Posts Tagged ‘religion’

“அது என் வாயில இருக்கற எச்சில் மாதிரி இருக்குமா…அந்த spider க்கு எப்பிடி கிடைச்சது?”, என சுவரோரம் இருந்த சிலந்தி வலையை உற்று கவனித்தபடியே கேள்வி எழுப்பினான் ஆறு வயதான பரிதி.

“அட…சரிதான் பரிதி. ‘spitting spiders’ னு ஒரு வகையான சிலந்தி இருக்கு. அது தன்னோட எச்சில பயன்படுத்தி வலைய பின்னுமாம். ஆனா இது என்ன ரகம்னு தெரியல. அடுத்த தடவ library போகும் போது, spiders பத்தி படிக்கலாம்”, என உற்சாகத்துடன் விடையளித்தாள் மீரா, பரிதியின் தாய்.

“thanks மா”, என கூறியபடி, தன் விளையாட்டினை தொடர்ந்தான் பரிதி.

மதிய உணவு மேசையில்…

“அம்மா அனுமான் சாமி meat சாப்பிட மாட்டாராம்…பாட்டி சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா நேத்து Nat Geo ல, கொரங்கு meat சாப்பிடறத காட்டினாங்க. அப்ப அனுமான் சாமி வேற type of கொரங்கா மா?”, என சற்றே சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, கேள்வி எழுப்பினான் பரிதி.

“அது வந்து…”, என ஏதோ சொல்ல ஆரம்பித்து, “carrot சாப்பிட மறந்துட்ட பாரு. நீ சாப்பிட்டு முடி. அம்மா டேபிள் சுத்தம் பண்ணிட்டு, உனக்கு என்ன பண்ணப்போறேன்?”, என உரையாடலை திசைத்திருப்பினாள் மீரா.

“gingerbread “, என குதூகலத்தில் உரக்கச் சொன்னான் பரிதி.
எதையோ கூறி திசைத்திருப்பி விட்டோமே என எண்ணி சற்றே வேதனை அடைந்தாள் மீரா. அழைப்பு மணி சத்தம் கேட்டு, நுழைவாயிலுக்கு விரைந்தாள்.

அடுத்த நாள் காலை

“அம்மா ஒரு ஐடியா…இன்னிக்கி ஒரு நாள் நான் brush பண்ணாம இருக்கட்டுமா? பக்கத்து வீட்டு அக்காவோட pet dog மணி இருக்கான் ல, அவனுக்கு அவங்க brush பண்ணினதே இல்லையாம்”, என அடுத்த கேள்விக்கணையை தொடுத்தான் பரிதி.
“ம்ம்…உன் ஐடியா க்கு வரேன். அதுக்கு முன்னாடி, ‘the very hungry caterpillar’ கதைல, அந்த caterpillar என்ன சாப்பிடும்?”, என மீரா கேட்க,
“ஒரு chocolate cake , ஒரு sausage, ஒரு salami, ஒரு lollipop, ஒரு muffin, ஒரு cupcake அப்பறம் ஒரு slice of watermelon”, என சட்டென விடையளித்தான் பரிதி.
“good…அன்னிக்கி காலைல அந்த caterpillar பல் தேய்ச்சதா?”, இது மீரா.
“இல்லியே”, இது பரிதி.
“அன்னிக்கி நைட் என்ன ஆகும்?”, இது மீரா.
“அந்த caterpillar க்கு வயித்து வலி வரும்”, இது பரிதி.
“so …காலைல பல் தேய்க்காம அவ்வளவு foods சாப்பிட்டதுனால, அந்த caterpillar க்கு வயித்து வலி வந்தது. இன்னிக்கி நீயும் பல் தேய்க்காம omelette, அப்பறம் gingerbread, பிரியாணி, ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிட்டா, என்ன ஆகும்?”, என சிரிப்பை அடக்கியபடி மீரா கேள்வி எழுப்ப…
“இல்லமா…நான் brush பண்றேன்”, என பற்பசையை கையிலெடுத்தான் பரிதி.

