Posts Tagged ‘indian marriages’

(தொடரின் முதல் பாகத்தை படிக்க, இங்கே சொடுக்கவும்)

>> “யப்பா…அவ அழ ஆரம்பிச்சா ஊர கூட்டிடுவா”
திரைப்படங்களில் கணவன் அல்லது காதலன் கதாப்பாத்திரங்களின் வசனங்களில் இதை கேட்டுள்ளேன் (சமீப காலத்தில்…கதாநாயகர்களின் வசனப் பட்டியலில் கட்டாயம் இது போன்ற வரிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது ஒரு ‘நியதியாக ஆகி விட்டது போல் உள்ளது!!!). சமூக வலைத்தளங்களிலும் இந்த குற்றச்சாட்டை பறைசாற்றுபவை…
“put an end to his will power using your tear power”
(ஆணின் (தலைவனின்) திடமான மனதை உன் கண்ணீரால் தகர்த்தெறி)
ஒரு கணவன்-மனைவி உறவில், அழுகையே ஒரு தரப்பின் விடையாக இருக்கும் போது , ஒரு வலிமையான பேச்சுவார்த்தைக்கே இடமின்றிப் போகிறது.
“அவ்வளவுதாங்க…அவ அழ மட்டும் ஆரம்பிச்சா, அடுத்து பேச்சுவார்த்தையா…முடிவே எடுத்து முடிச்சா மாதிரி தான். அவ விருப்பம் தான் அங்க செல்லுபடி ஆகும்”, என அலுத்துக் கொள்ளும் ஆண் தோழர்களுக்கு….ஓரிரு கேள்விகள்…

“வீட்டிற்கு வேண்டிய முடிவுகள் எடுக்க இருக்கும் போது, அந்த பேச்சுவார்த்தையை எப்பொழுது ஆரம்பிப்பீர்கள்? அதற்கென நேரம் ஒதுக்கி, இருவரும் வேறெதிலும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வீர்களா? அல்லது வேறு வேலைகள் தடபுடலாக நடக்கும் போது, இதையும் அவிழ்த்து விடுவீர்களா?”

“உங்களின் கருத்தை முன் வைக்கும் போது, எத்தனை முறை அதிலிருக்கும் நல்ல விஷயங்களையும், அந்த முடிவினால் வீட்டு வரவு-செலவில் ஏற்படவிருக்கும் முன்னேற்றத்தைப் பற்றி கூறி உள்ளீர்கள்?”

“எத்தனை முறை மனைவியின் முடிவு சரி இல்லை என விளக்க முயன்றிருக்கிறீர்கள்?”

“மனைவியின் முடிவு தான் என முடிவான பிறகு, எத்தனை முறை..அதனால் நிகழவிருக்கும் பணவிரயம் பற்றியோ அல்லது நேர விரயம் பற்றியோ, அவரிடம் விளக்க எத்தனித்திருக்கிரீர்கள்?”

இவை அணைத்திருக்கும் முன்னதாக, திருமணத்திற்கெல்லாம் முன்னதாக, உங்களுக்கு உம் பெற்றோர் ஒரு பெண் பார்த்திருந்தாலும், “இனி வரும் என் வாழ்கையை இவளுடன் கழிக்க இருக்கிறேன். அவளிடம் சில நாட்கள் பேசி, இருவருக்கும் சரிபட்டுவருமா என தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்” என கூறியதுண்டா?”

வாய்ப்பு உருவான போது, “வீட்டுல முடிவுகள் எடுக்கும் போதெல்லாம், நாம ரெண்டு பேரும் கலந்து ஆலோசிச்சு முடிவு எடுக்கனும்னு தான் எனக்கு ஆசை” மாதிரியான கருத்து பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா?

மேலே பட்டியலிடப்பட்ட கேள்விகள் எதற்கும் ஒரு கச்சிதமான பதில் இல்லாத போது , “கல்யாண வாழ்க்கையே தலவலிங்க”, என்ற உங்களின் புலம்பல் எவ்வாறு நியாயமாகிறது?

