Posts Tagged ‘south indian cuisine’

அன்னிக்கி நண்பர்களோட ஒரு கேரள வகை உணவகத்துக்கு போய் இருந்தேன். சாதரணமா கும்பலா போனா, ‘starters’னு சொல்ற ‘ஆரம்பத்தீணி’ கட்டாயம் இருக்கும். அன்னிக்கி அப்படி திண்ணதுதான் பெப்பர் சிக்கன். மசாலா, காரம் எல்லாம் சரியான அளவுல இருந்துச்சு…5 பேருக்கு பத்தலன்னுதான் சொல்லனும். அதுக்காக starters மட்டுமே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தா, ‘main course’ நாதி இல்லாம போயிடுமேன்னு ‘மீண்டும் starters’ யோசனைய கை விட்டுட்டோம்.

அதுக்கு அப்பறம் போன வாரம், சிக்கன் சமைக்கலாம்னு நினைச்ச போது, பெப்பர் சிக்கன் செஞ்சா என்னனு ஒரு பொறி கெளம்பிச்சு. இது வரைக்கும் வீட்ல செஞ்சதே இல்ல…அதுனால இணையத்தின் உதவிய நாடினேன். ஒரு இணையதளத்துல இருக்கற சமையல் குறிப்புக்கு ஏத்த மாதிரி வீட்ல எல்லா பொருளும் இருக்காது. அதுனால ஒரு ரெண்டு மூணு தளத்த பாத்துட்டு, வீட்ல இருக்கற பொருட்களுக்கு ஏத்தா மாதிரி, கொஞ்சம் என்னோட ‘ஆக்கமுடைமையும்’ கலந்து சமைக்கறதுதான் என் இஸ்டைல் 🙂

பாத்த பல தளங்கள், ஒரு 30 நிமிஷத்துல இருந்து 2 மணி நேரத்துக்கு மசாலா பொருட்கள சேத்து, சிக்கென ஊறவைக்க சொன்னது. 8:௦௦ மணிக்கு இரவு சாப்பாடு என்னனு முடிவு பண்ணி, 9:00-9:15குள்ள சமைச்சு, 9:30 மணிக்கு சாப்பிட உக்காரனும்னா…இது மாதிரி ‘marinate’னு சொல்ல படற ஊற வைக்கற ஜோலி எல்லாம் வேலைக்கே ஆகாது.
அப்ப…பெப்பர் சிக்கன்…பெப்பரப்பனு போச்சான்னு தான கேக்க போறீங்க…அதுதான் இல்ல. அப்படியே அந்த உணவகத்துல சாப்பிட்டா மாதிரியே இருந்ததுங்க! நம்ப மாட்டேன்னு சீன் போட்டீங்கன்னா…நீங்களே செஞ்சு பாருங்க…நம்புவீங்க!!

எவ்வளவு பேர் சாப்பிடலாம்
: அது சாப்பிடறவங்களோட ‘பசி’ மற்றும் ‘சிக்கன் பிரியத்த’ பொருத்தது; சரி சரி…இதோட என் மொக்கைய நிறுத்திக்கறேன்!! 2 பேர் தாராளமா சாப்பிடலாங்க

தேவையான பொருட்கள்
:

கோழிக்கறி(chicken breast)-300 gm

வெங்காயம்(brown onion)-2, நல்லா பொடிபொடியா நறுக்கிக்குங்க

வெள்ளை பூண்டு(garlic cloves)-4 பல்(இதையும் பொடிபொடிய நறுக்கிக்குங்க; அந்த அளவுக்கு பொறுமை இல்லனா…பெருசாவே வெட்டிக்குங்க (எப்படியும் அரைக்கத்தான் போறோம்)

