்சுகளும்”

இவை எதுவுமே காரணம் இல்லையெனில், இதுவாக மட்டும் தான் இருக்க முடியும்

“உங்கள் வாரிசுகளின் மதம் பற்றிய புரிதலை நினைத்து அஞ்சுகிறீர்கள்”

உதாரணத்திற்கு, சார்லி ஹெப்டோ சம்பவத்தை பார்த்துவிட்டு, உங்கள் மகள், “வாப்பா…நான் உங்கள சரமாரியா கிண்டல் அடிச்சுகிட்டே இருக்கேன்; ஆனா நீங்க என்னிக்கும் கோவிச்சுகிட்டதே இல்ல; சைக்கிள், சாக்லேட் அது இதுனு வாங்கித் தரீங்க. அப்ப அல்லா மட்டும் ஏன்ப்பா…அவர கிண்டல் செஞ்சவங்கள கொன்னுட்டாரு?”, என கேட்டால்,

PK திரைப்படத்தை பார்த்து விட்டு, உங்கள் மகன், “எனக்கும் அப்படி தானம்மா…அப்பா சைக்கிள் வாங்கித் தரணும்னு எவ்வளவு pray பண்ணினேன் தெரியுமா? first rank எடுத்தேன், ‘ஸ்ரீ ராமஜெயம்’ 108 டைம்ஸ் எழுதினேன், டெய்லி 6:00 மணிக்கு எழுந்து சாய் பாபா கோயிலுக்கு போனேன்.ஆனா அப்பா அடுத்த வருஷம் பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு. சாமிக்கு வேற என்னம்மா வேணும்?”, எனக் கேட்டால்,

சமீபத்தில் செய்திகளில் பேசப்பட்டு வரும் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ புத்தகத்தின் சர்ச்சையை படித்துவிட்டு, உங்களின் பதின்வயது மகள், “பெருமாள் முருகனோட புக் ல சொல்லி இருக்கறா மாதிரி, உங்க காலத்துல, கல்யாணம் ஆகி கொழந்தை பொறக்கலனா, வேற யாருகிட்ட வேணும்னாலும் relationship வச்சுக்கலாமா மா? இந்து மதத்துல இதெல்லாம் கூட இருக்கா?!”, எனக் கேட்டால், பதில் சொல்ல இயலாமல் நிலை தடுமாறுவீர்கள் என்ற பயமாகத் தான் இருக்க வேண்டும்.

உங்களின் இந்த அபத்தமான அச்சமும், ஆபத்தான மதப் பூசல்களும் உம் பிள்ளைகளுக்கு புரியும் போது , அன்று வழங்க இருக்கும் விடையினை இப்பொழுதே தயார் செய்துக் கொள்ளுங்கள். “சின்ன பையன்…அவனுக்கு இதெல்லாம் புரிய இன்னும் வருஷம் ஆகும்”, என நினைப்பது வீணே. ஊடக வளர்ச்சி போய்க்கொண்டிருக்கும் வேகத்தில், அந்த கேள்வி-பதில் சம்பவம் நாளையே கூட நடக்கலாம். எல்லாம் தெரிஞ்ச ஒரு சான்றோன் ஆகணும்னு தான நீங்களும் விரும்பறீங்க??

அந்த நேரத்தில், “கொழந்தையா லட்சணமா இரு…விதண்டாவாதம் பேசாத”, எனக் கூறி, உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள் என்பது என் வேண்டுகோள்.

பின்னூட்டங்கள்
 1. sp senthilkumar சொல்கிறார்:

  அருமையான பதிவு. ஆழமான கருத்துக்கள். புரியாத சில விஷயங்களை சிலருக்கு நாசுக்காக புரிய வைத்திருக்கிறீர்கள். ஆனாலும், சினிமாகாரர்கள் மற்ற மதங்களை ஒதுக்கிவிட்டு இந்து மதத்தை மட்டும் கையில் எடுப்பது கூட பாதுகப்புக்குத்தான். மற்ற மதங்களை குறை கூறியிருந்தால் படமே வெளி வந்திருக்காது, என்பதுதான் நிஜம். நீங்களே குறிப்பிட்டது போல் இந்து மதம் சகிப்புத்தன்மை நிறைந்ததுதான்.