இரவு உணவு மேசையில்…

“அம்மா…அஸ்வின் வீட்ல beef சாப்பிட மாட்டங்களாம். ஆனா lamb , சிக்கன், fish எல்லாம் சாப்பிடுவாங்க,. cow சாமியாம்…அதுனால kill பண்ண கூடாதாம். எனக்கு ஆனா beef ரொம்ப பிடிக்குமே.. நாமளும் இனி சாப்பிட மாட்டோமா?”, என ஏக்கத்துடன் வினவினான் பரிதி.

“பரிதி நீ சாப்பிட்டு போய் நைட் டிரஸ் போட்டுக்கோ. அம்மா வந்து ஸ்டோரி படிக்கறேன்”, என ஒரு வெறுப்பு கலந்த கோபத்தில் விடையளித்தாள் மீரா.

சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜகன் சற்று அதிர்ச்சியுடன் மீராவை பார்த்தான்.

பரிதி அவன் அறைக்கு சென்ற உடன், நாற்காலியில் அமர்ந்த படி, அழ ஆரம்பித்தாள் மீரா.
“என்ன ஆச்சு மீரா?”, என நிதானமாய் வினவினான் ஜகன், மீராவின் கணவன்.

“இல்ல ஜகன் , ரெண்டு மூணு நாளாவே பரிதிய ரொம்ப ஏமாத்தறேனோனு ஒரு feeling. சாமி பத்தி இல்ல meat சாப்பிடறத பத்தி கேள்வி கேக்கும் போது, அதுக்கு answer பண்ணாம, topic அ மாத்தறேன் இல்ல அவன் கிட்ட கோவப்படறேன். “அப்பிடி எல்லாம் கேக்கக்கூடாது , சாமி கண்ண குத்தும்”, “அது எல்லாம் அப்பிடித்தான்” மாதிரியான answers கொடுக்கவும் விருப்பமே இல்ல”, என இரண்டு நாட்களாக புழுங்கிக் கொண்டிருந்த விஷயத்தை போட்டு உடைத்தாள் மீரா.

ஒரு சிறிய புன்னகையுடன், “நான் தான் பாக்கறேனே, அவன் எப்படா கேள்வி கேப்பான்னு காத்திட்டு இருக்க நீ! அவன் எதையாவது பாத்து excite ஆறத விட, அத அவனுக்கு explain பண்றதுல நீ excite ஆறதுதான் அதிகமா இருக்கு.

ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ மீரா…, நம்ம பையன எப்பிடி வளக்கணும்னு நினைக்கறோமோ, அப்பிடியே வளப்போம். இப்ப உனக்கு ஒரு விஷயத்துல உடன்பாடு இல்லனா, ஊருக்காக உன் கருத்த மாத்திக்க மாட்ட. சரிதான?
பரிதியையும் அப்பிடி தான் வளக்க நினைக்கறோம்னா, அவன் மட்டும் எதுக்கு ஊர் கருத்தோட ஒத்து போகணும் சொல்லு?”, என எடுத்துரைத்தான் ஜகன்.

சற்றே யோசித்த மீரா, “கரெக்ட் ல; thanks ஜகன். ஊருக்கு பயந்து பயந்து நான் அவதி பட்ட நிலைக்கு அவனையும் தள்ள பாத்தேன் ல! சரி நீ போய் படு. நான் அவனுக்கு ஸ்டோரி படிச்சிட்டு வரேன்”, என ஒரு நிம்மதி கலந்த புன்னகையுடன் விடையளித்தாள் மீரா.

பரிதியின் அறையில்…

“அம்மா இன்னிக்கி Rainbow Rob படிப்போமா?”, என கதைப்புத்தகத்தை நீட்டினான் பரிதி.

“நானும் அத படிக்கனும்னு தான் நினைச்சேன்”, என நினைத்தபடியே, புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தாள் மீரா.

கதையின் கடைசி வரிகளை படித்தபடியே, பரிதியை கட்டி அனைத்துக் கொண்டாள்; “நீ யாரு மாதிரியும் இருக்கணும்னு அவசியம் இல்ல பரிதி; உனக்கு ஒன்னு பிடிச்சிருக்கு and அது உனக்கு danger எதுவும் கொடுக்கலெனா, அத தயங்காம பண்ணு. அஸ்வினோட அம்மா அவன தான beef சாப்பிடக் கூடாதுனு சொன்னாங்க. உனக்கு beef புடிக்கும்னு எனக்கு நல்லா தெரியுமே. அதுனால தான் நாளைக்கி உனக்கு meatballs பண்ணப்போறேனே”, என குதூகலத்துடன் உரைத்தாள் மீரா.