இஞ்சி (ginger)-ஒரு சிறு துண்டு (5cm அளவு சரியா இருக்கும்) (இத விட தெளிவா தமிழ்ல எப்படி எழுதறதுனு தெரியலங்க!!)
பெருஞ்சீரகம் – 1 Tbsp (பெருஞ்சீரகம் taste நல்லாவே பிடிக்கும்னா…1.5 ஆக்கிக்குங்க)
சீரகம் – 1 Tbsp
மஞ்சள்பொடி – 2 சிட்டிகை
மிளகு – 2 Tbsp(காரம் கொஞ்சம் தூக்கால வேணும்னா, 2.5 Tbsp சரியா இருக்கும்)
கருவேப்பிலை – 2 கொத்து (10-15 இலை இருக்கறா மாதிரி எடுத்துக்குங்க)
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
எண்ணெய் – 4-5 Tbsp (பொறிக்கவும் கூடாது…நல்லா ருசியாவும் இருக்கனும்னா, 5 Tbsp எண்ணெயானு வாய பொளக்காதீங்க!!)
உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:
–> சிக்கன கழுவிக்குங்க; சின்ன சின்னதா நறுக்கிக்குங்க (‘bite size pieces’ சொல்லுவாங்க…அது மாதிரி)
–> கொஞ்சம் மஞ்சபொடியும், உப்பும் போட்டு, வேக வைய்யுங்க
–> சிக்கன் வேகற நேரத்துல, ஒரு பொரித்தட்டுல கொஞ்சம் எண்ணெய் ஊத்திக்குங்க (1.5 Tbsp சரியா இருக்கும்)
–> நல்லா சூடான உடனே, சீரகம், பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு, கருவேப்பிலை (எடுத்து வச்சதுல பாதி), மிளகு எல்லாத்தையும் எண்ணெய்ல வதக்குங்க
–> மிளகு, கிராம்பு வெடிக்க ஆரம்பிக்கும் போது, நறுக்கி வச்ச வெங்காயத்துல பாதி, நறுக்கி வச்ச பூண்டு, இஞ்சிய சேருங்க
–> வெங்காயம் நல்லா செவப்பான உடனே, அடுப்ப நிறுத்தீடுங்க
–> சூடாறினதுக்கு அப்பறம், மின் அம்மில (mixie) ரொம்ப கம்மியா தண்ணி ஊத்தி அரைச்சுக்குங்க. ஒரு துவையல் பதத்துல இருக்கட்டும். ரொம்ப தண்ணி ஊத்தினா, அப்பறம் சிக்கனோட போட்டு கலக்கும் போது, பெப்பர் தனியா சிக்கன் தனியா சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்!
–> தேவையான உப்பு போட்டு, ஒரு சுத்து அரைய விடுங்க
–> அதே பொரித்தட்டுல, ஒரு 3.5-4 Tbsp எண்ணெய் விடுங்க. சூடான உடனே, மிச்சம் இருக்கற நறுக்கி வச்ச வெங்காயத்த சேருங்க. ஒரு சிட்டிகை மஞ்சபொடி இங்க சேத்துக்கலாம்
–> வெங்காயம் கொஞ்சம் நல்லாவே செவப்பாகட்டும் (கருகாம பாத்துக்குங்க); அப்பறம் மிச்சம் இருக்கற கருவேப்பிலைய சேருங்க
–> கருவேப்பிலை கொஞ்சம் மொருமொருப்பு வந்த உடனே, வேக வச்சு, வடிகட்டின சிக்கன் துண்டுகள பொரித்தட்டுல போடுங்க
–> ஏற்கனவே வெந்ததுனால, ரொம்ப வதக்கனும்னு அவசியமில்ல. அரைச்சு வச்ச விழுதையும் போட்டு, நல்லா சிக்கன் துண்டுகளோட சேருங்க
–> அவ்வளவுதான்!! அடுப்ப சின்னதாக்கிட்டு, ஒரு 2-3 நிமிஷம் விட்டுடுங்க. சுடசுட சூப்பர் பெப்பர் சிக்கன் தயார்!!

நாங்க அன்னிக்கி இரவு சாப்பாட்டுல குழம்புக்கு தொட்டுகிட்டோம்; ஆனா, அடுத்த மொறை, தண்ணி அடிக்கும் போது, வீட்ல சைடு டிஷ் செஞ்சா…கட்டாயம் ‘பெப்பர் சிக்கன்’ தான்னு முடிவு செஞ்சுட்டேன்!!

என் இனிய தமிழ் மக்களே!!!

முட்டைகோஸை கண்டாலே 10 அடி தூரம் தள்ளி நிற்கும் என் போன்றவர்களுக்கு, இந்த பதிவு சமர்ப்பணம்!

