Archive for the ‘அறிமுகப்பதிவு’ Category

என்ன தான் சொல்லவர??

Posted: ஜூலை 17, 2010 in அறிமுகப்பதிவு
குறிச்சொற்கள்:,

‘பிதற்றல்’…இது என்னடா பிதற்றல் உளறல்னு உளறிக்கிட்டு இருக்கு இந்த பொண்ணுன்னு நினைப்பீங்க.
இந்த வலைப்பதிவுல நான் முன் வைக்கும் பல கருத்துக்கள் ரெண்டு வருஷம் முன்ன வரைக்கும் எனக்கே பிதற்றலா தான் தோணியிருக்கு.
இந்த வலைப்பதிவு செய்றது கூட சினிமா விமர்சனத்துக்கு, கிசுகிசுக்கள் எழுதறதுக்கு, மொத்ததுல வெட்டி கதை அடிக்க இன்னும் ஒரு ஊடகம்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா இப்போ, சமூகத்துல நடக்கும் நிகழ்ச்சிகள பத்தி என் கருத்து, அப்ப அப்ப ஒரு குட்டி கவிதை, ஒரு சிறுகதை, கொஞ்சம் சமையல் குறிப்புகள்னு இந்த வலைப்பதிவுல எனக்கு பிடித்த பிடிக்காத விஷயங்கள பதிவு செய்ய ஒரு விருப்பம். இன்னும் எதுக்கு காத்திருக்கணும்னு தொடங்கிட்டேன்.

Advertisements