“அது என் வாயில இருக்கற எச்சில் மாதிரி இருக்குமா…அந்த spider க்கு எப்பிடி கிடைச்சது?”, என சுவரோரம் இருந்த சிலந்தி வலையை உற்று கவனித்தபடியே கேள்வி எழுப்பினான் ஆறு வயதான பரிதி.

“அட…சரிதான் பரிதி. ‘spitting spiders’ னு ஒரு வகையான சிலந்தி இருக்கு. அது தன்னோட எச்சில பயன்படுத்தி வலைய பின்னுமாம். ஆனா இது என்ன ரகம்னு தெரியல. அடுத்த தடவ library போகும் போது, spiders பத்தி படிக்கலாம்”, என உற்சாகத்துடன் விடையளித்தாள் மீரா, பரிதியின் தாய்.

“thanks மா”, என கூறியபடி, தன் விளையாட்டினை தொடர்ந்தான் பரிதி.

மதிய உணவு மேசையில்…

“அம்மா அனுமான் சாமி meat சாப்பிட மாட்டாராம்…பாட்டி சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா நேத்து Nat Geo ல, கொரங்கு meat சாப்பிடறத காட்டினாங்க. அப்ப அனுமான் சாமி வேற type of கொரங்கா மா?”, என சற்றே சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, கேள்வி எழுப்பினான் பரிதி.

“அது வந்து…”, என ஏதோ சொல்ல ஆரம்பித்து, “carrot சாப்பிட மறந்துட்ட பாரு. நீ சாப்பிட்டு முடி. அம்மா டேபிள் சுத்தம் பண்ணிட்டு, உனக்கு என்ன பண்ணப்போறேன்?”, என உரையாடலை திசைத்திருப்பினாள் மீரா.

“gingerbread “, என குதூகலத்தில் உரக்கச் சொன்னான் பரிதி.
எதையோ கூறி திசைத்திருப்பி விட்டோமே என எண்ணி சற்றே வேதனை அடைந்தாள் மீரா. அழைப்பு மணி சத்தம் கேட்டு, நுழைவாயிலுக்கு விரைந்தாள்.

அடுத்த நாள் காலை

“அம்மா ஒரு ஐடியா…இன்னிக்கி ஒரு நாள் நான் brush பண்ணாம இருக்கட்டுமா? பக்கத்து வீட்டு அக்காவோட pet dog மணி இருக்கான் ல, அவனுக்கு அவங்க brush பண்ணினதே இல்லையாம்”, என அடுத்த கேள்விக்கணையை தொடுத்தான் பரிதி.
“ம்ம்…உன் ஐடியா க்கு வரேன். அதுக்கு முன்னாடி, ‘the very hungry caterpillar’ கதைல, அந்த caterpillar என்ன சாப்பிடும்?”, என மீரா கேட்க,
“ஒரு chocolate cake , ஒரு sausage, ஒரு salami, ஒரு lollipop, ஒரு muffin, ஒரு cupcake அப்பறம் ஒரு slice of watermelon”, என சட்டென விடையளித்தான் பரிதி.
“good…அன்னிக்கி காலைல அந்த caterpillar பல் தேய்ச்சதா?”, இது மீரா.
“இல்லியே”, இது பரிதி.
“அன்னிக்கி நைட் என்ன ஆகும்?”, இது மீரா.
“அந்த caterpillar க்கு வயித்து வலி வரும்”, இது பரிதி.
“so …காலைல பல் தேய்க்காம அவ்வளவு foods சாப்பிட்டதுனால, அந்த caterpillar க்கு வயித்து வலி வந்தது. இன்னிக்கி நீயும் பல் தேய்க்காம omelette, அப்பறம் gingerbread, பிரியாணி, ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிட்டா, என்ன ஆகும்?”, என சிரிப்பை அடக்கியபடி மீரா கேள்வி எழுப்ப…
“இல்லமா…நான் brush பண்றேன்”, என பற்பசையை கையிலெடுத்தான் பரிதி.

இரவு உணவு மேசையில்…

“அம்மா…அஸ்வின் வீட்ல beef சாப்பிட மாட்டங்களாம். ஆனா lamb , சிக்கன், fish எல்லாம் சாப்பிடுவாங்க,. cow சாமியாம்…அதுனால kill பண்ண கூடாதாம். எனக்கு ஆனா beef ரொம்ப பிடிக்குமே.. நாமளும் இனி சாப்பிட மாட்டோமா?”, என ஏக்கத்துடன் வினவினான் பரிதி.

“பரிதி நீ சாப்பிட்டு போய் நைட் டிரஸ் போட்டுக்கோ. அம்மா வந்து ஸ்டோரி படிக்கறேன்”, என ஒரு வெறுப்பு கலந்த கோபத்தில் விடையளித்தாள் மீரா.

சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜகன் சற்று அதிர்ச்சியுடன் மீராவை பார்த்தான்.

பரிதி அவன் அறைக்கு சென்ற உடன், நாற்காலியில் அமர்ந்த படி, அழ ஆரம்பித்தாள் மீரா.
“என்ன ஆச்சு மீரா?”, என நிதானமாய் வினவினான் ஜகன், மீராவின் கணவன்.