மத்தவங்க எஸ் ஆகணும்னு சொல்லலீங்க…ஏதோ பாரதிராஜா touch குடுக்கலாம்னு பாத்தா…

ஸ்கூல், காலேஜ், படிக்கற காலங்கள்ல, நானும் காய்கறிகளும் டிபிகல் மாமியார் மருமகள் மாதிரி. குடுமிபுடி சண்டை நடக்கும்போது கணவன்மார்கள் வந்து சண்டைய தீத்து வைக்கறா மாதிரி எனக்கு அந்த நேரங்கள்ல துணை இருந்தது, பக்கத்துல இருந்த தண்ணி சொம்புதான். அதுவும் வீட்ல carrot பொறியல் இல்ல கோஸ் பொறியல் பண்ணினாங்க….அன்னிக்கி தண்ணி ஒரு ரெண்டு மூணு சோம்பு காலி பண்ணுவேன். அந்த சமயங்கள்ல என்ன பெத்தவ பட்ட பாடு…சொல்லி மாளாது.

அப்பெல்லாம் சமையல்கட்டுக்கு நொறுக்கு தீனிய தேடி கண்டுபுடிக்க, இல்ல மூணு விசில் சத்தம் கேட்டா அடுப்ப அணைக்கவோ தான் போயிருக்கேன். அந்த ‘அம்மாவுக்கு ஒத்தாசையா இருக்கும் தருணங்கள்’ல வீட்ல கோஸ் சமைச்சிருந்தாங்க….அவ்வளவுதான். வடிகட்டின தண்ணில ‘ஊற்றெடுக்கும்’ அந்த (துர்)நாற்றம் இருக்கு பாருங்க…அப்படியே மூக்கு வழியா பயணத்த கெளப்பி, மூச்சு குழாய் bypass வழியா, சிறுகுடல், பெருங்குடல் கொண்டை ஊசி வளைவுகள(hairpin bend )தாண்டி, வயித்து கதவ தட்டி,…”மவனே பசிக்குதுனு சத்தம் போட்ட…முட்டகோஸ வச்சே சாத்துவேன். அப்பறம் ஐயோ அம்மானு கத்தினா…கேக்க யாரும் வர மாட்டாங்க”,னு ஒரு அறிக்கை விடும். இதுக்கு அப்பறம் வாயே பரவாயில்லைனாலும், அந்த நாத்தம், கோஸ் கறிக்கும், வாய்க்கும் நடுவுல நந்தி மாதிரி நிக்கும்!!!

உங்களுக்கு இந்த வெறுப்பு கொஞ்சம் ஓவராவே தோணலாம்; யதார்த்தந்தாங்க…ஏனா பட்டவன் வலி பாக்கறவனுக்கு தெரியாது பாருங்க!!!

சரி மேட்டேர்க்கு வரேன்…

கீர்த்தனாரம்பத்திலே காய்கறிகளின் பரமவிரோதியாய் இருந்த அனு….கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு ‘U ‘ turn அடித்த கதை….பெருங்கதை!!

‘சுத்தமா பிடிக்காது’ல இருந்து தாவி, ‘சுமாரா பிடிக்கும்’ கட்டத்துக்கு வந்து…இப்ப ‘சூப்பராவே பிடிக்கும்’ கட்டத்துல வந்து நிக்கறேன்.

இவ்வளவு மாறினதுக்கு அப்பறமும் அந்த கோஸின் ‘ghost’ மட்டும் என்ன விடாம தொறத்திட்டு இருந்தது 😦

நானா முட்டகோஸானு பாத்துடுவோம்னு முடிவு பண்ணினேன். சனிகிழம அரை கிலோ கோஸ் வாங்கினேன்.

ஒரு சமையல் குறிப்பு பதிவுல, cauliflower வச்சு பொறியல் குறிப்பு ஒன்னு போட்டிருந்தது. ரெண்டு மூணு தடவை வீட்ல செஞ்சு பாத்திருக்கேன். அன்னிக்கி அது பட்டுன்னு நெனவுக்கு வந்தது.

கோஸ் உள்ளே…cauliflower வெளியே!! அப்பறம் கொஞ்சம் என் ஆக்கத்திறன சேத்து இரவு சாப்பாட்டுக்கு side dish தயார்!!!

என் சமையல்கட்டுல உருவான கோஸ் பஜ்ஜி கறி குறிப்பு இனி…

Serves – 4 (இந்த கணக்கு side dishaa சாப்பிட்டா; இத மெயின் டிஷ்ஷா சாப்பிட்டுட்டு, தப்பு கணக்கு போட்டுட்டியேன்னு என்ன குத்தம் சொல்லாதீங்க!!)