திருமணம், திருமணத்தில் அமையும் கணவன் மனைவி உறவு…இவைகள் என்றோ ஒரு முறை நகைச்சுவையாய் கிண்டல் அடிக்கப்படும் போது , உதட்டில் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைக்கும். அதுவே, நகைச்சுவை என்றாலே திருமணங்களை கிண்டல் செய்வது தான், என்றாகும் போது, சற்று அதிகமாகவே சலிப்பு தட்டுகிறது.

திரைப்படங்களில் மட்டும் அல்லாது, whatsapp, facebook என அனைத்து சமூகத்தளங்களிலும்…அவை உலா வரும் போது , “திருமணம் என்ற ஒரு உறவு, நையாண்டி செய்யப் படக் காராணம் யார்”, எனக் கேட்கத் தோன்றுகிறது.
யோசித்து பார்த்தால், அந்த மாதிரியான ‘காமெடி’ காட்சிகளுக்கு சிரிப்பவர்கள் பெரும்பாலும், தம் தரப்பிலிருந்து, அவர்களின் திருமணம் வெற்றி அடைய முயற்சிகள் எதுவும் எடுக்காதவர்களே.
இந்த பதிவு, நம் ஊரில் நடக்கும் திருமணம் என்ற சடங்கில் இருக்கும் கேவலங்கள் என்ன, மேற்கில் அதற்கு ஒரு மாற்றுச் சடங்கு உள்ளதா, என வாதிக்காது. தான் விரும்பிய படிப்பைப் படித்து, தனக்கு விருப்பமான வேலையில் இருந்தும் கூட, நம்மூரின் சிலரால், தம் மண வாழ்க்கையை தம் விருப்பத்திற்கு ஏற்ப ஏன் மாற்றிக்கொள்ள முடிவதில்லை என்பது பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி. பதிவு சற்று நீளமாகிவிடும் என்பதனால், ஒவ்வொரு காரணமாக எடுத்துக்கொண்டு, பதிவுத் தொடர் ஒன்றை கொடுக்க விரும்புகிறேன்.

>> “பெரியவங்க பேச்சுக்கு மரியாதை குடுக்கணுமா வேண்டாமா ..?”

21 வயது கடந்தவர்களுக்கு நாட்டை யார் ஆள வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை அளிக்கப் படுகிறது. ஆபாசமோ, வன்முறையோ…திரைப்படங்களில் இடம்பெறும் போது, அதை ஆராய்ந்து உட்கொள்ளும் சுதந்திரமும் ‘adults’ என அழைக்கப் படும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப் படுகிறது.
அதுவே ஒரு குடும்பச் சூழலில் வரும் போது , பெண்ணுக்கோ ஆணுக்கோ அந்த ‘adult’ பதவி வழங்கப் படுவதில்லை.

பள்ளிப் பருவத்திற்குப் பிறகு படிக்க வேண்டுமா வேண்டாமா, ஆசைப் பட்டால் என்ன படிக்க வேண்டும், திருமணம் வேண்டுமா வேண்டாமா, வேண்டுமெனில் எந்த வயதில் செய்துக் கொள்ள வேண்டும், யாரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக் கொள்ளுதல் அவசியமா, பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டால், எந்த வயதில் பெற்றுக் கொள்ள வேண்டும், எத்தனை பெற்றுக்கொள்ள வேண்டும் மாதிரியான ஒரு ஆணோ பெண்ணோ அவர்கள் விருப்பத்திற்கு மட்டும் ஏற்ப எடுக்க வேண்டிய முடிவுகள், பெரும்பாலும் பெற்றோர்களால் மட்டுமே முடிவு செய்யப் படுகிறது.
அதற்கு கொடுக்கப் படும் ‘விளக்கங்கள்’ பல…

“புடிச்ச பொம்மையும், புடிச்ச சைக்கிளும் வாங்கிக்கொடுத்த அப்பாக்கு உனக்கு புடிச்ச மாப்பிள்ளைய பாக்க தெரியாதா”?

“பெத்தெடுத்து, படிக்க வச்சிருக்கோம்…இது வரைக்கும் ஒன்னும் கொறை வைக்கலியே. இப்ப என்ன புதுசா, “நான் பாத்துக்கறேன்”னு சொல்ற?”