“இல்ல ஜகன் , ரெண்டு மூணு நாளாவே பரிதிய ரொம்ப ஏமாத்தறேனோனு ஒரு feeling. சாமி பத்தி இல்ல meat சாப்பிடறத பத்தி கேள்வி கேக்கும் போது, அதுக்கு answer பண்ணாம, topic அ மாத்தறேன் இல்ல அவன் கிட்ட கோவப்படறேன். “அப்பிடி எல்லாம் கேக்கக்கூடாது , சாமி கண்ண குத்தும்”, “அது எல்லாம் அப்பிடித்தான்” மாதிரியான answers கொடுக்கவும் விருப்பமே இல்ல”, என இரண்டு நாட்களாக புழுங்கிக் கொண்டிருந்த விஷயத்தை போட்டு உடைத்தாள் மீரா.

ஒரு சிறிய புன்னகையுடன், “நான் தான் பாக்கறேனே, அவன் எப்படா கேள்வி கேப்பான்னு காத்திட்டு இருக்க நீ! அவன் எதையாவது பாத்து excite ஆறத விட, அத அவனுக்கு explain பண்றதுல நீ excite ஆறதுதான் அதிகமா இருக்கு.

ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ மீரா…, நம்ம பையன எப்பிடி வளக்கணும்னு நினைக்கறோமோ, அப்பிடியே வளப்போம். இப்ப உனக்கு ஒரு விஷயத்துல உடன்பாடு இல்லனா, ஊருக்காக உன் கருத்த மாத்திக்க மாட்ட. சரிதான?
பரிதியையும் அப்பிடி தான் வளக்க நினைக்கறோம்னா, அவன் மட்டும் எதுக்கு ஊர் கருத்தோட ஒத்து போகணும் சொல்லு?”, என எடுத்துரைத்தான் ஜகன்.

சற்றே யோசித்த மீரா, “கரெக்ட் ல; thanks ஜகன். ஊருக்கு பயந்து பயந்து நான் அவதி பட்ட நிலைக்கு அவனையும் தள்ள பாத்தேன் ல! சரி நீ போய் படு. நான் அவனுக்கு ஸ்டோரி படிச்சிட்டு வரேன்”, என ஒரு நிம்மதி கலந்த புன்னகையுடன் விடையளித்தாள் மீரா.

பரிதியின் அறையில்…

“அம்மா இன்னிக்கி Rainbow Rob படிப்போமா?”, என கதைப்புத்தகத்தை நீட்டினான் பரிதி.

“நானும் அத படிக்கனும்னு தான் நினைச்சேன்”, என நினைத்தபடியே, புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தாள் மீரா.

கதையின் கடைசி வரிகளை படித்தபடியே, பரிதியை கட்டி அனைத்துக் கொண்டாள்; “நீ யாரு மாதிரியும் இருக்கணும்னு அவசியம் இல்ல பரிதி; உனக்கு ஒன்னு பிடிச்சிருக்கு and அது உனக்கு danger எதுவும் கொடுக்கலெனா, அத தயங்காம பண்ணு. அஸ்வினோட அம்மா அவன தான beef சாப்பிடக் கூடாதுனு சொன்னாங்க. உனக்கு beef புடிக்கும்னு எனக்கு நல்லா தெரியுமே. அதுனால தான் நாளைக்கி உனக்கு meatballs பண்ணப்போறேனே”, என குதூகலத்துடன் உரைத்தாள் மீரா.

“சூப்பர் மா”, என கூறியபடியே, கண்களை கசக்கினான் பரிதி.

“சரி கன்னுக்குட்டிக்கு தூக்கம் வந்தாச்சு. நல்லா தூங்கு; goodnight”, என பரிதியை படுக்கையில் படுக்க வைத்து முத்தமிட்டாள் மீரா.

விளக்கை அணைத்தபடி, அறையை விட்டு வெளியே வந்தாள், மீண்டும் அதே நிம்மதியும் பெருமிதமும் கலந்த புன்னகையுடன்.

கதையின் ஒலி வடிவம்:

Advertisements
பின்னூட்டங்கள்
  1. snravisomeswaran சொல்கிறார்:

    ரொம்ப நாள் கிழித்து ஒரு பதிவு போல, நன்றாக இருந்தது. //உனக்கு ஒன்னு பிடிச்சிருக்கு and அது உனக்கு danger எதுவும் கொடுக்கலெனா, அத தயங்காம பண்ணு// மிக மிக அவசியமான பிள்ளைகளுக்கு காற்று கொடுக்க வேண்டிய ஒரு பழக்க்ம். குழந்தைகள் கேட்க்கும் கேள்விக்கு பதில் சொல்ல துவங்கினால் ஒரு PhDயே வாங்கிடலாம்.

    • அனு சொல்கிறார்:

      நன்றிகள் ரவிசோமேஸ்வரன் 🙂 PhD கிடைக்கிறதோ இல்லையோ…பொறுமை மட்டும்… பன்மடங்கு பெருகியிருக்கும் 😉

  2. வேகநரி சொல்கிறார்:

    தெளிவு நல்ல கதை.
    நானும் அஸ்வின் மாதிரி தான் 🙂 ஆனா மத புத்தகம் சொன்னதால் அல்ல.

    • அனு சொல்கிறார்:

      நன்றிகள் வேகநரி 🙂 நீங்கள் ‘ஜகன்’ கதாப்பாத்திரத்தைப் பற்றி தானே பேசுகிறீர்கள்? வாழ்த்துக்கள்!

  3. வேகநரி சொல்கிறார்:

    🙂 விபரமாக சொல்வதானால் உணவு விஷயத்தில் அனுமான் மாதிரி தான் நானும் ஆனா மத நூல் காட்டிய வழி முறையினால் அல்ல.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s