எல்லாமே ஒரு சதிங்க…ஜாக்கரதை!!!

Posted: நவம்பர் 25, 2017 in பிதற்றல்
குறிச்சொற்கள்:, , , , , , ,

இந்த பாரிசாலன் பத்தி தெரியாதவங்களுக்கு…இவரு ‘தன்னையே ரொம்ப சீரியசா எடுத்துக்கற’ கூட்டத்த சேர்ந்த தம்பி 😉

இவரோட வாயில இருந்து…வர்ற ஒவ்வொரு வார்த்தையும், சித்தன்னவாசல் சிற்பங்களுக்கு அடில, இடம் இருந்தா பொறிக்கப்பட வேண்டிய பொன்மொழிகள் (தம்பியையும் முடிஞ்சா கூடவே அமர்த்தலாம்) [ஆனா அப்பறம் சிற்பங்களும் கடுப்பாகி, தம்பி உயிருக்கு பங்கம் ஏற்பட்டா, நான் பொறுப்பில்ல!!!]

“பெண்ணியம் பேசறது யாரு பாருங்க…பெண்ணாக இருக்க விரும்பாத பெண்கள் தான். “ஒரு பொண்ணா பொறந்து தொலைச்சிட்டோமே”னு வருத்தத்துல தான், பசங்க மாதிரி இருக்க விரும்பறாங்க; பாப் கட் வச்சுக்கறாங்க, ஜீன்ஸ் போட்டுக்கறாங்க”

“பெண்ணுக்கு இலக்கணம் என்ன…தாய்மை! அந்த தாய்மையே வேணாம்னா, நீ பெண்னே கெடையாது”

“ஆண் -பெண் சேர்க்கை இனப்பெருக்கத்துக்கு மட்டும் தான்; மோகத்துக்காக sex னா அது ஆபத்து. அதுனால தான் prostitution வருது”

“லட்சுமி படத்துக்கு எதுக்கு விருதெல்லாம் கொடுக்கறாங்க நினைக்கறீங்க? அந்த படக்
கருத்த promote செய்யத்தான்; “இது தான் பெண் விடுதலை போல”னு பெண்கள நினைக்கத் தூண்டறங்க”
“ஒரு பொண்ணு எப்படி இருக்கணும்…குடும்ப உணர்வோட இருக்கணும். “இல்ல அது கஷ்டம், நாம அடிமை, நம்ம கீழ தான் போல” னு ஒரு உளவியலுக்குத் தள்ளி விடறாங்க***** அதுல இருந்து வெளில வர்றதுக்கு, அவ தவறு செய்யறத ஒரு புரட்சிகரமான செயலா பாக்கறா”

கடைசியா ஒரு ‘நச்’ கருத்து…..”ஒரு பெண் பெண்ணா இருந்தா தாங்க பெண் விடுதலை…ஆணா மாறினா என்னதிது? அது பெண் விடுதலை கெடையாது”

****இலுமினாட்டிக்கள் னு ஒரு குழு செய்யற சதியாமாம் இது; தமிழ் பண்பாட்ட சீர்கொலைக்கறது தான் இவங்க குறிக்கோளாம்.

“நாராயணா….இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா”!!!!

பின்னூட்டங்கள்
 1. வேகநரி சொல்கிறார்:

  லட்சுமி என்ற ஒரு படம் வந்ததே உங்க பதிவு மூலமே அறிகிறேன்.
  பெண்கள் அவர்கள் விருப்பபடி தலை முடியை விரும்பிய அளவில் வைத்திருப்பது, ஜீன்ஸ் அணிந்து கொள்வது எல்லாம் குற்றம் என்று சொல்லும் தமிழர்களை வெளிநாடுகளிலுமே கண்டிருக்கேன்.இப்படியான பாரிசாலனுக்கு ஊரில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

  • அனு சொல்கிறார்:

   //அவர்கள் விருப்பபடி தலை முடியை விரும்பிய அளவில் வைத்திருப்பது, ஜீன்ஸ் அணிந்து கொள்வது எல்லாம் குற்றம் என்று சொல்லும் தமிழர்களை வெளிநாடுகளிலுமே கண்டிருக்கேன்// – இதுல அதிசயம் எதுவும் இல்லீங்க வேகநரி. மனதளவுல ஒரு கருத்த மனிஷன் நம்பாத வரைக்கும், ஊரே கூடி நின்னு குரல் குடுத்தா கூட, அவன் கருத்து மாறப்போறதில்ல.

   //இப்படியான பாரிசாலனுக்கு ஊரில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.// – எனக்கே கூட இத ஷேர் பண்ணினதுக்கு அப்பறம், காலாணாக்கு பயனில்லாத ஒரு விஷயத்துக்கு நானே விளம்பரம் குடுத்தேட்டேனோ னு தோணிச்சு 😦

   • வேகநரி சொல்கிறார்:

    //எனக்கே கூட இத ஷேர் பண்ணினதுக்கு அப்பறம் காலாணாக்கு பயனில்லாத ஒரு விஷயத்துக்கு நானே விளம்பரம் குடுத்தேட்டேனோ னு தோணிச்சு //

    இல்லை .நீங்க இந்த விஷயத்தை பதிவிட்டது தெரியபடுத்தியது மிகவும் நல்லது. பல ஆரம்ப இளைஞர்கள் ஒன்றும் புரியாத குழப்ப நிலையில் இருப்பார்கள். நமது நாட்டவர்கள் பொரும்பான்மையானவர்கள் சொல்கிறார்களே, பெண் என்றாலே அடங்கி ஒடுங்கி மூடி கொண்டு தான் இருந்தேயாக வேண்டும் என்று, மதங்களும் அதை தானே சொல்கின்றன, ஆகவே அது தான் சரியானதா இருக்குமோ என்று குழம்புவார்கள் .
    நீங்க இப்படியான பதிவுகள் போட வேண்டும் மேலும் விளக்கமாக.

   • அனு சொல்கிறார்:

    மிக்க நன்றிங்க உங்க ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கு 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s