“ஒவ்வொரு வரனையும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தா…நீ ஆசைபடும் போது , ஒரு நல்ல வரன் கெடைக்காது”

“என்ன செட்டில் ஆகணும்…செட்டில் ஆகணும்னு பொலம்பிகிட்டு இருக்க? நானும் உன் அப்பாவும் அப்படி நெனைச்சிருந்தா, நீங்க பொறந்திருக்கவே மாட்டீங்க. ஏனா இன்னிக்கி வரைக்கும் ஒரு சொந்த வீடு கெடையாது. சம்பாதிச்சத எல்லாம் உங்க படிப்புக்கே செலவழிச்சாச்சு”

“உன் கூட படிச்சவங்க எல்லாம் கல்யாணம் ஆகி, ரெண்டு கொழந்தைங்க வச்சிருக்காங்க…நீ என்னனா, பாத்துக்கலாம், பாத்துக்கலாம்னு தள்ளிப் போட்டுக்கிட்டு இருக்க”

“உங்க ஆசை இருக்கட்டும்…எங்களுக்கு பேரன் பேத்திய கொஞ்சனும்னு ஆசை இருக்காது? நம்ம வம்சம் தழைக்க வேண்டாமா?”

இப்படியான ’emotional blackmail’ வசனங்களை கேட்கும் போது, “நெஜமாவே உங்க புள்ள பாசத்துக்கு அர்த்தம் தான் என்ன”, என கேட்கத் தோன்றுகிறது.

“அவங்க விருப்பப் படி dress போடட்டும், friends கூட நல்லா கும்மாளம் அடிக்கட்டும்…இதுக்கு மேல என்ன சுதந்திரம் வேணும்? அந்த புள்ள மேல பாசம் இருக்கறதுனால தான, என்ன வேணும்னாலும் வாங்க காசு குடுக்கறேன்”, என்ற ‘புள்ள பாசம்’ பொருள் விளக்கம் சற்று நெருடலாகவே உள்ளது.
“அவங்களுக்கு புடிச்சதெல்லாம் வாங்கித் தரோம். அப்ப எங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கணும், கொழந்தை பெத்துக்கனும்னு ஆசை படறதுல தப்பென்ன”, என நீங்கள் கூறுவது,
“புல்லு கட்டும், தீவனமும் போட்டு வளக்கறேன்…பலி குடுக்கறது என் உரிமை”, போன்றுள்ளது.

emotional blackmailக்கு ஆயுதமாய் பயன்படுத்தப்படும் இன்னொரு பயங்கரமான ஆயுதம், பெற்றோரின் அழுகை.
அதன் கூட,

“ஒரு வேளை சோறு கூட வீட்டுல இருக்காது…ஆனா பையன் பசி தாங்க மாட்டான்னு, கடன ஒடன வாங்கி வடிச்சு போடுவேன்”

“அப்பா ஒரு ஓட்டை சைக்கிள் வச்சிருந்தாரு. ஒரு ஸ்கூட்டர் கூட வாங்கினது கெடையாது. ஆனா பொண்ணு கூட்ட நெரிசல்ல காலேஜ் போறாளேனு வண்டி வாங்கிக்கொடுத்தோம்”

“கல்யாணம் காட்சிக்கு போனா…அவ அவ பாட்டி ஆயிட்டேன், பொண்ணு பிரவசத்துக்கு வந்திருக்கான்னு அளக்கறா. நான் அவங்க முன்னாடி வாய மூடிட்டு இருக்க வேண்டியிருக்கு.”

சமூகத்தின் ‘கெட்டப் பெயரை’ சம்பாதித்துவிடக் கூடாது என்ற குறுகிய நோக்கத்தில் செயல்படும் பெற்றோரிடம், வாய் திறந்து பேசவோ, விளக்கவோ முயற்சிக்காத போது, பதிவின் துவக்கத்தில் கூறப்படும் ‘சண்டை சச்சரவு நிறைந்த திருமணங்கள்’, ‘உற்றார் உறவினருக்காக குழந்தைகள்’ போன்ற கசப்பான நிகழ்வுகள் நிதர்சனம் ஆகும்.

இவ்வாறு சமூகத்தின் தேவைகேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் கணவன் மனைவியரே, திரைப்படங்களில் வரும் சிவகார்த்திகேயன்கள், சூரிகளின் ‘காமெடி’களுக்கு விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.
“ஏதோ…நாம மட்டும் அவதி படல. கல்யாணம் பண்ணிட்டவன் எவனுமே இந்த நெலமைல தான் இருக்கான்”, என தங்களை திருப்திப்படுத்திக் கொள்கின்றனர். இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம்?

