Posts Tagged ‘phyically challenged’

facebookல நண்பர் ஒருவரின் உரையாடல், இந்த பதிவ எழுத தூண்டிச்சுனு சொல்லலாம். காரணம்…அந்த உரையாடல்ல பங்கேத்து என் கருத்த வெளிப்படுத்த தைரியமில்ல…அவ்வளவுதான்!

சரியா எதப்பத்தின உரையாடல்னு நினவில்ல…ஆனா அவங்க நண்பரின் நிகழ்நிலை (status ) பத்தி கருத்து தெரிவிக்கும் போது, “கண் பார்வை இல்லாதவங்க எல்லாம் புண்ணியம் செஞ்சவங்க. கண் இருந்தாத்தான் கண்டதெல்லாம் பாப்போம்; தேவையில்லாம வெறுப்பு, பொறாமை எல்லாம் பொறக்கும். அவங்க வாழ்க்கை ரொம்ப அழகானது; அமைதியானது”னு என் நண்பர் சொல்லி இருந்தாங்க.

இத படிச்ச உடனே வந்த கோவத்துல, “நீ கூட ரொம்ப காலமா பிரச்சனை அது இதுனு பொலம்பிகிட்டு இருக்கியே…ஒரு கத்தியோ இல்ல குண்டூசியோ எடுத்து கண்ண குத்திகிட்டா என்ன?? பிரச்சனையாவது மண்ணாவது..வாழ்க்கை அப்படியே அமைதியா இருக்குமுல”,னு எழுத நினைச்சேன். இன்னும் கேட்டிருப்பேன்…

“கண் தெரியாதவங்களுக்கு வக்காளத்து வாங்க சொல்லி யாரு கேட்டாங்க…? நீ எதுக்கு அப்பிலே இல்லாம ஆஜர் ஆகற?

“நீ குருடாவோ ஊமையாவோ இருந்து இப்ப குணமாகி இருக்கியா…? உனக்கு தெரியுமா அவங்க என்ன நினைக்கறாங்கன்னு?”

“உனக்கு தெரிஞ்சு யாராவது பார்வை இருக்கறவங்க…”பிரச்சனைக்கெல்லாம் ஒரு முடிவு கட்டலாம்”னு கண்ண குத்தி எடுத்திருக்காங்களா?”

இது மாதிரி பேசறவங்க ஒரு ரகம்னா…ஊனமுற்றவங்கள பாத்து ‘பரிதாபத்துல’ கண்ணீர் விடரவங்க இன்னொரு கேவலமான ரகம்

“ஏன்டா நாயே…உன் கண்ணீரால இங்க ஒரு பயனுமே இல்லியே…பாக்கறவன் உன்னை ரொம்ப ‘இரக்க குணம் உடையவன்’, ‘மத்தவங்க கஷ்டத்த பாத்து கண்ணீர் உட்றான்”னு சொல்லனும்னு தான இந்த செவாலியே சிவாஜி ‘over -acting ‘ எல்லாம்??”

“அது எப்படிப்பா தேர்ந்தெடுத்து சில விஷயங்களுக்கு மட்டும் உன் ‘பொன்னான’ கண்ணீர செலவிடற?? ‘தெய்வத்திருமகள்” பாத்து, “அய்யோ இதுக்கு அழாம இருக்க முடியுமா”னு facebook ல நிகழ்படம் (video ) போடற…ஆனா ‘நான் கடவுள்’ பாத்துட்டு, “இதெல்லாம் சும்மா அழுகை வரவைக்கனும்னு கொடூரமா காட்டறாங்க”னு சொல்ற. அடடா….நடிப்புக்கும் நிஜத்துக்கும்…என்னமா வித்தியாசம் கண்டுபுடிக்கிற!!

ஆனா இவங்க அழறதுனால பயனடையற ஒரு கும்பல்னா…அது கோடம்பாக்கத்துல இருக்கு. என்னெல்லாம் செஞ்சா மக்கள் அழுவாங்கன்னு பாத்து பாத்து காட்சிகள அமைக்கறதுல நம்ம இயக்குனர்கள் கெட்டிக்காரங்க!!

4D படங்கள் கேள்வி பட்டிருப்பீங்க…படத்துல மழை பேஞ்சா, புயல் காத்து அடிச்சா, படம் பாக்கறவங்களுக்கும் அந்த உணர்வ ஏற்படுத்தும் தொழில்நுட்பம்.

அது மாதிரி, ‘படத்துல வெங்காயம் உரிச்சா திரையரங்குல பாக்கறவங்களுக்கு கண்ணுல தண்ணி வரும்”னு ஒரு புது கண்டுபுடிப்பு வந்துச்சுனு வைங்க….கோடம்பாக்கத்துல sales கன்னாபின்னான்னு பிச்சுகிட்டு போகும்…அந்த தொழில்நுட்பத்துக்கும்….வெங்காயத்துக்கும்!!

இது மாதிரி அழுகாச்சி காட்சிகள வைக்கறதுனால, அவங்களுக்கு இன்னொரு பலனும் கெடைக்குது.படம் கர்ணகொடூரமா இருந்தாலும், அழுது அழுது கண்ண கசக்கிட்டு இருக்கற ‘பாசக்கார’ ரசிகர்களுக்கு ஏதாவது தெரிய போகுதா…?இல்லியே…அதுனால, “தம்பி விஜய்…சொக்காய் எல்லாம் தயார் பண்ணிக்க..’.தெய்வத்திருமகள்’ 100 வது நாள் விழாவுக்கு நேரமாச்சு பாரு”

இங்க நினைவுக்கு வரும் சம்பவம் ஒன்னு…ரயில் நிலையத்துல ஒரு கண் தெரியாதவர் படி ஏறும் பொது, கொஞ்சம் தடுக்கிடுச்சு. உதவி செய்ய வந்த ஒரு பொண்ண திட்டி விட்டுட்டாரு. பாத்த உடனே தோணினது ஒன்னுதான், “அவங்க இத உதவியா பாக்கறத விட…ஒரு அவமதிப்பாத்தான் பாக்கறாங்க”

இந்த facebookலயும், திரைப்படங்களலையும் வரும் ‘பரிவு’, ‘அக்கறை’ எல்லாம் பாக்கும் போது…இது உள்மனசுல இருக்கும் “நல்ல வேளை…நாம இந்த நிலைமைல இல்ல” பெருமூச்சு தான்…இப்படி ‘உயர்ந்த மனிதன்’ சாயம் பூசி வெளிவருதோன்னு தோணுது.
என்னோட இன்னொரு பதிவின் பின்னூட்டத்துல ஒருவர், “என்னதான் சொல்லவறீங்க”னு கேட்டிருந்தாரு. அதுமாதிரி இதுலயும் கேக்காமலிருக்க…

“சிங்கார சென்னையின் சீர்கெட்ட சாலைகள்ல ஊனமுற்றவங்க உதவி எதிர்ப்பாத்தா அவங்க கடக்க உதவுங்க, உங்க கம்பெனில வேலை வாய்ப்பு தர முடியுமா…அத செய்யுங்க, இல்ல அவங்களுக்கு ஒரு அறக்கட்டளை அமைச்சு உதவ ஆசைபட்டா அதா செய்யுங்க… இல்ல ஒன்னும் செய்யாம உங்க வேலைய பாத்துகிட்டு நடைய கட்டுங்க. இந்த இரக்கம், கண்ணீர விட அவங்கள ஒரு சக மனிதனா நடத்தறதுதான் ‘need of the hour ‘ னு நான் நினைக்கறேன்.