“சூப்பர் மா”, என கூறியபடியே, கண்களை கசக்கினான் பரிதி.

“சரி கன்னுக்குட்டிக்கு தூக்கம் வந்தாச்சு. நல்லா தூங்கு; goodnight”, என பரிதியை படுக்கையில் படுக்க வைத்து முத்தமிட்டாள் மீரா.

விளக்கை அணைத்தபடி, அறையை விட்டு வெளியே வந்தாள், மீண்டும் அதே நிம்மதியும் பெருமிதமும் கலந்த புன்னகையுடன்.

கதையின் ஒலி வடிவம்:

டீ கடை வாசல்

அறிவிப்பு பலகையில்
“கடைல பாக்கி வச்சிருக்கவங்க அம்புட்டு பேரும்…இந்த மாசத்துக்குள்ள பாக்கிய செட்டில் பண்ணிடு. இல்லாட்டி உன் safety க்கு அண்ணாச்சி பொறுப்பில்ல”

அதை படித்த படியே, டீ கடையினுள் நுழைந்த செந்தில், “மச்சி வெளில போர்டு படிச்சியா…செம காமெடி பண்றாரு அண்ணாச்சி”, என நக்கலாய் சிரித்தபடி குழுமி இருந்த கூட்டத்துடன் இணைந்தான்.
“அத எங்க கிட்ட கேக்காத….அண்ணாச்சியவே கேளு…சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. சங்கர் வேற நாங்க சிரிக்கறத பாத்துட்டு செம கடுப்புல இருக்கான்”, என வந்த சிரிப்பை அடக்கியபடி பதிலளித்தான் தினேஷ்.
“என்ன அண்ணாச்சி ரொம்ப பில்ட் up குடுக்கறாங்க பசங்க….என்ன சங்கதி”, என கல்லாவில் இருந்த அண்ணாச்சியிடம் வினவினான் செந்தில்.
“நீயும் சிரிப்பனு தெரியும் தம்பி…எதுக்கு வெட்டி பேச்சு. பாக்கி ஏதாவது இருந்துச்சுனா இந்த வாரத்துக்குள்ள செட்டில் பண்ண பாரு”, என ‘வெட்டு ஒன்று துண்டு ரெண்டாய்’ பதிலளித்தார் டீ கடை அண்ணாச்சி.

“என்ன அண்ணாச்சி…இப்பிடி சொல்லிட்டீங்க. ஏதோ பிரச்சனை உங்களுக்கு. ஒரு அக்கறையோட கேக்க வந்தா…இப்படி பண்றீங்களே”, என வருத்தப்பட்டான் செந்தில்.

“நேத்து என் friend ஒரு சாமிய பாக்க கூட்டிகிட்டு போனான் தம்பி. அவர் சொல்றாரு….உலகம் Dec 21 ஓட அழிஞ்சிடுமாம். அதுதான் இந்த மாசத்துக்குள்ள கொஞ்சம் பைசா தெரட்டி, பசங்கள கூட்டிகிட்டு பழனிக்கு போலாமுன்னு வீட்டுல சொன்னாங்க”, என சோகம் கலந்த குரலில் ‘அறிவிப்பு பலகையின்’ காரணத்தை விளக்கினார் அண்ணாச்சி.

“பக்கத்து ஊர்ல வீடு கட்ட நெலம் வாங்கி இருக்கீங்க அண்ணாச்சி….அத என்ன பண்ண போறீங்க”, என தினேஷ் கேள்வி எழுப்ப, பெஞ்சில் அமர்ந்திருந்த அனைவரும் ‘கொள்’ என சிரிக்க ஆரம்பித்தனர்..சங்கரை தவிர்த்து.
“அண்ணாச்சி…புது வருஷத்துல ஒரு நேத்தி கடன் முடிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க…அதையும் சீக்கிரமா முடிக்கனும்ல”, என மேசையில் அமர்ந்திருந்த இன்னொரு நண்பர் கேலி செய்தார்.