  • அனு சொல்கிறார்:

   நன்றிகள் செந்தில்!
   //மற்ற மதங்களை குறை கூறியிருந்தால் படமே வெளிவந்திருக்காது, என்பதுதான் நிஜம்// – இந்து மதம் மட்டும் இதற்கு விதிவிலக்கு இல்லையே. நாளையே ஒரு பிரபல இயக்குனர், இந்து மதத்தின் ஜாதிக் கொடுமைகளைப் பற்றியும், தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் அவலங்களைப் பற்றியும் படம் எடுக்கும் போது, அதை சூடம் ஏற்றி, பாலாபிடேகம் செய்து மக்களால் வரவேற்கப் படப்போகிறதா என்ன? பட எடுத்ததற்காக, அந்த இயக்குனர் திரை உலகிலிருந்தே துரத்தி அடிக்கப்பட்டாலும் அதிசயமில்லை.
   PK படம் கூட இந்து மதத்தை கேள்வி கேட்பது போல தொடங்கிடினும், முடிவில் போலி சாமியார்கள் மட்டுமே இங்கு பிரச்சனை என முடிந்தது. இது இயக்குனரின் கோழைத்தனம் என்பதை விட, சாதுரியமே! இந்து மதத்தை சாடியோ கேலி செய்தோ படம் எடுத்தால், தேவையற்ற பிரச்சனைகள் வரும் என தெரிந்தே, இயக்குனரின் அந்த U -Turn

   //நீங்களே குறிப்பிட்டது போல் இந்து மதம் சகிப்புத்தன்மை நிறைந்ததுதான்//
   என் பதிவில் இருந்த நய்யாண்டியை கவனிக்கத் தவறிவிட்டீர்களோ என நினைக்கிறேன்.

 2. வேகநரி சொல்கிறார்:

  நீங்க சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.பெருமாள் முருகன் புத்தக எதிர்ப்பு ஜாதியை அவமானபடுத்துவதாக எதிர்ப்பு என்று தமிழ்மணத்தில் படித்த சில கட்டுரைகளின்படி நினைத்திருந்தேன். எப்படி இருந்தாலும் இந்த மதம், ஜாதி, இனத்தை அவமதிப்பதாக சொல்லி புத்தகங்கள், திரைபடங்கள், பத்திரிக்கைகளை தடை செய்ய முயற்ச்சிப்பதை அனுமதிக்க முடியாது.

 3. johan paris சொல்கிறார்:

  “களவு போன ஆறாம் மாதம் நாய் குரைத்தது போல்”- பெருமாள் முருகன் புத்தகத்துக்கு இப்போ ஏன்? பிரச்சனை வந்தது. இதை யாராவது புரியவைக்கவும்.
  நான் பிரான்சில் வாழ்கிறேன். இந்தக் கொலைகள் பற்றி சில பிராஞ்சியர்கள் – அது கடிக்கும் எனத் தெரிந்து ஏன்? சீண்டினார்கள். அந்தச் சீண்டல் தவறு எனும் அபிப்பிராயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்த எண்ணிக்கை மிகக் குறைவு.
  இக்கொலைகாரர்கள் உயிர்கள் மேல் மதிப்பு உள்ளவர்கள் அல்லது அவர்கள் உயிர் உட்பட, இவர்கள் வசமிருந்து நம்மைக் காக்க வேண்டுமா? ஒதுங்குவதே சிறப்பு!
  மற்றும் படி..எந்த மதத்திலும் சகிப்புத் தன்மையோ எந்தப் புண்ணாக்குமில்லை.
  புனிதமும் இல்லை.

 4. johan paris சொல்கிறார்:

  //இக்கொலைகாரர்கள் உயிர்கள் மேல் மதிப்பு உள்ளவர்கள் அல்லது //
  இக்கொலைகாரர்கள் உயிர்கள் மேல் மதிப்பு உள்ளவர்கள் அல்ல! என வாசிக்கவும்.- நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s