தேவையான பொருட்கள்…

முட்டைகோஸ் – 300-400 gm

கடலைமாவு – 4-5 Tbsp

Ginger Garlic பேஸ்ட் – 1 Tbsp

தயிர் (Yoghurt) – 1-1.5 Tbsp

மிளகு தூள் – 1 tsp

மிளகாய் தூள் – 1 Tbsp

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் போடி – 1 tsp

எண்ணெய் – 5-6 Tbsp (‘அட கடவுளே’னு வாய பொளக்காதீங்க….எண்ணெய்ல கறாரா இருந்தா….கறியும் கறாரா கூழ் மாதிரி தான் வரும்)

செய்முறை விளக்கம்…

1 முட்டைகோஸை நீட்ட நீட்டமா (long thin strips) வெட்டிக்கோங்க. கொஞ்சம் மஞ்சள் தூள் சேத்து வேக வைங்க.

2 அது வேகர நேரத்துல, கடலை மாவு கலவைய தயார் பண்ணுங்க. எண்ணெய தவிர மத்த எல்லா பொருட்களையும் சேத்து ஒரு பசை மாதிரி செஞ்சு வச்சுக்கோங்க (தண்ணி ஊத்த தேவை இல்ல)

3 கோஸ் ரொம்ப வேக வேணாம், கொஞ்சம் வெந்த சமயத்துல அடுப்ப அணைச்சிட்டு, வடிகட்டிட்டு, கோச செஞ்சு வச்ச கடலைமாவு பசையோட சேருங்க (அந்த (துர்)நாற்றம் பத்தி ஒன்னுமே சொல்லலியேன்னு நெனைக்கறீங்க…சரிதான…காய்கறி அணில சேந்ததுக்கு அப்பறம், இந்த சின்ன ‘adjustment’ கூட பண்ணிக்கலேனா அணிதர்மத்துக்கு பங்கம் ஏற்படும் பாருங்க..!!!)

4 ஒரு 5 நிமிஷம் கழிச்சு, பொறித்தட்டு (frying pan)ல கொஞ்சம் தாராளமாவே எண்ணெய் ஊத்தி சூடாக்குங்க. சூடான ஒடனே, இந்த கோஸ் கடலைமாவு கலவைய கொஞ்சம் கொஞ்சமா சேருங்க.


5 பொறித்தட்டு ‘non-stick’ பாத்திரமா இருந்தா ரொம்ப நல்லது. தட்டுல போட்ட கலவைய ஒரு கொத்து ரொட்டி பண்ற ஸ்டைல்ல சட்டுவத்தால பிச்சுபோடுங்க (பாத்திரம் நான்-ஸ்டிக்கா இருந்ததுனா…மறந்துகூட stainless steel அகப்பைய பயன்படுத்தாதீங்க!!)

6 அடுப்ப சின்னது பண்ணிட்டு, அப்படியே ஒரு 5 நிமிஷத்துக்கு விட்டுடுங்க. அந்த நேரத்துல சாப்பாடுக்கு தேவையான கொழம்பு வகைறாக்கள தயார் பண்ணுங்க. அப்பப்ப கவனம் பொறியல் மேலயும் இருக்கட்டும்.

7 உப்பு, காரம் சரியா இருக்கானு பாத்துட்டு, தேவையான அளவு முறுமுறுப்பு வந்த ஒடனே அடுப்ப அணைச்சிடுங்க.

அன்னிக்கி கொழம்புக்கு, நீத்து அவங்களோட ‘spicytasty’ பதிவ துணைக்கு சேத்துகிட்டேன். ரெண்டு மூணு மாசம் முன்னாடி, அவங்க பதிவ பாத்து எண்ணெய் கத்திரிக்காய் பண்ணினேன். கன்னாப்பின்னானு இருந்துச்சு. முக்கியமா அந்த வேர்கடலை, எள்ளு போட்டு செஞ்ச கொழம்பு தூள் கெளப்பிச்சு.

சரி கத்திரிக்காய் இல்லேனா என்ன…கொழம்ப மட்டும் செய்வோம்னு முடிவு பண்ணினேன்.

சாதம், கொழம்பு, கோஸ் பஜ்ஜி கறி, உருளைகிழங்கு சிப்ஸ்…என் கண்ணே பட்டுடும்போல இருந்துச்சு 😉 சரி யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்னு….பதிவா இப்ப உங்க முன்னாடி!!