அனைவரின் நக்கல் பேச்சுகளையும் கேட்ட படி அமைதி கடைப்பிடித்தார் அண்ணாச்சி.

“நிறுத்துங்கப்பா…மனிஷன் பாவம் நெஜமாவே பயந்து போயிருக்காரு…நீங்க என்னடானா…இன்னும் அவர ஏத்திவிட்டுக்கிட்டு”, என டீ கடை பெஞ்ச்சினை அமைதியாய் இருக்கும்படி சொல்லிவிட்டு,

“அண்ணாச்சி…இதெல்லாம் போட்டு மனச கொழப்பிக்காதீங்க. அமெரிக்கால ஒரு கும்பல் Oct 21 ஓட உலகம் அழிஞ்சிடுமுனு சொல்லிக்கிட்டு திரிஞ்சாங்க….இப்ப தேதி 24 …ஒன்னும் ஆகல. அடிச்சுகிட்டு சாவறவன் செத்துகிட்டு தான் இருக்கான், தன் வேலைய கவனிச்சுகிட்டு இருக்கறவன் அவன் வேலைய பாத்துகிட்டு இருக்கான்”, என அண்ணாச்சியை ஆறுதல் படுத்தினான் செந்தில்.

“இல்ல தம்பி…நல்லவங்க மட்டும் உயிரோட இருப்பாங்களாம்….தப்பு செஞ்சவங்க எல்லாம் செத்திடுவாங்களாம். பால் கம்மியா இருக்கும் போது சில சமயத்துல தண்ணி சேத்திருக்கேன்…டீ தூள் அடித்தட்டும் போது…சில நேரத்துல…சில நேரத்துல தான், காபி பொடிய கலந்திருக்கேன். எனக்கென்னவோ நான் ‘தப்பு செஞ்சவங்க லிஸ்ட்’ல தான் இருப்பேன்னு தோணுது”, என மனம் ஒடிந்தார் அண்ணாச்சி.

“நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு…யாரு இங்க முடிவெடுப்பாங்க. நீங்க ஒரு காரியம் செய்யறீங்க..என்ன பொறுத்த மட்டும் அது தப்பா இருக்கலாம்…ஆனா நீங்க அத நல்ல காரியமா நெனைச்சு தான் செய்யறீங்க. கொள்ளை அடிக்கறவன் கூட அவன் வேலைய நியாயப்படுத்துவான் அண்ணாச்சி. அத விடுங்க…
காலைல 5 மணிக்கு கடைய தொறந்து…ராத்திரி 11 மணி வரைக்கும் ஓயாம டீ ஆத்தறீங்க. கம்ப்யூட்டர் முன்னாடி இருந்து நகுந்து, இந்த கடைல ஒரு டீயும் தம்மும் அடிக்கறதுல கெடைக்கற நிம்மதிக்கு equal ஆ ஒன்னும் இருக்கறா மாதிரி எனக்கு தெரியல…இந்த IT பார்க்ல வேலை செய்யறவன் ஒவ்வொருத்தனும் இதத்தான் சொல்லுவான். உங்க பசங்க ரெண்டும் நல்லா படிக்கணும்னு சிறுக சிறுக சேத்து வைக்கறீங்க., இதெல்லாம் கணக்குல எடுத்துக்காம…என்னைக்கோ ஒரு நாள் சேத்த தண்ணியையும் காபி தூளையும் சாக்கு காட்டி சாவடிக்கிற உங்க கடவுளுக்கு எவ்வளவு ‘பெரிய’ மனசு இருக்கணும்!”, என கூறியபடி அண்ணாச்சியின் தோளை தட்டிக்கொடுத்தான் செந்தில்.

“எனக்கு கூட இது தோணிச்சு தம்பி…ஆனா அங்க இருந்த கூட்டத்த பாத்தா…அத்தனை பேரும் அவர நம்பறாங்கனு தான் தோணுது. நெறைய பேரு காணிக்கை எல்லாம் போட்டு…ஏதோ சொல்லுவாங்களே…பரிகாரம் செஞ்சுகிட்டு இருந்தாங்க. என்கிட்ட அப்ப பைசா இல்ல….அதுனால நாளைக்கி திரும்ப போகலாமுன்னு வந்துட்டேன்”, என நொந்துகொண்டார் அண்ணாச்சி.