“கயல் postbox பாக்கலியா உனக்கு ஏதோ letter வந்திருக்கு பாரு”, என கூறியபடி வீட்டினுள் நுழைந்தான் தியாகு.
“என்னது பா…”, என தியாகு குரல் கேட்டு வாழறைக்கு வந்தாள் கயல்விழி.

“Project Management instituteல இருந்து. நீ கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு certification பாஸ் பண்ணினல”, என கடிதத்தை பிரித்தவாறு வினவினான் தியாகு.

“அட ஆமாம்…ஒரு basic certification பண்ணினேன்ல…அது expire ஆக போகுது..renew பண்ண சொல்லி mail வந்திருக்கும். email கூட வந்திருந்தது.”, என காபி குவளைகளை காபி மேசை மீது வைத்தபடி விடையளித்தாள் கயல்.
“So…exams திரும்ப எடுக்கணுமா இல்ல upgrade option ஏதாவது இருக்கா”, என வினவியபடி கடிதத்தையும் படித்தான் தியாகு.
“ஆமாம்பா…you can resit the exam இல்ல அதோட advanced certificationக்கு upgrade பண்ணலாம்”, என டிவி remoteஐ நோண்டியப்படி பதிலளித்தாள் கயல்.
“ஒய் seriousஆ கேக்கறேன். என்ன செய்ய போற …கல்யாணத்துக்கு முன்னாடி project managementல அவ்வளவு passionateஆ இருப்ப”, என டிவி remoteஐ பிடுங்கி, கயலின் கவனத்தை தன் பால் ஈர்த்தான் தியாகு.

“காமெடி கீமடி பண்ணறியா…என்ன சொல்ற தியாகு….2 yearsஆ workforceல இருந்து தள்ளியே இருக்கேன். இளங்கோவ அப்பறம் யாரு பாத்துப்பாங்க. நீ காபி குடி நொறுக்குத் தீணி ஏதாவது கொண்டுவரேன்”, என நழுவ எத்தனித்த கயலை நிறுத்தி,
“c’mon கயல்…காமெடி இல்ல. இன்னிக்கி ஒரு Project Manager (P.M) கூட காபிக்கு போயிருந்தேன். அவங்களும் ஒரு career oriented lady. கல்யாணமாகி கொழந்தை இருக்கு. but அவங்க வீட்லியே கொழந்தைய பாத்துகிட்டு இருக்க விரும்பல…Here she is…எங்க கம்பெனில P.M for the past 5 years “, என விளக்கினான் தியாகு.
“பொண்ணா …அதுதான பாத்தேன். நான் phone பண்ணும் போதெல்லாம் பிஸியா இருக்கேன்னு சொல்லுவ…காபிக்கெல்லாம் டைம் இருக்கா”, என உயர்த்திய புருவங்களுடன் வினவினாள் கயல்.

“இப்ப நீதான் காமெடி பண்ற. அவங்க work experience பத்தி பேசும்போது , நம்ம marriage முன்னாடி இருந்த கயல் தான் நினைவுக்கு வந்தா. Remember those days, நான் call பண்ணினாலும், ஒரு குட்டி ‘hi kiss bye’ஓட நிறுத்தீடுவ. நெறைய தடவை சொல்லி இருக்கேன்…I fell head over heels for that lady. எப்பவுமே ஒரு துடுக்கான பேச்சு, quick decision making skills, smart and witty …”, மலரும் நினைவுகளை நினைத்த மாத்திரத்தில் புன்னகைத்தான் தியாகு.

“So இந்த homemaker கயல் உனக்கு பிடிக்கல…அதுதான சொல்ல வர”, என கடிந்து கொண்டாள் கயல்.
“you know what …நீ பேசற மூட்ல இல்ல. எனக்கு தோணினத சொன்னேன். We will talk about it some other time”, என குரலில் ஒரு சிறிய விரக்தியுடன், காபி குவளையை கையில் எடுத்தான் தியாகு.

