Podcasting – என்னோட புது முயற்சி!

Posted: பிப்ரவரி 28, 2016 in Podcasts
குறிச்சொற்கள்:, , , , ,

Podcast எனப்படும் இணையம் வழியான ஒலிப்பதிவுகள் கேட்பது ஒரு சில வருடங்களாகவே எனக்கு பழக்கமாக இருந்துள்ளது. போட்காஸ்டில் ஒரு ஈடுபாடு ஏற்படக் காரணமாய் இருந்தது சுரேஷ் அவர்களின் englishtamil வலைத்தளம் தான். அதில் அவரின் திரை விமர்சனங்களையும், சமூகப் பிரச்சனைகள் பற்றிய பேச்சுக்களையும் விரும்பி கேட்போம். அவற்றை கேட்டப் பிறகு, பல முறை ஏதாவது சுற்றுலாப் பயணங்கள் போது ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் தோரணையில் தொடர்விளக்க உரை (commentary) அளிப்பேன்!!! மற்றபடி, ஒரு podcast பதிவு செய்ய மட்டும் வாய்ப்பு உருவாக்கிக்கொள்ளவில்லை.
“அதற்கு சரியான software, mic எல்லாம் இல்லாவிடில் சரியாக அமையாது”, என தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். சமீபத்தில் என் பள்ளித் தோழி ஒருத்தியுடன் வெகு ஆண்டுகளுக்குப் பிறகு பேசும் வாய்ப்பு கிடைத்தது. பக்கம் பக்கமாக கருத்து பரிமாற்றம் செய்வதற்கு பதில், என் கருத்தை ஒரு கேட்பொலி கோப்பாக (audio file) அனுப்பினேன். அதன் தரம் கொஞ்சம் நன்றாகவே 😉 இருந்ததனால், என் நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற ஒரு வழி கிடைத்ததாக நினைத்தேன். முதல் இணையதள அலைபரப்பு இதோ!

https://drive.google.com/file/d/0B1lruf1EhTeNUGFSeU5rdGVRTWs/view?usp=sharing

 

 

பின்னூட்டங்கள்
 1. வேகநரி சொல்கிறார்:

  உங்களது புது முயற்ச்சி வெற்றி.ஒலி சேவை கேட்டேன் 🙂 பின்பு எழுதுவேன் நேரம் கிடைக்கும் போது.
  உங்களுக்கு பின்னோட்டம் போடுவது சிரமாயிருந்திச்சு.

  • அனு சொல்கிறார்:

   ரொம்ப நன்றிங்க…முயற்சி எடுத்து கேட்டதுக்கு 🙂 நேரம் கெடைக்கும் போது பின்னூட்டம் இடுங்க…ஒன்னும் அவசரம் இல்ல! ஒரு சிறு இடைவேளைக்கு அப்பறம் தான் அடுத்த பதிவ பண்ணலாம்னு இருக்கேன்

 2. வேகநரி சொல்கிறார்:

  மிகவும் நல்லாகவே பேசினீர்கள் .ஆங்கிலகலவை என்று அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியல்ல. ஊரிலே தமிழிலே கேள்வி கேட்டா ஆங்கிலகலத்திலே அடித்து விடுவதை எல்லாம் நிறையவே பார்த்திருக்கோம் அப்படியல்ல உங்க பேச்சு மிகவும் நல்லாகவே பேசினீர்கள்.ஆங்கிலகலவை என்று அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியல்ல. ஊரிலே தமிழிலே கேள்வி கேட்டா ஆங்கிலகலத்திலே தமிழையும் கொஞ்சம் கலந்து அடித்து விடுவதை எல்லாம் நிறையவே பார்த்திருக்கோம்:) அப்படியல்ல உங்க பேச்சு.இயற்கையாக இருந்திச்சுங்க.
  தொடர்ச்சியா பேசுவது உங்களுக்கு வரயில்லையா! அதனால் என்ன நீங்க என்ன தமிழக அரசியல்வாதியா அப்படி தொடர்ச்சியா பேசுவதற்கு 🙂
  உங்கள் விருப்பத்தை தொடருங்கள் வாழ்த்துக்கள்.

  உங்க வலைதளத்தில் முன்பு பின்னோட்டமிடும்போது மிக சாதாரணமாயிடலாம் ஆனா இப்போ
  முடியல்ல நான் கூகிள் அக்கவுண்டண்டுக்கு சென்று தான் பின்னோட்டமிட்டேன்.எனக்கு பிரச்சனையில்லை.
  கூகிள் அக்கவுண்டண்டு இல்லாதவங்க உங்களுக்கு முன்போல் பின்னோட்டமிடமுடியுமா தெரியல்ல.

  • அனு சொல்கிறார்:

   இந்த பின்னூட்டம் படிப்பீங்களானு கூட தெரியல! ரொம்ப sorry ங்க! இவ்வளவு விளாவரியா பின்னூட்டம் எழுதி இருக்கீங்க…நான் பாக்கவே இல்ல 😦

   இப்ப தான் மெதுவா, எனக்கு பட்டத பேசி ஒலிப்பதிவா பதிவு செய்யற அளவுக்கு தைரியம் வந்திருக்கு நினைக்கறேன்!

   நீங்க இன்னும் என் பதிவுகள follow பண்றீங்கனா, என் சமீபத்திய பதிவு பத்தின உங்க கருத்துக்கள கேக்க ஆவலா இருக்கேன் 🙂

   வருகைக்கு மீண்டும் நன்றிகள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s