“இது point…பரிகாரம் செய்ய காசு கட்டினவங்க dec 22 அன்னிக்கி அந்த சாமிகிட்ட வந்தா…”அட பரிகாரம் வேலை செஞ்சிடுச்சு”னு announcement…அப்பறம் சாமியோட கல்லா நிரம்பி வழியும்.
பரிகாரமே பண்ணலனாலும், dec 21 உங்களுக்கு ஒன்னும் ஆகலைனா…இருக்கவே இருக்கு, “தம்பி…அன்னிக்கி இங்க வந்தபாரு…அதுனால என் வேண்டுகோளுக்கு இணங்க…உன் தப்புகள எல்லாம் கடவுள் மன்னிச்சு விட்டுட்டாரு”…so எப்படி பாத்தாலும் சாமியோட காட்டுல மழைதான்”, என செந்தில் யதார்த்தமாய் விளக்க, ஒரு தெளிவு கலந்த புன்னகை அண்ணாச்சி முகத்தில் சிறிதே எட்டிப் பார்த்தது.
“இப்பனு இல்ல அண்ணாச்சி…பல வருஷமா வேற வேற நாடுகள்ல இப்படி சொல்லிக்கிட்டு திரியற கிறுக்கனுங்க இருக்கறானுங்க. போன வருஷம் கூட அமெரிக்கால ஒரு நாதாரி, மே மாசாத்தோட உலகம் அழிஞ்சிடும்னு பிரச்சாரம் செஞ்சான். அத உண்மைன்னு நம்பி நெறைய பேர் வேலைய விட்டுட்டு, இருந்த சொத்துக்கள எல்லாம் வித்துட்டு, வந்த பைசால அவங்களால முடிஞ்ச வரைக்கும் இந்த கருத்த பரப்பினாங்க”, என அண்ணாச்சியின் பயம், அவசியமற்றது என விளக்கினான் செந்தில்.

“நான் இன்னிக்கி வந்த காரணத்தையே மறந்துட்டேன். dec 23 எங்க ஆபீஸ்ல christmas பார்ட்டி. சரக்கு, சாப்பாடு எல்லாத்தையும் கம்பெனி பாத்துக்கும். சாப்பாடு முடிச்சு அண்ணாச்சியோட மசாலா டீ அடிச்சா…சூப்பரா இருக்கும்னு நான் சொன்னேன். அதுதான் உங்க கிட்ட பேசி rate விஷயத்த கேட்டுகிட்டு வர சொன்னாங்க”, என டீ கடை விஜயத்தின் காரணத்தை விளக்கினான் செந்தில்.

“தம்பி…எனக்கு என்ன சொல்லனும்னு தெரியல…”, என அண்ணாச்சி தலையை சொரிய,
“அண்ணாச்சி…ஒன்னும் பிரச்சனை இல்ல. அப்படியே dec 21 உலகம் அழிஞ்சா கூட…நீங்க சொர்க்கத்துல இருப்பீங்க…நான் அடிச்ச லூட்டிக்கெல்லாம் சேத்துவச்சு நரகத்துல எங்களுக்கு இடம் நிச்சயம். சொர்க்கமும் நரகமும் பக்கத்துபக்கத்துல தான் இருக்கும். என்ன punishment குடுத்தாலும், 2 மணி நேரத்துக்கு ஒரு பிரேக் எடுத்து, அங்க சொர்க்க வாசல்ல நிக்கறோம். உங்க மசாலா டீய குடுங்க. இப்ப contractஅ எடுத்துக்குங்க பாஸ்”, என நகைச்சுவையாய் பேசியபடி கல்லா நோக்கி வந்தான் தினேஷ்.

“சரி செந்தில் தம்பி…நீங்க மதிய சாப்பாட்டுக்கு வரும்போது…நான் கணக்கு போட்டு குடுக்கறேன்…”, என செந்திலிடம் கூறியபடி, பைசா கொடுக்காமல் தினேஷ் வெளியேறுவதை கவனித்த அண்ணாச்சி,
“தம்பி…டீ போண்டாக்கு காசு?'”, என வினவ,

“accountல எழுதிக்குங்க அண்ணாச்சி…அப்பறம் இந்த போர்ட மறக்காம எடுத்து உள்ள வைங்க”, என அமைதியாய் சிரித்தபடி, விடைப்பெற்றான் தினேஷ்.