“இல்லப்பா suddenஆ இந்த topic எடுத்த உடனே…I was taken aback. It is not as easy as you think. என் resume’ is 5 years old. வேலைக்கு apply பண்ணனும், கெடைக்கணும்..இளங்கோவ என்ன பண்ண போறோம்…எவ்வளவு இருக்கு”, என தியாகு அருகில் அமர்ந்தபடி தோள் மீது கைப்போட்டாள் கயல்.

“என்னவோ நாளைக்கே நீ வேலைக்கு போகணும்னு சொன்னா மாதிரி அலுத்துக்கிறியே. நான் ரொம்ப நாளா இத பத்தி பேச நெனைச்சேன்.அதுக்குள்ள relocation, இளங்கோ..Time just flew away. இன்னிக்கி சந்தியா கிட்ட பேசும் போதுதான் I got reminded… நம்ம வீட்லயும் ஒரு able PM இருக்காங்களேன்னு”, என பதிலளித்தான் தியாகு.

“But I need time to think over”, என கயல் சற்றே யோசித்தபடி பதிலளித்தாள் கயல்.

“ஒன்னும் பிரச்சனை இல்ல….நீ யோசிக்கறேன்னு சொன்னதே good to hear. Actually நீ வேலைக்கு போக ஆரம்பிச்சதுக்கு அப்பறம், நான் ரொம்ப நாளா பண்ணனும்னு நினைச்ச certification ஒன்னுல focus பண்ண ஆரம்பிக்க முடியும்”, என விடையளித்தான் தியாகு.

“But அந்த course க்கு நெறைய டைம் spend பண்ணனும்னு சொன்ன…work & studies உன்னால manage பண்ண முடியுமா”, என கேள்வி எழுப்பினாள் கயல்.

“சீரியஸா தெரியாமத்தான் கேக்கறியா. I was expecting you to be the bread winner”, என யதார்த்தமாக விடை அளித்தான் தியாகு.

“Breadwinnerஆ…யாரு நானா? உத்தியோகம் புருஷ லட்சணம் தியாகு. நீ வேலைக்கு போகாம…நான் மட்டும்னா…ஊர் என்ன பேசும்”, என ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பினாள் கயல்.

“புருஷலட்சணமா …Bullshit! நீ சொல்ற இந்த ஊர்…கொறை கண்டுபுடிக்கனும்னா, நக்கல் அடிக்கனும்னா, மொதல வந்து ஆஜராகும். நீ ஏதாவது ‘out of the box’ step எடு, அதுல success பாரு….உன் பக்கம் கூட திரும்பி பாக்காது.

நாளைக்கே ஏதோ ஒரு வேலை செய்யற….நம்ம காலனில C-16 மாமி might be happy with the outcome but D-17 ஆன்ட்டி might strongly oppose. அப்படியே successfulஆ எல்லாரையும் திருப்தி படுதீட்டனு வை…you might not like the outcome. So finalஆ …The very purpose is being defeated”, என விளக்கினான் தியாகு.

ஒரு நிமிடத்திற்கு மேல் அமைதியாய் தரையை பார்த்தப்படி நின்றாள் கயல்

“ஒய் …என்ன..Whatz happening”, என தியாகு வினவ,

“ம்ம் …It has been a bit too much for this குட்டி brain! நான் யோசிச்சு சொல்றேன். சப்பாதி மாவு பெசைஞ்சு வச்சிருக்கேன். நீ உருட்டி roll பண்ணு …நான் தவா ல போட்டு எடுக்கறேன்”, என கூறியபடி சமையலறை நோக்கி நகர்ந்தாள் கயல்.

“ஒய் கயல்….I love you”, என கொஞ்சலாய் கூறியபடி sofaவிலிருந்து எழுந்தான் தியாகு.

“நெசமாத்தான் சொல்றியா தியாக்ஸ்”, என வெட்கப்படும் தோரணையில் கூறிக்கொண்டே சுவர் கடிகாரத்தை பார்த்த கயல், “கொஞ்சல்ஸ் க்கு கொஞ்சம் break விடு; நான் இளங்கோவ pick up பண்ணிட்டு வரேன் நீ freshen up ஆகு”, என வாசலில் நிறுத்தியிருந்த கார் நோக்கி நடந்தாள்.