எனக்கு தான் தெரியல போல…சிக்கன் குர்மா, சிக்கன் குழம்பு, பெப்பர் சிக்கன், அப்பறம் பாதாமி சிக்கன், பட்டர் சிக்கன் போன்ற வடநாட்டு வகையறாக்கள்…எப்படி பாத்தாலும் ஒரு evening dinner க்கு உகந்த, simpleஆன, குழம்பு மாதிரி இல்லாத சிக்கன் டிஷ் ஒன்னுமே எனக்கு தோணல.

ஒரு weekday …அதுவும் அடுத்த நாள் வேலைக்கு போகணும். இந்த மாதிரி நேரத்துல சிக்கன் 65 எல்லாம் chanceae இல்ல.

சைவம் சமைக்கலாமானா…fridge ல அந்த சிக்கன் துண்டு, “என்ன கவனிக்கவே மாட்டியா?”னு ஒரு அழுகுரல எழுப்பிகிட்டு இருக்கு. இதுல எனக்கும் எப்பவும் செய்யற டிஷ் பண்ண mood இல்ல. சரி ஒரு வத்தல்குழம்பு வச்சு, சிக்கன் பொறியல் மாதிரி பண்ணலாம்னு தோணிச்சு.

என் அருமை கணவர் உடனே, “சிக்கன் பொறியலா …வீணா போக போதுமா; எப்பவும் பண்ற குழம்பையே வச்சுடேன்” னு சொல்ல, “உனக்கு வேற இல்லை”னு சொல்லிட்டு நான் பொறியல் பண்ண கெளம்பிட்டேன்.


சமையல்கட்டுல சுளுவா சமைக்க கெடைச்ச வரபிரசாதம், conventional oven தான். அன்னிக்கும் இந்த oven தான் சிக்கன் பொறியலுக்கு உதவிச்சு.
சிக்கன் oven ல ரோஸ்ட் ஆகும் சமயத்துல பொறியலுக்கு தேவையான மத்த பொருட்கள தயார் பண்ணினேன். அதே சமயத்துல அரிசியையும் cooker ல வச்சுட்டு, வத்தல்குழம்பை அடுப்புல கொதிக்க வச்சேன்.
இப்ப சிக்கன் பொறியல் செய் முறை விளக்கத்துக்கு வருவோம்…தமிழ்ல கொஞ்சம் திணறுவேன்…அதுனால ஆங்கிலத்துல இனி…

Serves 2
Ingredients:
Chicken breast fillet – 1 or 2 (1 was sufficient for the two of us…in fact we had some leftover that we packed for lunch the next day)
Red onion (diced) – 1
Tomato (diced) – 1
Chickpeas – 1 can (if you are a follower of my blog…you would know that I am a big fan of canned food :))
Chilli powder – 1tsp (or as desired)
Turmeric powder – 1 tsp
Mustard seeds – 1 tsp
Cumin seeds – 1.5 tsp
Ginger garlic paste – 1tbsp
Pepper powder (to marinate) – 1tsp
Coriander leaves – few sprigs
Oil – 2 tbsp
Salt to taste
Method:
1. Wash the chicken fillet and coat it with salt and pepper in a bowl. If oregano is available, also add a pinch of it. Let it stay in the fridge till the oven is preheated.
2. Preheat the oven to 200 deg Celsius and remember to set the oven in ‘Roast/Bake’ mode. The other day I had set the oven on ‘Grill’ mode and ended up having a dry piece of chicken 😦
3. Once preheated, wrap the chicken in aluminium foil and place it in an ovenproof dish. Roast the chicken for 30-35 minutes. Ensure the chicken is not tightly wrapped…once again you might end up with a dry chicken.
4. In the mean time chop the onions and tomatoes. Also drain the chickpeas and have it ready.
5. Once the chicken is roasted, let it cool down (maybe a couple of minutes) and then shred it with your fingers.
6. In a shallow fry pan, add oil and mustard seeds. When the seeds splutter, add cumin seeds. Add onions and fry it till transparent. Then add the ginger garlic paste.
7. Once the raw smell disappears, add tomatoes. When the tomatoes are cooked, add the shredded chicken and stir thoroughly.
8. Now add chilli powder and turmeric powder and give the mixture a stir again.
9. Let the fry pan stand on low heat for a couple of minutes. Finish the recipe with a can of chickpeas.
10. Stir it once again and garnish it with coriander leaves.
Rasam or kuzhambu….you have the perfect side dish. Go on…enjoy chicken in the poriyal form!!
Psst. And you guessed it right….my better half who was initially a bit sceptical, loved the new version of chicken and had a sumptuous dinner 🙂