பின்குறிப்பு – அன்று மார்ஸ் கிரகத்தில் இறங்கிய ‘curiosity’ ஏவுகணை பற்றிய ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நடுவில், ‘உலகம் இந்த வருடம் அழியப்போகிறது” போன்ற மூட எண்ணங்களும் பரவிக்கொண்டிருப்பதை நினைத்தேன்.’கூகிள்’ செய்தபோது, கண்ணில் பட்ட படம் இது…

அடுத்த பதிவு…இதை ஒட்டியே…என முடிவு செய்தேன் 🙂


தொகுப்பாளர்
: அனைவருக்கும் வணக்கம். இன்னிக்கி ‘பேசலாம் வாங்க’ நிகழ்ச்சில யாருமே எதிர்பாக்காத ஒரு பிரமுகர சந்திக்க போறோம். துன்பம் இன்பம் ரெண்டுத்துக்குமே இவர் தான் காரணம்னு நம்பறோம்; உலகத்துல நடக்குற அநீதிக்கெல்லாம் இவர் தான் தீர்வு காணனும்னு ஏங்கறோம். மதம் என்ற சொல்லால் பிரிந்திருக்கும் மக்கள் இடையே அல்லா என்றும் இயேசு என்றும் சிவன் என்றும் இவருக்கு பெயர்கள் உண்டு. பெருமையுடன்…இதோ உங்கள் முன்னால்….நம் கடவுள்!!

தொகுப்பாளர்
: வணக்கம் கடவுளே; உங்கள இன்னிக்கி பேட்டி காணரதுல பெரும் மகிழ்ச்சி! உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி!

கடவுள்: (ஒரு சிறு புன்னகை)

தொகுப்பாளர்
: நேரடியா கேள்விகளுக்கு போகலாம்… மனிதர்கள நீங்க தான் படைச்சேங்கன்னு மத நூல்கள் சொல்லுது; குரான்ல நீங்க ரெண்டு களி மண் பொம்மைகள செஞ்சு உயிர் கொடுத்ததாகவும் பைபிள்ல முதல ஆதாம் எவாழ படைச்சேங்கன்னும் வெவ்வேறு கருத்துக்கள் கூற பட்டிருக்கு. ஆனா திரு.சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சி தான் மனிதன் உருவாக காரணம்னு சொல்றாரு. உங்க கருத்து?

கடவுள்
: தம்பி… இந்த டார்வின்… ஒரு சோதா பையன்….கடைசி காலத்துல கிருஷ்ணா ராமா கோவிந்தா இல்ல இயேசு மேரி மாதானு சொல்லிட்டு திரியாம என்ன வம்புக்கு தேவை இல்லாம இழுத்துக்கிட்டு இருந்தான். பூமிக்கு வந்தாச்சு அப்பறம் எப்படி வந்தோம்னு ஆராய்ச்சி பண்ணி என்ன பயன் சொல்லுங்க. மக்களுக்கு என்ன தோணுதோ அத நினைக்கறதுல என்ன தப்புன்னு நான் கேக்கறேன். ஐயோ… இப்ப கூட அந்த டார்வின் பையன நினைச்சா துண்டு துண்டா வெட்டி போடணும் போல இருக்கு.

தொகுப்பாளர்: ஆனா கடவுளே நீங்க கருணையே வடிவானவர்னு மக்கள் நம்பறாங்க. நீங்க என்னடானா வெட்டனும் குத்தனும்னு பேசறீங்க…

கடவுள்: இது தான் நிதர்சனம் தம்பி…இந்த மக்கள பாத்தா சிரிப்பு தான் வருது… இவங்களே என்ன ஒரு பக்கம் சாந்த சொரூபி, தப்ப மன்னித்து நல்வழி நடத்தும் ஆசான்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம் தப்பு செஞ்சவங்கள வதம் செய்பவன்னு சொல்றாங்க. என்னுடைய ரோல் என்னனு எனக்கே கொழப்பமா இருக்கு (ஒரு நக்கலான புன்னகையுடன்)

தொகுப்பாளர்: (திரு திருவென விழித்த படி) உங்க ஒரு நாள் சாதரணமா எப்படி இருக்கும்? மசூதிலியும் தேவாலயத்திலும் கோவில்லயும் தினமும் ஆயிரக்கணக்குல வேண்டுதல் வருமே…

கடவுள்: நக்கல் தானே தம்பி…10 நாள் தொடர்ந்து உக்காந்தா கூட இவங்க கொறைகள கேட்டு மாளாது…அப்பறம் தான தீர்வு காண நேரமெல்லாம்…நான் பாத்த வரைக்கும் ஒரு 10 நாள் 20 நாள் ஒரே வேண்டுதல வைப்பாங்க…எதுவும் நடக்கலன்னு தெரிஞ்ச உடனே அதுதான் தலையெழுத்துனு வேற வேலைய பாக்க கேளம்பீடுவாங்க. உங்க சூப்பர் ஸ்டார் கூட ஒன்னு சொல்லுவாரே, ” கடவுள் சோதிப்பார் கை விட மாட்டாருன்னு”…விவரமான ஆளு தம்பி அவரு…. கை கொடுப்பேன்னு சொன்னதோட நிறுத்தினாரே…நல்ல வேளை எந்த மாசம், எந்த தேதி எல்லாம் ஒன்னும் சொல்லிக்கல. இது மாதிரி புண்ணியவான்கள் இருக்கற வரைக்கும் எனக்கு என்ன கவலை சொல்லுங்க (ஒரு பெருமிதம் கலந்த புன்னகையுடன்)

தொகுப்பாளர்
: (கனவா நனவா என்ற குழப்பத்தில்) கைக்கூப்பி வழிபடரவங்களுக்கே இந்த கதினா உங்கள வணங்க நேரம் இல்லாம இன்னிக்கி உயிர் பொழைச்சா போதுமுன்னு இருப்பவங்க கதி…

கடவுள்
: அது வந்து தம்பி…

தொகுப்பாளர்
: (கோபம் கலந்த விரக்தியுடன்) இல்ல ஐயா….அப்ப ஈழ தமிழர்கள் சொமாலிய நாட்டு மக்கள் இன்னும் தினம் தினம் பசி கொடுமைக்கு இரையாகும் மக்களின் கதி…உங்க கடைக்கண் பார்வை அவங்க மேல படவே இன்னும் பல 100 வருஷம் ஆகும் போலவே….அதுக்குள்ள அவங்களும் அவங்க சந்ததிகளும் கூட அழிஞ்சிடுமே!!

கடவுள்: உன் கோவம் எனக்கு புரியுது தம்பி…ரொம்ப நியாயமானதுதான்…விதின்னு ஒன்னு இருக்கும் போது அத யாரால மாத்த முடியும்.

தொகுப்பாளர்: இதெல்லாம் ரொம்ப அநியாயமா எனக்கு படுதுயா…விதின்னு ஒன்னு இருக்கானு எனக்கு தெரியல….ஆனா அதையும் மீறி அவங்களுக்கு ஒரு நல் வழி காட்டுவீங்கன்னு தானே….அலகு குத்தறது தீமிதிக்கறது மைல் கணக்குல உங்கள பாக்க நடந்து வர்றது எல்லாம்…அதெல்லாம்…?

கடவுள்
: பாரு தம்பி…ரொம்ப பேசற நீ….வாரத்துல ஒரு நாள் விடாம ஏதாவது ஒரு மதத்துல ஏதாவது ஒரு உருவத்துல எனக்கு பூஜை, யாகம், விரதம்..கண் மூடி திறக்கறதுக்குள்ள ராத்திரி ஆகுது…அப்பறம் அர்த்தசாம பூஜை…அப்பறம் வருஷா வருஷம் 1008 ஊர்வலம், கல்யாணம்னு தொவைச்சு புழிஞ்சு எடுக்கறாங்க…. ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்… நீ…

தொகுப்பாளர்: சாமி அங்கயே நிறுத்துங்க…..இது முதல்வன் படபிடிப்பும் இல்ல… நான் அர்ஜுனும் இல்ல…கடசியா என்னதான் சொல்றீங்க?

கடவுள்: எல்லாமே விதி படி தான் நடக்கும்…அஹம் பிரம்மாஸ்மி!!

தொகுப்பாளர்: அது சரி…எனக்கு இதுக்கு மேல கேக்க ஒன்னும் இல்ல கடவுளே…எங்க நிகழ்ச்சில இன்னும் 2 விஷயங்கள் இருக்கு…நேர்க்காணல மையமா வச்சு, வந்த விருந்தினருக்கு ஒரு பட்டம் கொடுப்போம்..நம்ம கலந்துரையாடல கேட்டு கொண்டிருந்த நீதிபதி குழுவின் தீர்ப்பு இதோ….

நீதிபதி குழு தலைவர்: ஐயா இன்னிக்கி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கூட ஒரு திருப்திகரமான பதில் நீங்க அளிக்காததுனால….உங்களுக்கு ‘உதவாக்கரை’ பட்டம் வழங்கறோம்!

கடவுள்: (சிரிப்பும் கோபமும் கலந்து) என்ன வச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலியே.. இதெல்லாம் மக்கள் கேட்டாங்கனா கொதிச்சு எழுவாங்க… உங்க டிவி சேனல் அப்பறம் அதோகதி தான்!

தொகுப்பாளர்: நீதிபதி குழுவிற்கு நன்றி! உங்க வருகைக்கு ரொம்ப நன்றி ஐயா! உங்க அனுமதியோட….”டேய் உதவாக்கரை…கெளம்பு காத்து வரட்டும்”.
மக்களே இன்றைய நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வர இதோ நம் அட்வைஸ் ஆறுமுகம்!!

அட்வைஸ் ஆறுமுகம்: இன்ன கண்ணு…எப்படி கீரே? உதவாக்கரைன்னு படா ஜோரா பேரு வச்சாங்கப்பா! இந்த கேப்மாறிய குஷி படுத்த என் பொண்சாதி அடிச்ச லூட்டி இருக்கே…பேஜாரா பூச்சு பா! எங்க பக்கத்து ஊட்டு ஆயா சொல்லும்…விதிய மதியால டேர் டேரா கிழிக்கலாம்னு.. இந்த டுபாகூர நம்பறத விட்டு புட்டு….தப்புன்னு தோணுதா அப்பீட்டு…கரீக்ட்னு தோணுதா ரிபீட்டு…நான் இப்ப எஸ்ஆய்க்கிறேன்…இன்னமா வர்ட்டா!!

“கருணையே வடிவானாவன், அவன் கருணாமுர்த்தி;
கொடியவரையும் மன்னித்து வாழவைப்பான் திருத்தி”, என
ஆண்டவன் துதிபாடியது ஒரு கோஷ்ட்டி.
“ஞாபகமறதி கொஞ்சம் அதிகம் தான் உங்கள் ஆண்டவனுக்கு;
கொடுங்கோலர்களையும் கேடு விளைவிக்கும் அரசியல்வாதிகளையும்
ஆனந்தமாய் கூத்தடிக்க அனுமதித்து
அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்ற கேள்விக்கடலில் தத்தளிக்கும் மக்களை,
சுனாமி,எரிமலை,சூறாவளி போன்ற கொடிய மிருகங்களால் சோதிக்கிறானே
வயதாகி விட்டதுபோலும்”, என்றேன்.

கோஷ்ட்டியில் ஒருவன் பெருமிதத்துடன்,
“போன பிறப்பில் செய்த பிழைகள், அதுதான் இந்த
பிறப்பில் அனுபவிக்கின்றனர்”, என்றான்.

அட அது சரி;
“அரசியலையும் சாதியையும் ஆயுதமாய் பயன்படுத்தும்
மனித திமிங்கலஙள் சென்ற பிறப்பில் செய்த புண்ணியங்களின்
பலனே இந்த பணமும், வசதியும்;
உன் கோமணம் உற்பட உறுவி உன்னை துயரத்தின் எல்லைக்குத் தள்ளுவான்,
வாயை திறக்காதே; கவலை படாதே;
அட இந்த பிறப்பில் தவித்தால் என்ன,
உன் ஆண்டவனின் விதிமுறைப்படி
அடுத்த பிறப்பில் சுகமாய் வாழ்வாய்…பொறுத்திரு”